10ஆண்டு காலமாக தொடர்ந்த பள்ளிகளில் வேலை வாய்ப்புப் பதிவு செய்யும் நடைமுறைக்கு மூடுவிழா நடத்தியது தமிழகஅரசு…

சென்னை: கடந்த 10ஆண்டு காலமாக தொடர்ந்த, பள்ளிகளில்  மாணாக்கர்களின் வேலைவாய்ப்பு பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்வதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இது மாணாக்கர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேல்நிலைப் பள்ளி முடித்தவர்கள், உயர்கல்விக்காக கல்லூரிக்கு செல்லும் நிலையில், அவர்கள் அரசு வேலைவாய்ப்புக்கு, அரசு வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்வதற்கு, குறிப்பிட்ட மாவட்ட அலுவலகங்களுக்கு சென்று அலைவதை தடுக்கும் வகையில் கடந்த 2011ம் ஆண்டு அதிமுக அரசு 10ம் வகுப்பு, பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணவ, … Read more

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு ரத்து!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சாந்தினி வழக்கை வாபஸ் பெற்றதால், மணிகண்டன் மீதான வழக்கை  சென்னை  உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், முதன்முதலாக அதிமுக அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியின்போது தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன். இவர் நடிகை சாந்தினி என்பவரை  திருமணம் செய்துகொள்வதாக கூறி  ஏமாற்றியதாகவும், … Read more

இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் நீச்சல்குளம், சமையலறையில் அதகளம்! 3 வீடியோக்கள்…

கொழும்பு: இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அவருடைய உடமைகளை சூறையாடி உள்ளனர் அங்கு உள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் அதிபர் மாளிகையின் சமையலறைக்குள் புகுந்து அங்குள்ள உணவுப்பொருட்களை எடுத்து சமைத்து மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ள இலங்கையின் பொருளாதாரம் மிக அபாயகரமான கட்டத்தை நோக்கி சென்றுள்ளது.அந்நியச் செலாவணி கையிருப்பு மோசமாக குறைந்துவிட்டதால், வெளிநாடுகளின் உதவியைத்தான் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசு ஏராளமான … Read more

ஒரு வாரத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட189 பேர் கைது – 9 பேருக்கு குண்டாஸ்! சங்கர் ஜிவால்…

சென்னை: சென்னை மாநகர பகுதிகளில், குற்றச்செயல்களில் ஈடுபட்ட 189பேரை கடந்த ஒருவாரத்தில் கைது செய்த சென்னை காவல்துறை யினர், அதில் 9 பேரை  குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார். சென்னையில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்க காவல்ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்,  தொடர் வழிப்பறி, கொள்ளை, நில அபகரிப்பு, மணல், உணவு பொருட்கள் … Read more

பாஜக நிர்வாகி சவுதா மணி கைது!

சென்னை: தமிழக பாஜகவை சேர்ந்த சவுதாமணி, போலியான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக,  தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக கட்சியை சேர்ந்த சவுதாமணி அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கைது செய்யப்பட்டு உள்ளார். சமூக வலைதளத்தில் மதக்கலவரத்தை தூண்டுதல்,  பொதுஅமைதிக்கு குத்தகம் விளைவிப்பது ஆகிய செயல்களுக்காக, அவர்மீது  2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர், அவரை இன்று கைது செய்தனர். முன்னதாக அவர் உயர்நீதிமன்றத்தில் … Read more

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 13ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 13ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத் தெரிவித்து உள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது, நாளை முதல் 13ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது. சென்னையை பொறுத்தவரை … Read more

கோவை கே.சி.பி நிறுவனத்தில் 4-வது நாளாக தொடரும் சோதனை…

கோவை: முன்னாள் எஸ்.பி.வேலுமணியின் நண்பருக்கு சொந்தமான, கோவை  கே.சி.பி நிறுவனத்தில் 4-வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உள்பட 6இடங்களிலும் கடந்த 6ந்தேதி வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்பு காவல்துறை இணைந்து சோதனை நடைபெற்றது. கோவை வடவள்ளியை சேர்ந்த என்ஜினீயர் சந்திரசேகர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார்.  இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் … Read more

காமராஜர் பிறந்த நாளையொட்டி ஜூலை 15ந்தேதி ‘காமராஜர் ஆட்சி முறை’ என்ற தலைப்பில் கருத்தரங்கு! கே.எஸ்.அழகிரி

சென்னை:  காமராஜர் பிறந்த நாளையொட்டி ஜூலை 15ந்தேதி ‘காமராஜர் ஆட்சி முறை’ என்ற தலைப்பில் மாவட்டங்களில் கருத்தரங்கு நடை பெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். ஜனவரி 15ந்தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு காமராஜரின் பிறந்தநாளை தமிழகஅரசு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறது.  நடப்பாண்டு காமராஜரின் 120 பிறந்தநாள் ஆகும். இதையொட்டி,  அனைத்து மாவட்டங்களிலும் வரும் 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாள் கருத்தரங்கு நடைபெறும் என்று … Read more

நாளை மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு விட்டதால், வாரந்தோறும் நடந்து வந்த மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டது. வழக்கமான மையங்களில் மட்டும், தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. கொரோனா பரவல் அதிகரித்ததால் மீண்டும் மெகா தடுப்பூசி முகாமை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, 31வது மெகா தடுப்பூசி முகாம், ஒரு லட்சம் இடங்களில் நாளை நடைபெற உள்ளது.

பேருந்தின் படிக்கட்டு உடைந்த சம்பவத்தில், 2 பேர் சஸ்பெண்ட்

திருவாரூர்: திருவாரூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் அரசுப் பேருந்தின் படிக்கட்டு உடைந்த சம்பவத்தில், 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.   திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் வரையிலான நகர பஸ் ஒன்று நேற்று முன்தினம் திருவாரூரில் இருந்து நாகூர் சென்று விட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் வந்து கொண்டிருந்தது. அப்போது கங்களாஞ்சேரி ரெயில்வே கேட் அருகே வேகத்தடையில் பஸ் சக்கரம் ஏறி இறங்கிய போது முன்பக்க படிக்கட்டு உடைந்தது. படிக்கட்டில் பயணம் … Read more