நாங்கள் ஆச்சரிய குறிகள் – விஜய்! “எந்த `குறி’-யாக இருந்தாலும் கவலையில்லை – அமைச்சர் ரகுபதி

சென்னை: நாங்கள்  தற்குறிகள் அல்ல ஆச்சரிய குறிகள்  என திமுகவுக்கு பதிலடியாக கடுமையாக விமர்சனம் செய்த தவெக தலைவர்  விஜய்க்க திமுக அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். அப்போது,   “எந்த `குறி’-யாக இருந்தாலும் எங்களுக்கு  கவலையில்லை என தெரிவித்தார். முன்னதாக,    காஞ்சிபுரம் அருகே நேற்று காலை நடந்த தவெகவின்  மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசினார்.  காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் … Read more

பச்சைத் துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பச்சைத் துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார். நீர்நிலைகள் நிறைந்து உழவர்கள் கடும் உழைப்பை செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது கொள்முதல் நிலையம் நிறைந்து காத்திருத்தோம். ஆனால் அதிகப்படியான மழைபொழிவால் நெல்மணிகள் ஈரமாயின என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். சாகுபடிக் காலத்துக்கு முன்னதாகவே என் அறுவடை செய்யவில்லை என அதிமேதாவித்தன அரசியல் எடப்பாடி செய்தார். பச்சைத் துண்டு போட்டு பச்சைத் … Read more

லைகா நிறுவனம் மீதான நடிகர் விஷால் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை…

சென்னை: லைகா நிறுவனம் மீதான நடிகர் விஷால் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்துள்ளனர். ரூ.10 கோடி டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டு உள்ளது. லைகா நிறுவனத்திற்கு விஷால் ரூ.21.29 கோடியை 30 % வட்டியுடன் தர வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு   இடைக்கால தடை விதித்தும், ரூ.10 கோடியை டெபாசிட் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னதாக, நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்காக சினிமா … Read more

தூத்துக்குடியில் அடை மழை – சேலத்தில் சாரல் மழை… பொதுமக்கள் அவதி

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.  பல மாவட்டங்களில் பரவலாக விட்டு விட்டு  மழை பெய்து வரும் நிலையில்,  சேலத்தில் தொடரும் சாரல் மழை காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதியடைந்து உள்ளனர். . தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய … Read more

மத்திய அரசின் தொழிலாளர் சட்ட விதிகளுக்கு எதிராக நவம்பர் 26ம் தேதி நாடு தழுவிய போராட்டம்… புதிய தொழிலாளர் சட்ட விதிகளில் என்ன உள்ளன?

2020-ல் நிறைவேற்றப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்களை நவம்பர் 21-ஆம் தேதி முதல் அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில், பழைய தொழிலாளர் சட்டங்களுக்கு பதிலாக தொழிலாளர் ஊதியச் சட்ட விதி 2019, தொழில்துறை தொடர்புகள் சட்ட விதி 2020, சமூகப் பாதுகாப்புச் சட்ட விதி 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்ட விதி 2020 ஆகிய நான்கு புதிய தொழிலாளர் சட்ட விதிகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்கள் … Read more

ரூ. 5000 கோடி செலுத்த முன்வந்ததால் தப்பியோடிய கோடீஸ்வரர்கள் நிதின்–சேதன் சந்தேசரா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல்

$1.6 பில்லியன் (ரூ. 14275 கோடி) வங்கி மோசடியில் தொடர்புடைய சகோதரர்களான நிதின் மற்றும் சேதன் சந்தேசரா, தங்களின் நிலுவைத் தொகையின் மூன்றில் ஒரு பங்கு $570 மில்லியன் (ரூ. 5085 கோடி) செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்குப் பதிலாக, அவர்களுக்கு எதிரான அனைத்து குற்றவியல் வழக்குகளையும் ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்துள்ளது. அல்பேனியா பாஸ்போர்ட் மூலம் 2017ம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பியோடிய சகோதரர்களான நிதின்–சேதன் சந்தேசரா ஆகியோர் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து … Read more

96 % SIR படிவங்கள் விநியோகம் – 50% எஸ்ஐஆர் படிவங்கள் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டன! அர்ச்சனா பட்நாயக்

சென்னை:  தமிழ்நாட்டில் இதுவரை 96 சதவீதம் அளவுக்கு SIR படிவங்கள் விநியோகம்  செய்யப்பட்டு உள்ளதாகவும்,  50% எஸ்ஐஆர் படிவங்கள் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டன என கூறிய தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், நாட்டிலேயே அதிக அளவில் பிஎல்ஓக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டில்,  இதுவரை வழங்கப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களில் 50 சதவீதம் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டன  என தெரிவித்துள்ள  தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள்  தொடர்பாக  இந்திய … Read more

நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த மறுத்த மத்தியஅரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம்…

சென்னை: நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த மறுத்த மத்தியஅரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர். நெல் கொள்முதல் ஈரப்பத அளவை மத்திய அரசு அதிகரிக்காததைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் திருவாரூரில் இன்று (நவ. 24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதன்பேரில் ஒன்றிய அரசு அதிகாரிகள் … Read more

உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் சூர்யா காந்த்….

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி  சூர்யா காந்த்  பதவி ஏற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  முன்னதாக அவர் இந்திய தலைமை நீதிபதியாக அக்டோபர் 30-ம் தேதி நியமிக்கப்பட்டார். முன்னதாக, இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர். காவாய்  நவம்பர் 23 அன்று ஓய்வுபெற்ற நிலையில், நாட்டின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த்  இன்று பதவி ஏற்றார். இவர் சுமார்  … Read more

சென்னைக்கு புல்லட் ரயில்: தமிழக அரசிடம் திட்ட அறிக்கை சமர்பித்தது மத்திய தெற்கு ரயில்வே

சென்னை: சென்னைக்கு புல்லட் ரயில்  அமைப்பது தொடர்பாக, தமிழக அரசிடம் மத்திய தெற்கு ரயில்வே திட்ட அறிக்கை சமர்பித்துள்ளது. சென்னை ஹைதராபாத் இடையே 780 கி.மீ. தொலைவிற்கு புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் திட்ட அறிக்கையை மத்திய தெற்கு ரயில்வேதமிழ்நாடு அரசிடம் சமர்பித்தது. புல்லட்  ரயில் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் 12 மணி நேர பயணம் 2.30 மணி நேரம் வரை குறையும் என்று கூறப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  2026- — … Read more