130 ஆண்டுகளில் தமிழகத்தில் முதல் முறையாக மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சென்னை கடந்த 130 ஆண்டுகளில் முதல்முறையாக மார்ச் மாதத்தில் தமிழகத்தை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்போது தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதனால் எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், … Read more

உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களை மீட்கத் தமிழக அரசு குழு அமைப்பு

சென்னை உக்ரைனில் சிக்கி உள்ள தமிழக மாணவர்களை மீட்கத் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது.  உக்ரைனில் ஏராளமான இந்திய மாணவர்கள் குறிப்பாக தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புக்காகச் சென்றுள்ளனர்.  அவர்கள் அனைவரும் தற்போது அபாயத்தில் உள்ளனர்.   அவர்களை மீட்க மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது ரஷ்ய ராணுவ தாக்குதலால் உக்ரைனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தரைமட்டமாகி உள்ளன.  எனவே விமானப் போக்குவரத்து அடியோடு … Read more

சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் விவரம்…

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் விவரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னையில் நாளை (04-02-2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி … Read more

சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் ராமச்சந்திரனுக்கு திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் வாழ்த்து…

சேலம்: சேலம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள  ராமச்சந்திரனுக்கு  சேலம் மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் சேலம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் வாழ்த்து தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பாக மேயர், துணைமேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் பதவிக்கு போட்டியிடும் உறுப்பினர்களை அறிவித்து வருகின்றனர். அதன்படி, திமுக சார்பில் 20 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும், 15 துணை மேர் பதவிகள் உள்பட 1201 பதவிகளுக்கு … Read more

உள்ளாட்சியிலும் மலர்ந்தது திமுக ஆட்சி: 20 மேயர், 15துணைமேயர், 126 நகராட்சிதலைவர் உள்பட 1201 தலைமை பதவிகளுக்கு திமுக போட்டி….

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சிகளில் 20 மேயர், 15துணைமேயர், 126 நகராட்சிதலைவர் உள்பட 1201 தலைமை பதவிகளுக்கு திமுக போட்டியிடுகிறது. உள்ளாட்சி யிலும் திமுக பெரும் வெற்றி பெற்றுள்ளதால், உள்ளாட்சியிலும் திமுக ஆட்சி மலர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்  நடைபெற்று முடிந்தது. அதன்படி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சி கள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,602 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று, 22ந்தேதி எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 21 மாநகராட்சிகளில் … Read more

ஒரு மேயர், 2 துணைமேயர், 6நகராட்சி தலைவர் உள்பட 37 பதவிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுக…

சென்னை: மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர்  போன்ற பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது குறித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர், 2 துணைமேயர், 6நகராட்சி தலைவர் உள்பட 37 பதவிகளை திமுக தலைமை ஒதுக்கி அறிவித்துள்ளது. 21 மாநகராட்சிகளில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 20 மாநகராட்சி மேயர்பதவிகளும் திமுகவை வைத்துள்ளது. கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியும், சேலம், காஞ்சிபுரம் … Read more

மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதமாற்றம் காரணமல்ல! தேசிய குழந்தைகள் நல ஆணையம் தகவல்…

டெல்லி: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம் காரணம் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் அவர் தங்கியிருந்த மைக்கேல்பட்டி கிறிஸ்தவ பள்ளியின் விடுதி பதிவுபெறாமல் நடத்தப்பட்டு வந்துள்ளது, அதை மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-டூ படித்து வந்த மாணவி லாவண்யா கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை … Read more

இன்று காலை உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

லக்னோ இன்று காலை உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.  இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது..  இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன.   இன்று ஆறாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.   இதற்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை … Read more

ஷாருக் கான் நடிக்கும் பதான் அறிவிப்பு வெளியானது

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் ஹீரோவாக நடித்து 2018 ம் ஆண்டு வெளியான ஜீரோ திரைப்படத்திற்குப் பின் வேறு எந்த படமும் வெளியாகவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த ஷாருக் கான் நீண்ட இடைவெளிக்குப் பின் பதான் என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக இன்று அறிவிப்பு வெளியிட்டார். தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. I know it’s late… But … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களின் நிலை கேள்விகுறி… பிணைக்கைதிகளாக இருப்பதாக ரஷ்யா உக்ரைன் பரஸ்பரம் குற்றச்சாட்டு

உக்ரைனில் படித்து வந்த சுமார் 20,000 இந்தியர்களில் இதுவரை சுமார் 3,000 பேர் மட்டுமே தாயகம் திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ளவர்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது. கார்கிவ், சுமி ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பிணைக்கைதிகளாக உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. Ukraine Foreign Affairs Ministry “urgently calls on govt of India, Pakistan, China &other counties … Read more