இசைஞானி இளையராஜா ராஜ்ய சபா உறுப்பினராக நியமனம்…

இசைஞானி இளையராஜா மற்றும் தடகள வீராங்கனை பி.டி. உஷா இருவரும் ராஜ்ய சபா உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். The creative genius of @ilaiyaraaja Ji has enthralled people across generations. His works beautifully reflect many emotions. What is equally inspiring is his life journey- he rose from a humble background and achieved so much. Glad that he has been nominated to … Read more

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி … அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட 29 பேர் ஒட்டுமொத்த ராஜினாமா…

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் 29 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை போரிஸ் ஜான்சன் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. முக்கிய இலாக்கா அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளதால் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யக்கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ராஜினாமா குறித்து இன்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று … Read more

தமிழ்நாட்டில் இன்று 2743 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 1062 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1062, செங்கல்பட்டில் 403, திருவள்ளூரில் 169 மற்றும் காஞ்சிபுரத்தில் 94 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 127, திருச்சி 113, திருநெல்வேலி 71, கன்னியாகுமரி 68, தூத்துக்குடி 62, விருதுநகர் 50, சேலம் 43, ராணிப்பேட்டை 42, மதுரை 35, திருவண்ணாமலை 34, திருப்பூர் 30, ஈரோடு 27, விழுப்புரம் 26, சிவகங்கை 24, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல்லில் … Read more

லீனா மணிமேகலையின் ‘காளி’ போஸ்டர் ட்விட்டரில் இருந்து நீக்கம்

இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கியுள்ள ஆவணப்படம் ‘காளி’. இந்தப் படத்தின் போஸ்டர் கனடாவின் டொரோண்டோ நகரில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் ஜூலை 2 ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் சிகரெட் புகைத்தபடி காளி தனது மற்றொரு கையில் எல்ஜிபிடி எனும் ஓரின மற்றும் பாலின வரைமுறைக்கு அப்பாற்பட்ட இன சேர்க்கையாளர்களின் கொடியை பிடித்துக் கொண்டிருப்பது போன்று இருந்தது. இதனால் அவருக்கு சமூக வலைதளத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்ததோடு அவரை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. … Read more

உக்ரைனை சின்னாப்பின்னப்படுத்தி வரும் ரஷ்யா டொனெட்ஸ்க் நகரை நோக்கி முன்னேறுகிறது…

டொனெட்ஸ்க்: உக்ரைனை சின்னாப்பின்னப்படுத்தி வரும் ரஷ்யா படைகள், தற்போது முக்கிய நகரான டொனெட்ஸ்க் நகரை நோக்கி முன்னேறி வருகிறது. அதனால், பொதுமக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தொடங்கிய தாக்குதல் தற்போது வரை நீடித்து வருகிறது. தாக்குதல் 4 மாதத்தை தாண்டியுள்ளது. இந்தப் போரில் இரு நாடுகளின் தரப்பிலும் அதிக அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது . உக்ரைன் மீது ரஷியா நடத்தி … Read more

கோவிட்-19 பூஸ்டர் டோஸ் இடைவெளி ஆறு மாதங்களாக குறைப்பு! ராஜேஷ் பூஷன்

டெல்லி: கோவிட்-19 பூஸ்டர் டோஸ் இடைவெளி ஆறு மாதங்களாக குறைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பரவல் ஏறி இறங்கி காணப்படுகிறது. இது கொரோனாவின் 4வது அலை என கூறப்படுகிறது. இருந்தாலும் தற்போது உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது. இதிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முக்கவசம், சமூக இடைவெளி உள்பட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற … Read more

எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீட்டில் வருமானவரிதுறையினர் 3வது முறையாக இன்று சோதனை

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பரும், பொறியாளருமான சந்திரசேகரன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரிதுறையினர் இன்று 3வது முறையாக சோதனை மேற்கொண்டுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் செயலாளராக இருக்கிறார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் தீவிர ஆதரவாளர். வேலுமணியின் பினாமி என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இவரது வீடு கோவையில் … Read more

சென்னையில் மழை நீர் வடிகால் பணியை முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்! மாநகராட்சி அதிரடி

சென்னை: சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.25ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.2.25 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் அடுத்த மழைக்காலம் தொடங்குவதற்குள் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் சென்னையில், மழைநீர் தேங்காதவாறு அனைத்து நடவடிக்கை களையும் எடுக்க வல்லுநர் குழு அமைத்து, தமிழகஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, மூலதன … Read more

நுபுர் சர்மா விவகாரம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் லட்சுமணன் கோட்டை தாண்டிவிட்டனர் என தலைமை நீதிபதிக்கு 117 பேர் கடிதம்  கருத்து

டெல்லி: நூபுர் சர்மா வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிய கருத்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், நீதிபதிகள் லட்சுமணன் கோட்டை தாண்டிவிட்டனர் என்று முன்னாள் நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் என 117 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், இது, மிகப்பெரிய ஜனநாயகத்தின் நீதி அமைப்பில் அழியாத வடுவை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இஸ்லாம் குறித்து விமர்சித்த பாஜக பிரமுகர், நுபுர் சர்மாமீதான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் … Read more

மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  தொழில் நிறுவனங்களுடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் டைசல் நிறுவனத்திற்கும் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது.  இந்த 5 புத்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் கையெழுத்திடப்பட்டது. தொடர்ந்து, 48 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (6.7.2022) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், … Read more