அஇஅதிமுக பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை…

அஇஅதிமுக-வில் உள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் 250 செயற்குழு உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலசில் நாளை காலை 9 மணிக்கு நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் இன்றே சென்னை வர துவங்கி உள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியை … Read more

இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் உள்ள உக்ரைன் தூதர்களை பதவி நீக்கம் செய்தார் ஜெலன்ஸ்கி

இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளில் உள்ள உக்ரைன் தூதர்களை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அதிபர் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இந்தியா, ஜெர்மனி, செக் குடியரசு, நார்வே, பங்களாதேஷ், நேபாள், மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள தூதர்களை பணிநீக்கம் செய்துள்ளார் ஜெலன்ஸ்கி. இவர்களுக்கான மாற்று பணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘வெந்து தணிந்தது காடு’ தமிழ்நாட்டில் திரையிடும் உரிமையை வாங்கியது ரெட் ஜெயண்ட் மூவீஸ்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது கவுதம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெந்து தணிந்தது காடு படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இத்னானி நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் … Read more

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துக்கு ‘பிங்க்’ நிறம்…

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துக்கு பிங்க் நிறம் அடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இதனால் 62 பயன்பெறும் மகளிரின் எண்ணிக்கை சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள நகர பஸ்களை, பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், ‘பிங்க்’ நிறம் பூச முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள மூன்று பஸ்களுக்கு இளஞ்சிவப்பு நிறம் பூசும் பணிகள் நடைபெற்று … Read more

அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 14-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அந்த … Read more

கொழும்பு : கட்டுக்குள் கொண்டுவந்தது ராணுவம்… விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைத்த 3 பேர் கைது… அதிபருடனான டீலிங்கில் 13 ம் தேதி பதவி விலக சம்மதம்

நேற்றிரவு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு சொந்தமான வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Video- Scenes from the Prime Minister’s private residence which was set on fire last night. #LkA #SriLanka #SriLankaCrisis pic.twitter.com/KpIVyBVDJq — Sri Lanka Tweet 🇱🇰 💉 (@SriLankaTweet) July 10, 2022 இலங்கையில் நேற்று நடைபெற்ற மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அதிபர் ராஜபக்சே தலைமறைவானார், பிரதமர் பதவியில் … Read more

பக்ரீத் திருநாளையொட்டி ராகுல் காந்தி வாழ்த்து

புதுடெல்லி: பக்ரீத் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதவில், ரமலான்! ஈத் அல்அதாவின் புனிதமான சந்தர்ப்பம் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தவும், அனைவருக்கும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.

10/07/2022: இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா… கடந்த 24மணி நேரத்தில் 42 பேர் உயிரிழப்பு…

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் கடந்த 24மணி நேரத்தில் 42 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், இந்தியாவில் கொரோனாவால் மேலும் 18,257 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், 42 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து மேலும் 14,553 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், கொரோனாவுக்கு 1.28 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி 57 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: தெற்கு பாகிஸ்தானின் பாலூசிஸ்தான் மாகாணத்தில் கனமழை பெருவெள்ளத்தில் 8 அணைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில் 57 பேர் உயிரிழந்தனர். விடிய விடிய பெய்த மழையால் குடியிருப்பு கூரைகள் இடிந்து விழுந்து பலர் படுகாயம் அடைந்தனர். கனமழை பெருவெள்ளத்தில் அணைகளின் மதகுகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ள நீரில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அடித்துச் செல்லப்பட்டதில் 57 பேர் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.

திருவள்ளுவர் உருவப்படத்தில் நெல் விதைத்த தஞ்சாவூர் விவசாயி

தஞ்சாவூர்: தஞ்சாவூரை சேர்ந்த விவசாயி திருவள்ளுவர் உருவப்படத்தில் நெல் விதைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தஞ்சாவூர் மலையப்பநல்லூரைச் சேர்ந்த விவசாயி இளங்கோவன். இவர் தமிழ்க் கவிஞர் திருவள்ளுவர் உருவப்படத்தில் நெல் விதித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், நான் பல வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன் என்றும், இயற்கை விவசாயம் பற்றி திருவள்ளுவர் எழுதியிருப்பதால் 2 வகையான நெல் ரகங்களை கொண்டு இதை செய்தேன் என்றும் கூறியுள்ளார்.