ஹிஜாப் விவகாரத்தில் உலக நாடுகள் தலையீடு தேவையற்றது! இந்தியா பதிலடி…

டெல்லி:  கர்நாடக மாநிலத்தில் எழுந்துள்ள ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, பாகிஸ்தான்  உள்பட வெளிநாடுகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை பதிலடி கொடுத்துள்ளது.  எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் உங்களின் தலையீடு தேவையற்றது என கறாராக தெரிவித்துள்ளது. பள்ளி கல்லூரிகளில் மாணாக்கர்களிடையே சாதி மத வேறுபாடு எழக்கூடாது என்ற வகையில் சீருடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை ஒரு தரப்பினர் ஏற்க மறுத்தது சர்ச்சையானது. கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு  அரசு கல்லூரியில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து … Read more

தமிழ்ப் பெண்ணை கரம் பிடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மாக்ஸ்வெல்… இணையத்தில் வைரலான பத்திரிக்கை…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மாக்ஸ்வெல் தமிழ் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்த வினி ராமனை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். 2020 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருமணம் தள்ளிப் போனது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இவர்களது திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டுவந்த நிலையில், தமிழில் அச்சடிக்கப்பட்ட இவர்களது திருமண அழைப்பிதழ் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. … Read more

திமுக – பாஜக – திமுக: மீண்டும் திமுகவுக்கு தாவினார் ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம்…

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம். மீண்டும் திமுகவுக்கு தாவினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் கடந்த 2020ம் ஆண்டு, திடீரென டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்தது சர்ச்சையானது. இதையடுத்து, அவரிடம் கட்சி தலைமை விளக்கம் கேட்டது. இதற்கு பதில் அளித்த கு.க.செல்வம், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திப்பது தவறா என்று கேள்வியும் எழுப்பினார். தைரியம் இருந்தால் தன் மீது தி.மு.க தலைமை நடவடிக்கை … Read more

வேட்பாளர் மரணம்: மயிலாடுதுறையின் 19-வது வார்டில் தேர்தல் ஒத்திவைப்பு..!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையின் 19-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்த நிலையில், அந்த வார்டுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19.02.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில்,  மயிலாடுதுறை நகராட்சி வார்டு 19-ல் போட்டியிட்ட அன்னதாச்சி என்ற வேட்பாளர் மாரடைப்பால் … Read more

12/02/2022: தமிழ்நாட்டில் இன்று மேலும் 2,812 பேருக்கு கொரோனா பாதிப்பு, 17 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 2,812 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  சிகிச்சை பலனின்றி  17 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக பட்சமாக சென்னையில் 546பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7.45 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று 1,05,822 மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 6,31,92,873 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 2,812 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு  34,33,966 … Read more

பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் காலமானார்…

மும்பை: பிரபல தொழிலதிபர் ராகுல்பஜாஜ் காலமானார். அவருக்கு வயது 83. அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். அவரதுமறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சியினர், தொழில்அதிபர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் பஜாஜ்  குழுமமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் ராகுல் பஜாஜ். இவருக்கு கடந்த 2001ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கி … Read more

உத்தரகாண்டில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வரும் – பிரியங்கா காந்தி

உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வரும் என்று பிரியங்கா காந்தி நம்பிக்கை தெரிவித்தார். உத்தரகாண்டி ஸ்வாபிமான்’ பேரணியில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா பேசுகையில், உத்தரகாண்டில் பாஜக ஆட்சிக்கு மக்கள் சோர்ந்துபோயிருப்பதால் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வரும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் என்ன செய்யப் போகிறார் என்பதை முதல்வர் மக்களுக்குச் சொல்ல வேண்டும் எம்ரி லே;வோ எ;இ[ஔஅ அவர், பெண்களுக்கு என்ன செய்யப் போகிறார்? என்று கேள்வி எழுப்பினர். “பிரதமர் நரேந்திரனின் … Read more

ஐபிஎல் ஏலம் 2022: டுபிளெசிஸ்-ஐ தூக்கியது ராயல் சேலஞ்சர்ஸ், டேவிட் வார்னர்ரை ஏலம் எடுத்த டெல்லி கேப்பிட்டல்…

பெங்களூரு: ஐ.பி.எல். 2022) கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில்  காலை 11மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த மெகா ஏலத்தில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஐபிஎல் ஏலப்பட்டியல் 590 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. இதில், 370 இந்திய வீரர்களும், 270 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.  வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி, ரூ.1½ கோடி, ரூ.1 கோடி, 75 லட்சம், 50 லட்சம், 40 லட்சம், … Read more

IPL Auction 2022: ரூ.5 கோடிக்கு அஸ்வினை தூக்கியது ராஜஸ்தான், 8.25 கோடிக்கு விலைபோனார் தவான்…

பெங்களூரு: ஐ.பி.எல். 2022) கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில்  காலை 11மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த மெகா ஏலத்தில் 10 அணிகள் பங்கேற்கின்றன. முதல்கட்டமாக தமிழ்நாட்டு வீரர் அஸ்வினை ரூ.5 கோடிக்கு  ராஜஸ்தான் அணி வாங்கியது. அதிக பட்சமாக ஷிகன் தவான்,  8.25 கோடிக்கு பஞ்சாபஸ் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. ஏலப்பட்டியல் 590 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. இதில், 370 இந்திய வீரர்களும், 270 வெளிநாட்டு … Read more

12/02/2022: இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா – கடந்த 24மணி நேரத்தில் 50,407 பேர் பாதிப்பு 804 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் மேலும் 50,407 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன்,  804 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, காலை 8 மணி வரையிலான கடந்த 24மணி நேரத்தில்,  50,407 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 7,600 குறைவு. நேற்று 58,077 ஆக இருந்த நிலையில் இன்று 50,407 ஆக குறைந்துள்ளது.  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,25,86,544 ஆக உள்ளது. கடந்த … Read more