பக்ரீத் திருநாளையொட்டி முதல்வர், கவர்னர் வாழ்த்து

சென்னை: பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அமைதியான, வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு, நமது இளம் தலைமுறையினருக்கு நற்சிந்தனை, கருணை, பெருந்தன்மை ஆகியவற்றை வழங்குவதற்கு இந்நன்னாளில் உறுதி கொள்வோம். இந்த தியாகத் திருநாளானது நம் அனைவருக்கும் அன்பின் வலிமையையும், நல்லிணக்கத்தையும், உடல்நலன், மகிழ்ச்சியையும், நமது பெரும் முயற்சிகளில் வெற்றியையும் அளிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று தமிழகம் முழுவதும் 31வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடைபெறும் என அறிவித்து உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில், இதில் 2-ம் தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் … Read more

ஜூலை-10: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 50-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 50-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோவில்

ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோவில், வேலூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள திருமலைக்கொடி என்கிற ஸ்ரீபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. முன்னலாம் வேலூர்ன்னதும் கோட்டையும், வெயிலும்தான் நினைவுக்கு வரும். ஆனா, இப்ப பஞ்சாப்பில் சீக்கியர்களுக்கான பொற்கோவில் இருக்குறது மாதிரி இந்துகளுக்கு தமிழகத்தில் ஒரு பொற்கோவில் இருக்கு. கோவிலின் சுத்தம், நீர் மேலாண்மை, குப்பைக்கழிகளின் மறுசுழற்சி, கழிவுநீரை சுத்திகரித்து அதனை விவசாயத்துக்கு பயன்படுத்துதல், குறைந்த செலவில் மருத்துவம்ன்னு சில விசயங்கள் பிடிக்கும். இக்கோவிலில் பிடிக்காத விசயம் கோவிலை வியாபார … Read more

ஷின்சோ அபே கொலை தொடர்பாக விசாரிக்க 90 பேர் அடங்கிய பணிக்குழு…

ஜப்பான் முன்னாள் அதிபர் ஷின்சோ அபே கொலை தொடர்பாக விசாரிக்க 90 பேர் அடங்கிய பணிக்குழுவை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. 1945 இரண்டாம் உலக போருக்குப் பின் ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்ற இளம் தலைவர் என்ற பெருமையை பெற்றவர் மட்டுமன்றி ஜப்பானில் நீண்டகால பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையும் பெற்றவர் ஷின்சோ அபே. நான்கு முறை பிரதமராக பொறுப்பேற்றுள்ள அபே 2006 ம் ஆண்டு முதல் முறையாக பதவியேற்ற போது அவருக்கு வயது 52. இளம் … Read more

5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இருந்து பெட்ரோல் காணாமல் போகும்! நிதின்கட்கரி

டெல்லி: 5ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இருந்து பெட்ரோல் காணாமல் போகும், பெட்ரோல் பயன்பாடு இருக்காது  என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் அகோலாவில் உள்ள டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிரிஷி வித்யா பீடம்  என்ற வேளாண் பல்கலைகழகம் சார்பில் மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர்  நிதின் கட்கரிக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. விழாவில்  கலந்துகொண்ட நிதின் கட்கரி சிறப்புரை ஆற்றினார். அப்போது, ​​பச்சை ஹைட்ரஜன், எத்தோனல் மற்றும் … Read more

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைப்பு… தொடரும் போராட்டம்…

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைப்பு சம்பவம் நடந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக இலங்கையில் சாமானிய மக்கள் பெரிதும் பாதித்துள்ளனர் பொருளாதார சரிவு காரணமாக பெருகி வரும் வேலையின்மை மற்றும் இனவெறியுடன் கூடிய மதவெறி காரணமாக அரசுக்கு எதிராக பல மாதங்களாக மக்கள் வீதியில் இறங்கி போராடி வந்தனர். இதன் உச்சகட்டமாக மக்கள் புரட்சியை தாக்குப்பிடிக்க முடியாமல் அதிபர் கோத்தபய ராஜபக்சே … Read more

சீனர்களுக்கு விசா வழங்கிய விவகாரம்: ப.சிதம்பரம் சென்னை வீட்டில் சிபிஐ மீண்டும் சோதனை…

சென்னை: சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் சென்னை  வீட்டில் இன்று  சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகிறார்கள் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்தபோது மத்திய நிதிஅமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் இருந்தார். அப்போது, அவரது செல்வாக்கை பயன்படுத்தி, அவரது மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பல குற்றசாட்டுகள் உள்ளன. அதுதொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த … Read more

தமிழ்நாட்டில் இன்று 2671 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 844 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று – மற்றும் நேற்றைய பாதிப்பு அடைப்பு குறிக்குள் சென்னையில் 844 (939), செங்கல்பட்டில் 465 (474), திருவள்ளூரில் 161 (191) மற்றும் காஞ்சிபுரத்தில் 80 (87) பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 118 (131), திருநெல்வேலி 112 (87), தூத்துக்குடி 84 (57), சேலம் 61 (36), கன்னியாகுமரி 60 (52), திருச்சி 58 (73), விழுப்புரம் 48 (30), … Read more

தமிழ்நாடு முழுவதும் நாளை ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்!

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாளை (10ந்தேதி)  தமிழகம் முழுவதும் 31வது  கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்  ஒரு லட்சம் இடங்களில்  நடைபெறும் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. இந்த முகாமில், இதில் 2-ம் தவணை, பூஸ்டர்  தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக நாட்டு மக்களை துன்புறுத்தி வந்த கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக குறைந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. … Read more