44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 3வது அணியை அறிவித்தது இந்தியா

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 3வது அணியை இந்தியா அறிவித்தது. இந்தியா சார்பில் மொத்தம் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில் தமிழக வீரர்கள் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இரு அணிகளில் ஒரு பெண் உட்பட 5 தமிழக வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்தியா சி அணியில் தமிழகத்தை சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி முன்னேற்பாடுகளை தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் 18 துறை செயலாளர்கள் ஆய்வு … Read more

மகாராஷ்டிரா: சபாநாயகராக பாஜக-வின் ராகுல் நர்வேகர் தேர்வு

மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக பாஜக-வைச் சேர்ந்த ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்காக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடியது. இதற்காக தாஜ் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மொத்தமாக சட்டமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். துணை சபாநாயகர் நர்ஹரி அவையை நடத்தினார். பா.ஜ.க சார்பில் முதன்முறையாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் நர்வேகர் சபாநாயகர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்திருந்தார். சிவசேனா கூட்டணி தரப்பில் … Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 5 நாட்களுக்கு நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை -வைத்திலிங்கம்

சென்னை: பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அதிமுகவில் பெரும் பரபரப்பான பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இடையிலேயே கிளம்பிவிட்டார். மேலும் அதிமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழ் பத்திரிக்கையில் அவரின் பெயரும் நீக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிமுக தொண்டர்கள் இரு பிரிவுகளாக பிரிந்துள்ளனர். இதன் மத்தியில் அடுத்ததாக பொதுக்குழு கூட்டம் இந்த மாதம் 11-ம் தேதி நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு ஓபிஎஸ் … Read more

3 மாதங்களில் , 100 மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சென்னை: மூன்றே மாதங்களில் , 100 மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இந்தாண்டுன் முதல் மூன்று மாதங்களில், 97 மின் வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்து உள்ளதாக மின்வாரிய வெளியிட்டுள்ள தகவலில் தெரிய வந்துள்ளது. மின்சாரம் தாக்கியவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (டாங்கேட்கோ) தொழிலாளர்கள் என்று தெரிய வந்துள்ளது. இது குறித்து டாங்கேட்கோ அமைப்பு செயலாளர் ஆர் முரளிகிருஷ்ணன் கூறுகையில், மாநிலம் … Read more

ஈபிஎஸ் உடன் ராகுல் காந்தி பேசவில்லை: காங்கிரஸ் விளக்கம்

புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமி உடன் தொலைபேசியில் ராகுல் காந்தி பேசியதாக வெளியான தகவல் குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதனால் ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என முடிவெடுத்து சமீபத்தில் பொதுக்குழுவை கூட்ட திட்டமிட்டு இருந்தார். ஆனால் பொதுக்குழுவில் ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர்ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் புதிதாக எந்த தனி தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது என்று … Read more

நாமக்கல்லில் இன்று உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நாமக்கல்லில் இன்று உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் நாமக்கல்லில் இன்று உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

விபத்தில் சிக்கியவருக்கு உதவிய ராகுல் காந்தி

மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில், விபத்தில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டியை, ராகுல் காந்தி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வண்டூரில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, விருந்தினர் மாளிகைக்கு சென்றார். வட புரத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று விபத்து ஏற்பட்டிருந்த‌து. உடனடியாக தனது வாகனத்தை நிறுத்திய ராகுல் காந்தி, விபத்தில் சிக்கிய நபரை மீட்டு, தன்னுடன் வந்த ஆம்புலன்சில் ஏற்றி நிலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

காசிமேட்டில் களைகட்டிய மீன் விற்பனை

சென்னை: வார விடுமுறை நாளான இன்று சென்னை, காசிமேட்டில் மீன் விற்பனை களைகட்டியுள்ளது. சென்னை, காசிமேட்டில் மீன்வரத்து அதிகரிப்பால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. வவ்வால், வஞ்சிரம் உள்ளிட்ட மீன்கள் கிலோ ரூ.100 முதல் ரூ.200 அளவிற்கு கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது. சங்கரா, கொடுவா, பாறை போன்ற மீன்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை அதிகமாக விற்பனையாகிறது. கடந்த வாரத்தை விட இன்று மீன்கள் விலை உயர்வடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்ட்ரா சட்டமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

மும்பை: நம்பிக்கை வாக்கெடுப்புக்காக மகாராஷ்ட்ர சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதையடுத்து. தமது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கோவாவில் இருந்து மும்பைக்குத் திரும்பினார். தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏக்கள், சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் சுயேட்சைகளுடன் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய ஷிண்டே தமக்கு மொத்தம் 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனிடையே உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏக்கள் அனைவரும் கட்டாயம் சட்டமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கட்சி கொறடா உத்தரவு … Read more