15, 16 தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை; 15, 16 தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாற்றம் காரணமாக வடதமிழகம், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மத்திய வங்க கடலில் … Read more

‘அக்னிபாத்’ திட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

டெல்லி: மத்தியஅரசு அறிவித்துள்ள ‘அக்னிபாத்’ திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இது தொடர்பான மனுக்களை உச்சநீதி மன்ற நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் போபண்ணா  அடங்கிய அமர்வு நாளை விசாரிக்கிறது. ராணுவத்தில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் வகையில், மத்தியஅரசு அக்னிபாத் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதனப்டி 17 வயது முதல் 21 வயதுள்ள இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.  இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்ததுடன் … Read more

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஹிஜாப் தடை தீர்ப்புக்கு எதிரான வழக்கு!  விசாரணைக்கு ஏற்றது உச்சநீதி மன்றம்

டெல்லி: கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஹிஜாப் தடை தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்துள்ளதுடன், அடுத்தவாரம் விசாரிக்கப்படும் என தெரிவித்து உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சில மாணவிகள் போர்க்கொடி தூக்கியதால், அங்கு வன்முறை ஏற்பட்டது. இதனால் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து உடுப்பியை சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் சிலர், ஹிஜாப் தடையை நீக்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more

பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

சென்னை: சென்னையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கு உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னையின் புறநகர் பகுதியான  ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பெத்தேல் நகர் மேய்க்கால் புறம்போக்கு நிலம். இந்த இடத்தை ஏராளமானோர் ஆக்கிரமித்டு வீடு கட்சி வசித்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில்,  ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் தமிழகஅரசு இதில் மேல்நடவடிக்கை எடுக்காததால்,  … Read more

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம்! சென்னை உயர்நீதிமன்றத்தில் காரசாரமான விவாதம்…

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.  காரசாரமாக நடைபெற்ற விவாதத்தின்போது, காவல்துறையிடம்  பாதுகாப்பு கோரியும், அவர்கள் பாதுகாப்பு அளிக்கவில்லை என எடப்பாடி தரப்பு குற்றம் சாட்டியது. அதிமுக பொதுக்குழு நடைபெற்ற கடந்த 11ந்தேதி ஓபிஎஸ், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து, அங்கிருந்தவர்கள் அடித்து உதைத்து, அலுவலகத்துக்கு போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்றதுடன், அங்கிருந்த ஆவணங்களையும் அள்ளி சென்றார். இந்த சம்பவத்தின்போது … Read more

கேகேஎஸ்எஸ்ஆர் பெண்ணின் தலையில் அடித்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம்! நயினார் நாகேந்திரன்

நெல்லை: கேகேஎஸ்எஸ்ஆர் பெண்ணின் தலையில் அடித்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கேகேஎஸ்எஸ்ஆர் விவகாரத்தை பெரிது படுத்த வேண்டாம் என மாநில தலைவர் அண்ணா மலைக்கு எதிராக,   பாஜக சட்டமன்ற  தலைவரர்  நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன், தன்னிடம் மனு அளிக்க வந்த பெண்ணை தலையில் தட்டிய விவகாரம் … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்…

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி பயணத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் விளையாட்டு துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் வரும்  28ஆம் தேதி 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே உள்ள  மாமல்லபுரத்தில் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ள சென்னை … Read more

சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு வெளியான பிறகே, முதலாண்டு கல்லூரி மாணவர் சேர்க்கை! அமைச்சர் பொன்முடி

சென்னை; சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு வெளியான பிறகே, முதலாண்டு கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். மேலும், தமிழ் மொழியை மத்தியஅரசு வளர்ப்பதாக கூறுவதில் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்தார். நாடு முழுவதும் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தயாராகி உள்ள நிலையில், மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ இன்னும் பிளஸ்2 தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை. இதனால், மாணவர்கள் கல்லூரிகளில் சேருவது காலதாமமாகி வருகிறது. இதையடுத்து, … Read more

15 மாவட்டங்களில் 1 -5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணி தொடக்கம்!

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில், 1முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகஅரசு, ஏற்கனவே அரசு பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தது. இந்த நிலையில், முதற்கட்டமாக, 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில்  1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை … Read more

வரிகளை வாழவைத்த இசை வள்ளல்..

வரிகளை வாழவைத்த இசை வள்ளல்.. கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் தற்கொலை முடிவில் மகனை தள்ளிவிட்டு பின்னர் மாண்டுபோகலாம் என்று செயல்பட்ட தாயிடம், ‘’மொதல்ல குளத்துல நீ குதி.. ஒருவேளை என்னை தள்ளின பின்னாடி நீ குதிக்கலைன்னா?’’ – இப்படி கேட்டு உயிர்பிழைத்த சிறுவன்தான், கோடானுகோடி மக்களின் காதுகளில் இன்றைக்கும் அமிர்தமாக பாய்ந்துகொண்டு இருக்கிறார். மளையாள மண்ணில் பிறந்த அவர்தான், இன்றைக்கு தமிழர்களின் நாட்டுப்பண்ணாக திகழும், நீராரும் கடலுடுத்த நிலமடந்தை என்று தொடங்கும் பாடலுக்கு இசையமைத்து … Read more