அபாய கட்டத்தை கடந்து பாய்ந்தோடும் யமுனை நதி… வீடுகளுக்குள் வெள்ளம் – பொதுமக்கள் வெளியேற்றம்…
டெல்லி: யமுனை நதி தனது அபாய கட்டத்தை கடந்து பாய்ந்தோடுகிறது. இதன் காரணமாக கரையோர வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில், பொதுமக்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் பெய்த கனமழைக்குப் பிறகு யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியதால், டெல்லி-என்சிஆரில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக டெல்லி-குருகிராம் எல்லையில், நீர்மட்டம் உயர்ந்து வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more