இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 நாட்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசம்! அனுராக் தாக்கூர்

டெல்லி: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 நாட்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மத்திய இணைஅமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்து உள்ளார். இது வரும் 15ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் ஏறி இறங்கி காணப்படும் நிலையில், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், 2டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என மத்தியஅரசு வலியுறுத்தி வருகிறது. … Read more

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு கொரோனா பாதிப்பு…

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 82 வயதாவும் மருத்துவர் ராமதாஸ் இதனை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பா.ம.க. தலைவர் ராமதாஸ் தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் தனிமை படுத்திக் கொண்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார். 1. நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.#COVID19 — Dr S RAMADOSS (@drramadoss) July … Read more

கொரோனா உதவி, நிவாரண திட்டத்துக்கு ரூ.50 கோடி, காலநிலை மாற்ற இயக்கத்திற்கு ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கியது தமிழகஅரசு

சென்னை:  தொழில் முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரண திட்டத்தை செயல்படுத்த 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், காலநிலை மாற்ற இயக்கத்திற்கு ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கியும் தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோர் பயணடையும் வகையில் தொழில் முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரணத் திட்டம் என்ற புதிய திட்டம் 50 கோடி ருபாய் நிதி … Read more

பிளஸ்2 விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்! தமிழகஅரசு

சென்னை: பிளஸ்2 பொதுத்தேர்வில் மறுகூட்டல் மற்றும், மதிப்பெண் குறைவு என சந்தேகத்தின்பேரில் விடைத்தாளின் நகர் கேட்டு விண்ணப்பித்தவர்கள், தங்களது விடைத்தாள் நகலை, நாளை இணையதளத்தில் இருந்த பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம்  தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகியது. இந்த நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் … Read more

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வர் என். ரங்கசாமியும் தமிழக முதல்வர் விரைவில் குணமடைய வாழ்த்தியிருக்கிறார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் “தாங்கள் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். … Read more

மேயர் பிரியா படத்தை வாட்ஸ்அப்பில் டிபியாக வைத்து மோசடி! காவல்துறையில் புகார்

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா  படத்தை வாட்ஸ்அப்பில் டிபியாக வைத்து நூதன முறையில் மோசடி செய்துவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து காவல்துறையில் மேயர் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி மேயராக இருப்பவர் பிரியா ராஜன். இவர் சென்னை நகரின் வளர்ச்சிக்கான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதுதொடர்பாக அவ்வப்போது ஆய்வுகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா படத்தை வாட்ஸ்அப்பில் டிபியாக வைத்து நூதன மோசடி செய்து … Read more

குறுக்கு வழி அரசியலில் இருந்து தள்ளி நிற்கவேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்தை விமர்சிக்கும் கார்ட்டூன் – ஆடியோ

பிரதமர் மோடி பேசிய குறுக்கு வழி அரசியலில் இருந்து தள்ளி நிற்கவேண்டும் என்ற கருத்தை கார்ட்டூன் விமர்சித்துள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/07/pari-Audio-2022-07-13-at-5.17.41-PM.ogg

மாலத்தீவு மக்கள் எதிர்ப்பு காரணமாக சிங்கப்பூர் செல்கிறார் கோத்தபய ராஜபக்சே?

மாலி: இலங்கையில் இருந்து தப்பி வந்து, மாலத்தீவில் அடைக்கலம் புகுந்துள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நிலையில், அவர்  இன்று பிற்பகல் அல்லது இரவு சிங்கப்பூர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்திவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். இதனால், அங்கிருந்து … Read more

ஜனாதிபதி தேர்தல்: பாஜ வேட்பாளர் முர்முவுக்கு தெலுங்கு தேசம், சிவசேனா ஆதரவு…

திருமலை: ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான முர்முவுக்கு தெலுங்கு தேசம், சிவசேனா கட்சிகள் திடீரென ஆதரவு தெரிவித்து உள்ளன. இதனால், முர்முவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் தேர்தல் வரும் 18ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பாஜக வேட்பாளர் முர்முவும், எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவும் மாநில கட்சிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், சிவசேனா … Read more

கோத்தபய ராஜபக்சேவை திருப்பி அனுப்பு! மாலத்தீவில் மக்கள் போராட்டம்

மாலி: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அவரை  திருப்பி அனுப்ப வலியுறுத்தி  மாலத்தீவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாலத்தீவு ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் மாலதீவு மக்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, ராஜபக்சேக்கள் குடும்பம் பதவி விலக வலியுறுத்தி, கடந்த சில மாதங்களாகவே மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  போராட்டம் காரணமாக, இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே  … Read more