14/07/2022: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,139 பேருக்கு கொரோனா… 38 பேர் உயிரிழப்பு…

டெல்லி:  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 20,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 38 பேர் பலியாகி உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 5.10 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேரத்திலான கொரோனா பாதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில்,  20,139 பேர் பாதித்துள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு … Read more

பாராளுமன்றத்தில் இனிமேல், இதுபோன்ற தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது! மக்களவை செயலகம் வெளியீடு…

டெல்லி: பாராளுமன்றத்தில் இனிமேல், இதுபோன்ற தரக்குறைவான கண்ணியமற்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்துள்ள மக்களவை செயலகம் , அந்த வார்த்தைகள் குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் மக்களவை விவாதத்தின்போது, பப்பு, ஃபேகு, மாமு அல்லது பந்ததார் போன்ற ‘இழிவான வார்த்தைகளை’  பயன்படுத்தக்கூடாது என்றும், உறுப்பினர்களின் கண்ணியத்தைத்தவிர, சபையின் அலங்காரத்தையும் நாம் பராமரிக்க வேண்டும் அவைத்தலைவர் கூறியதுடன், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 105(2) பிரிவின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்த முடியாத … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு ஓம்பிர்லா, வெங்கையாநாயுடு அழைப்பு…

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ந்தேதி தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் அனைத்து கட்சி தலைவர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவை தலைவர் வெங்கையாநாயுடு அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 12ம் தேதி வரை நடைபெறும் என பாராளுமன்ற செயலகம் அறிவித்து உள்ளது. இந்த தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டு உள்ளது. இதன்காரணமாக, அவையை சமூகமாக நடத்தும் வகையில், மக்களவை … Read more

தீபாவளி பண்டிகைக்கு ரூ.200 கோடிக்கு விற்பனை செய்ய ஆவின் இலக்கு நிர்ணயம்

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு ரூ.200 கோடிக்கு இனிப்புகளை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. கடந்த 2021 தீபாவளி நேரத்தில், 82 கோடி ரூபாய் அளவிற்கு இனிப்பு வகைகள், நெய் ஆகியவை விற்பனை செய்யப்பட்டன. நடப்பாண்டு அக்டோபர் 24ல் தீபாவளி பண்டிகை வருகிறது. இந்த தீபாவளி பண்டிகைக்கு, 200 கோடி ரூபாய் அளவிற்கு இனிப்புகளை விற்பனை செய்ய, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நாளை முதல் 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ்

புதுடில்லி: கொரோனா வைரசுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் நாளை முதல் இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாளை முதல் 75 நாட்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகள் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி 75 நாட்களுக்கு பூஸ்டர் டோசை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சோனியா காந்திக்கு சம்மன்: போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி: சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பிய அம்லாகக் துறையை எதிர்த்து போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 21-ஆம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு காங்கிரஸ இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்துவது என்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 … Read more

கனமழை: நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

ஊட்டி: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் 56.37 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 63.78 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 53.60 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டி… ரிஷி சுனாக் முன்னிலை…

இங்கிலாந்து பிரதமர் மற்றும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக் முன்னிலை பெற்றுள்ளார். முதல் சுற்று வாக்குப்பதிவில் அவருக்கு 88 வாக்குகள் கிடைத்து முன்னணியில் உள்ளார், இவருக்கு அடுத்தபடியாக வர்த்தக துறை அமைச்சர் பென்னி மோர்டான்ட் 67 வாக்குகளை பெற்றுள்ளார். ரிஷி சுனாக் ரிஷி சுனாக், பென்னி மோர்டான்ட், லிஸ் டிரஸ், கெமி படேனோக், டாம் துகென்தாட், சுயெல்லா பிரேவர்மேன், நாதிம் ஜஹாவி, ஜெர்மி ஹன்ட் ஆகியோர் பிரதமர் … Read more

தமிழ்நாட்டில் இன்று 2269 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 729 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2269 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 729, செங்கல்பட்டில் 378, திருவள்ளூரில் 159 மற்றும் காஞ்சிபுரத்தில் 77 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 128, திருநெல்வேலி 40, தூத்துக்குடி 53, சேலம் 64, கன்னியாகுமரி 58, திருச்சி 60, விழுப்புரம் 31, ஈரோடு 44, ராணிப்பேட்டை 38, தென்காசி 16, மதுரை 32, திருவண்ணாமலை 28, விருதுநகர் 34, கடலூர் 16, தஞ்சாவூர் 15, திருப்பூர் 22, … Read more