காந்திமதிக்கு ரூ.12ஆயிரம் மதிப்புள்ள செருப்புகள்! பக்தர்கள் காணிக்கை!

நெல்லை: நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு ரூ.12ஆயிரம் மதிப்பில் செருப்புகளை பக்தர்கள் காணிக்கையாக கொடுத்துள்ளனர். தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் (Nellaiappar Temple). இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என விளங்குகிறது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயமும் ஒன்று. இது தாமிர அம்பலமாக கருதப்படுகிறது. இத்திருக்கோவிலில் வளர்க்கப்படும் காந்திமதி … Read more

நூபுர் ஷர்மா விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்களை திரும்பப் பெற மனு தலைமைநீதிபதியிடம் மனு…

டெல்லி: நபிகள் நாயகம் தொடர்பாக கருத்து தெரிவித்த, நுபுர் ஷர்மா மீதான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நீதிபதிகளின்  எதிர்மறையான கருத்துகளை திரும்பப் பெற வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. நூபுர் ஷர்மா தொடர்பான வழக்கை விசாரித்த, உச்சநீதிமன்ற நீதிபதிகள், சூர்யாகாந்த் மற்றும் ஜேபி பார்திவாலா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால சட்ட அமர்வு கடுமையாக விமர்சனம் செய்தது. இந்த … Read more

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது…

டெல்லி: அக்னிபாதை திட்டத்தின் கீழ் ஏற்கனவே கடற்படையில் சேர ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நிலையில், ஜூலை 1ந்தேதி முதல் ராணுவம் மற்றும் கடற்படையில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் அக்னிபாதை திட்டத்தின் கீழ், 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி முதல்கட்டமாக விமானப்படையில் சேர கடந்த மாதம் (ஜுன்) 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை 5ந்தேதியுடன் முடிவடைந்தது. அக்னிபாத் திட்டத்தின் … Read more

குடியரசு தலைவர் வேட்பாளர் முர்மு புதுச்சேரி முதல்வர் மற்றும் பாஜக, அதிமுகவினரிடம் ஆதரவு திரட்டினார்…

புதுச்சேரி: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு, இன்று புதுச்சேரி முதல்வர் என்.ஆர்.ரங்கசாமி மற்றும் பாஜக. அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பா.ஜனதா கூட்டணி கட்சிகள் சார்பில், தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளராக, திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, காங்கிரஸ், … Read more

இணையதளங்களில் வைரலாகும் 48ஆண்டுகளுக்கு முந்தைய பில்கேட்ஸ் பயோடேட்டா…

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்சின் 48 ஆண்டுகளுக்கு முந்தைய தனது பயோடேட்டா இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போதைய இயந்திர உலகில், ஒவ்வொருவரும் தங்களுக்கான ஒரு வேலையை தேர்ந்தெடுக்க, தங்களுடைய சுயவிவரக் குறிப்பு (BioData – Resume) அவசியமாகிறது. அதில், தங்களுடைய திறன்களை “பளிச்’சென்று தனியே தெரியும்படி சுட்டிக்காட்டுவதுடன், தங்களுக்கான பணி உறுதிக்கு தூண்டுகோலாவும் ஒருவருடைய பயோடேட்டா பயன்படுகிறது. இதுவே வேலை தேடுபவர் குறித்து, குறிப்பிட்ட நிர்வாகத்துக்கு  அறிமுகத்தை வழங்குகிறது. … Read more

அனைத்து ஊராட்சிகளும் விரைவில் இணையங்கள் மூலம் இணைக்கப்படும்! அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி: அனைத்து ஊராட்சிகளும் விரைவில் இணையங்கள் மூலம் இணைக்கப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை  அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். அதுபோல கன்னியாகுமரியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பயிற்சி மையம் அமைக்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில், துறைசார்பாக ஆய்வு செய்த அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார். அப்போது அம்மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் உடனிருந்தனர். இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், நகரங்களுக்கு இணையாக … Read more

2019ம் ஆண்டு சிவசேனாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க மறுத்தது ஏன்? உத்தவ்தாக்கரே கேள்வி

மும்பை: மும்பையில் மீண்டும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ, பாஜக ஆதரவுடன் முதல்வராகி உள்ள நிலையில், கடந்த 2019ம் ஆண்டு மட்டும் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி வழங்க பாஜக மறுத்தது ஏன் என  பாரதிய ஜனதா தலைமைக்கு முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான  உத்தவ்தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். முன்னாள் முதல்வரான பாஜகவை சேர்ந்த தேவேந்திர … Read more

உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினம்: பெசன்ட் நகர் கடற்கரையில் பின்னோக்கி ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பின்னோக்கி ஓடும் ஓட்டம் நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு ஓடிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  தமிழ்நாட்டில்  பிளாஸ்டிக்கை ஒழிக்க முதலமைச்சர் எடுத்துள்ள மிகப்பெரிய முயற்சி தான் மீண்டும் மஞ்சப்பை திட்டம் என்று கூறினார். இன்று பெசன்ட் நகர் கடற்கரையில் International Plastic bag free day யை முன்னிட்டு “REVERSE RUN” துவக்கி வைக்கப்பட்டது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, பொதுமக்களுடன் பினோக்கி ஓடி … Read more

02/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 17,092 பேருக்கு கொரோனா பாதிப்பு, 29 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,092 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவல் ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் முக்கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை கடைபிடிக்கவும், தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கொரோனா நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில், நேற்று மட்டும்  புதிதாக மேலும், 17,092 … Read more

ஈரானில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 5 பேர் பலி

ரியாத்: ஈரான் உள்பட வளைகுடா நாடுகளில் இன்று அதிகாலை  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமான ஈரானில் 5.7 முதல் 6.0 ரிக்டர் அளவுகோலில் இருந்தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சக்தி வாய்ந்த இந்த நடுக்கதால் 5 பேர் பலியாகி உள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர்  காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஈரான்  நாட்டின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான பந்தர் அப்பாஸின் தென்மேற்கில் 100 கிலோமீட்டர் (60 மைல்) தொலைவில் இன்று அதிகாலை   சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. … Read more