கூலி படத்துக்கு யு/ஏ சான்று கிடையாது! மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்…

சென்னை: ரஜினி நடித்துள்ள கூலி படத்துக்கு யு/ஏ சான்று கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம்,  தள்ளுபடி செய்தது. ‘கூலி’ படத்துக்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில்,  ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரி, படத்தை தயாரித்த நிறுவனம் சார்பில்   சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவை  தள்ளுபடி செய்தது. இதுதொடர்பாக,  எம்.ஜோதிபாசு என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனத்தின் சாா்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கூலி’ திரைப்படம் … Read more

‘ஆபாச நடத்தை’ தொடர்பான புகார்களை அடுத்து பெண்களை ‘பின்தொடர்ந்து துன்புறுத்தியதாக’ கேரள எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் மீது சமூக ஊடகங்கள் மூலம் பெண்களைப் பின்தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், இதனால் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எழுத்தாளர் ஹனி பாஸ்கரன், மலையாள நடிகரும் முன்னாள் பத்திரிகையாளருமான ரினி ஆன் ஜார்ஜ் உள்ளிட்ட பல பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இளைஞர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மம்கூத்ததில் ராஜினாமா செய்தார். பின்னர், ஆகஸ்ட் 25 ஆம் … Read more

நாளை புறப்படுகிறார்: பிரதமர் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா பயணம்….

பெய்ஜிங் :  பிரதமர் மோடி 4 நாட்கள் பயணமாக நாளை (ஆகஸ்டு 29) வெளிநாடு பயணமாகிறார்.  அவரது இந்திய பயணம், ஜப்பான்  மற்றும் சீனாவுக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. சீனாவின் தியன்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்கிறார். பிரதமர் மோடி 8வது முறையாக தற்போது மீண்டும்  ஜப்பான் செல்வது அவரது சீனாவின் தியன்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி  மாநாடு ஆகஸ்டு ம் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரு … Read more

சென்னையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு 24மணி நேர பாதுகாப்பு – சனி, ஞாயிறுகளில் கடலில் கரைப்பு…

சென்னை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ள நிலையில், சென்னையின் பொதுஇடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு 24மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன் இந்த சிலைகள் சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் நீர்நிலைக்களில் கரைக்கப்படும் என காவல்துறை அறிவித்து உள்ளது. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், மாநிலம் முழுதும், 35,000 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.  இந்த  சிலைகள் பாதுகாப்பு … Read more

இன்று சென்னையின் 10வார்டுகளில் நடைபெற்று வருகிறது ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்’!

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்  இன்று  10 வார்டுகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்   இன்று  (28.08.2025) மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-22ல் தேவராஜன் தெருவில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெறுகிறது. மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-29ல் இராமலிங்க காலனி சி பிளாக் பிரதான சாலை, வாழைத்தோப்பு அருகிலுள்ள நியாய விலைக்கடை பகுதியில் நடைபெறுகிறது. இராயபுரம் மண்டலம் … Read more

திமுகவின் நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்த “விடியல் எங்கே” என்ற ஆவணத் தொகுப்பை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்… முழு விவரம்

சென்னை:  திமுகவின் நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்த “விடியல் எங்கே” என்ற ஆவணத் தொகுப்பை  பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வெளியாகி உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளில், நான்கரை ஆண்டுகள் ஆகியும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளின் “விடியல் எங்கே” என்ற ஆவணத் தொகுப்பை  வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, தமிழ்நாடு அரசு திட்டங்களுக்கான   நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது என்று தெரிவித்து உள்ளதுடன், இந்திய அளவில்,  தமிழ்நாடு கல்வியில் 20-ஆம் இடம், … Read more

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை  உருவாகி உள்ளது. இதன் கேரளாவுக்கு நல்ல மழையும் தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காற்றழுத்த  தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா கடற்கரைக்கு அருகே, வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் … Read more

தொடரும் கனமழை: ஜம்மு-காஷ்மீர் நிலச்சரிவு, பாலம் இடிந்து விழுந்தது – கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30ஆக உயர்வு… வீடியோ

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தாவி பகுதியில் பாலம் இடித்து விழுந்தது. கனமழை காரணமா எற்பட்ட  நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான  வீடியோ வைரலாகி வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையான பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது. மாநிலத்தின் … Read more

செப்டம்பர் 7-ந்தேதி சந்திர கிரகணம் – சென்னை மக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம்! திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை மூடல்…

திருமலை: செப்டம்பர்  7-ந்தேதி முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. அன்றைய தினம் கிரகணம் சென்னையில் முழுமையாக தெரியும், பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம் என  அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை யொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை மூடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. செப்டம்பர்  7-ந்தேதி மாலை 3 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை சுமார் 12 மணி நேரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் என்பது, சூரியன், பூமி, … Read more

தவெக மதுரை மாநாட்டில் விஜய் ரசிகர் பவுன்சர்களால் தூக்கி எறியப்பட்ட கொடூர சம்பவம்! காவல்துறையில் புகார்…

மதுரை: மதுரையில் நடிகர் விஜய் நடத்திய தவெக மாநாட்டில் அவரை பார்க்க சென்ற ரசிகர் பவுன்சர்களால் தூக்கி எறியப்பட்ட கொடூர சம்பவம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், தூக்கிய எறியப்பட்டதால் காயமடைந்த அந்த ரசிகர் தனது தாயாருடன் சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ம் தேதி  பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில்தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த … Read more