ஐபிஎல் ஏலம் 2022: டுபிளெசிஸ்-ஐ தூக்கியது ராயல் சேலஞ்சர்ஸ், டேவிட் வார்னர்ரை ஏலம் எடுத்த டெல்லி கேப்பிட்டல்…

பெங்களூரு: ஐ.பி.எல். 2022) கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில்  காலை 11மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த மெகா ஏலத்தில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

ஐபிஎல் ஏலப்பட்டியல் 590 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. இதில், 370 இந்திய வீரர்களும், 270 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.  வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி, ரூ.1½ கோடி, ரூ.1 கோடி, 75 லட்சம், 50 லட்சம், 40 லட்சம், 30 லட்சம், 20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு 46 வீரர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.

முதல்கட்டமாக தமிழ்நாட்டு வீரர் அஸ்வினை ரூ.5 கோடிக்கு  ராஜஸ்தான் அணி வாங்கியது. அதிக பட்சமாக ஷிகன் தவான்,  8.25 கோடிக்கு பஞ்சாபஸ் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. மேலும் பல வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய வீரர் முகமது ஷமி குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ. 6.25 கோடிக்கு வாங்கப்பட்டார்.

 இந்திய வீரர் மணீஷ் பாண்டே ரூ4.60 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார்.

தென்னாப்பிரிக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ்  ரூ. 7 கோடிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். கடந்த ஆண்டு  (2021) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டுபிளெசிஸ் சிஎஸ்கே அணிக்கு ஆடியது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ரூ. 6.25 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியால்  தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக், ₹6.75 கோடிக்கு  ஏலம் எடுக்கப்பட்டார்.

IPL Auction 2022: ரூ.5 கோடிக்கு அஸ்வினை தூக்கியது ராஜஸ்தான், ரூ. 8.25 கோடிக்கு விலைபோனார் தவான்…

ஐபிஎல் 2022: அணிகள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரம்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.