ஹனிமூன் முடிந்து ஷூட்டிங்-கிற்கு கிளம்பிய நயன்தாரா… பவுன்சர்கள் அத்துமீறல்…

அண்மையில் மாமல்லபுரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் விமர்சையாக நடைபெற்றது. நயன்தாரா – விக்கி திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ அதிகம் வெளிவராத நிலையில் அவை நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு பலகோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர்கள் இருவரும் தாய்லாந்துக்கு தேனிலவு சென்ற புகைப்படங்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர். தற்போது தேனிலவு முடிந்து நயன்தாரா ஷூட்டிங்-கிற்கு கிளம்பியுள்ளதாக தெரிகிறது. திருமணத்துக்குப் பின் முதல் முறையாக மும்பையில் ஷாருக்கானுடன் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்தார். … Read more

மதவெறியர்கள் ஒவ்வொரு முறையும் ஆயுதங்கள் மூலம் கொலையோடு பேசுகிறார்கள்….

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு நபிகள் நாயகம் தொடர்பாக டீவி விவாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொன்னார் பாஜகவின் செய்தி தொடர்பாளரான நூபூர் ஷர்மா.. உள்நாடு முதல் அரபு நாடுகள் வரை பெரிய அளவில் பிரச்சனை வெடித்தது. இப்போது நூபூர் ஷர்மா கருத்துக்கு ஆதரவாக முகநூலில் பதிவு போட்ட டெய்லர் ஒருவரை ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பட்டப்பகலில் தலையை துண்டித்து படுகொலை செய்திருக்கின்றனர் இரண்டு இஸ்லாம் மத வெறியர்கள். பிரதமருக்கு எதிராக கொலை மிரட்டலும் … Read more

மூன்றாம் பாலினத்தவர்கள் எம்பிசி வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்! உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

சென்னை: மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும்,  அரசு வேலைகளில் 3-ம் பாலினத்த வர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என  சென்னை உயர்நீதிமன்றத்தில்  தமிழகஅரசு விளக்கமளித்து, அதற்கான  அரசாணைகளை தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம். அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மூன்றாம் பாலினத்தவர் அமைப்பைச் சேர்ந்த பி சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில்,  மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உச்ச … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம்: உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நத்தம் விஸ்வநாதன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான  உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நத்தம் விஸ்வநாதன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்துள்ளர். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தற்போது முன்னாள் அமைச்சரும், எடப்பாடி ஆதரவாளருமான நத்தம் விஸ்வநாதனும் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த ஜூன் 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்  சென்னையில் நடைபெற்றது. முன்னதாக அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் தீவிரமடைந்ததால், அதை ஏற்க மறுத்த ஓபிஎஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தனக்கு சாதகமான … Read more

வேலூரில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

வேலூா்: பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் ரூ.53.13 கோடி மதிப்பீட்டில் வேலூா் புதிய பேருந்து நிலையம் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர், அங்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.  பொலிவுறு நகா் திட்டத்தின் … Read more

உலகளவில் 55.05 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 50.05 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 6.72 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், கொரோனா பாதிப்பால் 1,214 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 52.61 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதய்பூர் படுகொலைக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்

புதுடெல்லி: உதய்பூர் படுகொலைக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், “உதய்பூரின் கொடூரச் சம்பத்தால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். மதத்தின் பெயரால் வன்முறையை ஏற்க முடியாது. இதுபோன்ற கொடூரங்களில் ஈடுபடுவோர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அனைவரும் ஒன்றாக இணைந்து வெறுப்புணர்வை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடிகை மீனா கணவர் உயிரிழக்க காரணம் என்ன ? குஷ்பு உருக்கமான பதிவு…

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்றிரவு மரணமடைந்தார். இவரது உடல் இன்று பிற்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை மீனா. 2009 ம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். தெறி உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றியுள்ளார் நைனிகா. திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து … Read more

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் இன்று சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பேருந்தின் மொத்தப் பயணிகளில் 62.34% பேர் பெண்கள்

சென்னை: தமிழக அரசுப் பேருந்தின் மொத்தப் பயணிகளில் 62.34% பேர் பெண்கள் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி நிலவரப்படி, கட்டணமில்லா பயணம் செய்தவர்களில், 131 கோடியே 31 லட்சம் பேர் பெண்கள் என்றும், 7.48 லட்சம் பேர் திருநங்கைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 37.41 லட்சம் பெண்கள் பயணம் செய்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.