ஊழல் திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழகத்திலும் இமாச்சலை போல அரசு ஊழியர்களுக்கு ஊதியம் குறையும்! அன்புமணி

சென்னை: ஊழல் திமுக ஆட்சி தொடந்தால் தமிழகத்திலும்  இமாச்சல பிரதேசத்தை போல, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் குறையும் என பாமக தலைவர் அன்புமணி  கூறி உள்ளார். நிதி சிக்கலில் சிக்கி தள்ளாடும் இமாச்சல பிரதேசத்தில் ஊதியக் குறைப்பு அமல்படுத்தப்படும் நிலையில், நிதிசிக்கலில் சிக்கியுள்ள  தமிழகத்திலும்  திமுக ஆட்சி தொடர்ந்தால் அரசு ஊழியர்களுக்கு  அதே நிலை ஏற்படும் என  அன்புமணி  விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில், 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் ரூ. 9.55 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது: இந்தியா டுடே … Read more

கட்சியில் பதவி கொடுக்கப்படுமா? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சரத்குமார் …

சென்னை: பாஜகவில் கட்சிப் பதவியின்றி தொடா்ந்து அரசியலில் பயணிக்க முடியாது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் சரத்குமார் இன்று காலை கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசினார். தமிழ்நாடு அரசியல்  களம் தகிக்கத்தொடங்கி உள்ளது.  கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில்,  சாதிய அமைப்பு களை பிடிப்பதிலும்  அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில், தனது கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த  நடிகர் சரத்குமாருக்கு இதுவரை எந்தவொரு … Read more

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை இடம்? இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் பிரேமலதா…

சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை இடம்   பெறுவது மற்றும் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் உள்படபல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்க  இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா. பணத்துக்காக உடல்நிலை சரியில்லாத கணவனை பொம்மையாக உட்கார வைத்து அரசியல் செய்தவர் பிரேமலதா விஜயகாந்த். இவரது அரசியல் நகர்வுகளே  பண பேரம் என்றே விமர்சிக்கப்படுகிறது.  கேப்டன் விஜயகாந்த் மறைந்து, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிகழ்விலேயே அரசியல் செய்தவர். இந்த முறை  அதிமுக கூட்டணியில் … Read more

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்! தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி:  புதுச்சேரயில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்  என்றி நலையில், தவெக வேட்பாளர் பட்டியல் நள்ளிரவில் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியின் பிரதேசத்தில் மார்ச் 9ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான 30 வேட்பாளர்களின் பட்டியலை தவெக தலைவர் விஜய் நள்ளிரவில்  விஜய் அறிவித்துள்ளார். இதன் காரணமாக அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, வரும் ஏப்ரல் 9ம் தேதியே புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் … Read more

கார்க் தீவு எந்த நேரத்திலும் அழிக்கப்படலாம்! வெள்ளை மாளிகை எச்சரிக்கை

வாஷிங்டன்:   ” ஈரானின் ‘மகுட ஆபரணத்தை’ அழிப்பதற்கு அமெரிக்கா ‘முழு தயார் நிலையில்’ உள்ளது; ‘கார்க் தீவு’ எந்த நேரத்திலும் அழிக்கப்படலாம் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்தகாலத் தாக்குதல்களின்போது எரிசக்தி உள்கட்டமைப்புகளைத் தாக்குவதைத் திட்டமிட்டே தவிர்த்திருந்த போதிலும், ஈரானின் கார்க் தீவில் அமைந்துள்ள எண்ணெய் குழாய்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  எச்சரித்தார். 1960-களில் இருந்து கார்க் ஈரான் நாட்டின் எரிசக்தி ஏற்றுமதியின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. … Read more

ஹோர்முஸ் பாதுகாப்பு முதல் போர்நிறுத்தம் வரை… மோடி – ஈரான் அதிபர் பேசியது என்ன ?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரானிய அதிபர் பெஸ்ஸெக்கியனுடன் தொலைபேசியில் பேசினார். ஈரானிய அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு ரம்ஜான் மற்றும் நவ்ரூஸ் (பாரசீக புத்தாண்டு) பண்டிகைகளுக்காக வாழ்த்து தெரிவித்ததோடு, ஈரானியர்களுக்கு அமைதியும் நிம்மதியும் நிறைந்த ஆண்டாக அமையவும் வாழ்த்தினார். மேற்கு ஆசியாவில் பதற்றம் மற்றும் மோதல்கள் அதிகரிப்பது குறித்து இந்திய மக்களின் ஆழ்ந்த கவலையையும் மோடி வெளிப்படுத்தினார். வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான எந்தவொரு தாக்குதலையும் ஒரு கடுமையான அச்சுறுத்தலாகவும், உலகின் அனைத்துப் … Read more

அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் – இன்று தமிழ்நாடு வருகை தருகிறார் பியூஸ் கோயல்…

‘சென்னை:  தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக – பாஜக  மற்றும் கூட்டணிகட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம்  இன்று மாலை கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையொட்டி, தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்   இன்று தமிழ்நாடு வருகை தருகிறார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  அதிமுக – பாஜக கூட்டணியில், பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து கடந்தசில நாட்களாக பேசசுவார்த்தை … Read more

பயணிகள் கவனத்துக்கு.. நந்தனம் மெட்ரோ ரயில் நுழைவாயில் நிரந்தரமாக மூடல்..

சென்னை: சென்னை நந்தனம்  மெட்ரோ ரயில் நுழைவாயில் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளைச் சுலபமாக்குவதற்கு, நந்தனம் மெட்ரோ நிலையத்தில் உள்ள தற்போதைய B4 நுழைவாயிலை மூடுவது அவசியமாகும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நந்தனம் மெட்ரோ நிலையத்தில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் காரணமாக, நந்தனம் மெட்ரோ நிலையத்தின் B4 நுழைவுவாயில் (BSNL அலுவலகம் நோக்கி செல்லும் … Read more

ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் போர் எதிரொலி: இந்தியாவிலும் உயர்ந்தது பெட்ரோல் விலை….

டெல்லி: ஈரான் அமெரிக்காஇஸ்ரேல் போர்  காரணமாக உலக நாடுகளிடையே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்நதுள்ள நிலையில்,  இந்தியாவிலும்  பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டும், வணிக எரிவாயு சப்ளை நிறுத்தப்பட்டும் உள்ள நிலையில், இன்று நாடு முழுவதும் பிரிமியல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை 100.83 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 102.18 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. … Read more

தொகுதி பங்கீட்டில் அதிருப்தி: திமுக கூட்டணியில் இருந்து தவாக எஸ்கேப்…..!

சென்னை: தொகுதி பங்கீட்டில் அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாக,   திமுக கூட்டணியில் தவாக வெளியேறி உள்ளது. இது திமுக கூட்டணி கட்சி தலைவர்களிடையே  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக தலைமையிலான  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்,  இருந்து தவகா தலைவர், வேல்முருகன்  வெளியேறி உள்ளார். தமிழக அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும்  வேளையில், ஆளும் திமுக கூட்டணியில் இருந்து முக்கிய கட்சி ஒன்று விலகியுள்ளது. இது திமுகவுக்கு  ஒரு பலத்த அடி விழுந்துள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், … Read more