வருமான வரித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம்.. திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட 10 பேர் கைது..!

கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட10 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் வீட்டில் கடந்த 26-ம் தேதி சோதனைக்காக வந்த அதிகாரிகளிடம் அங்கு திரண்டிருந்த திமுகவினர் அடையாள அட்டை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வந்த காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் திமுக … Read more

தரையிறங்கும் போது திடீரென வெடித்த விமானத்தின் சக்கரங்கள்.. எகிப்து ஏர் விமானத்தில் பரபரப்பு..!

சவூதி அரேபியாவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த எகிப்து ஏர் விமானத்தின் சக்கரங்கள் தரையிறக்கும்போது அதன் சக்கரங்கள் திடீரென வெடித்ததால் பரபரப்பு நிலவியது. ஆயினும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு விமானத்தில் இருந்த பயணிகள் உயிர்தப்பினர். கெய்ரோவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சவூதியின் கடற்கரை நகரான ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அசீஸ் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் தரையிறங்கியது. Source link

தந்தையை கொலை செய்த பெண் ஒரு வருடத்திற்கு பின்அடித்துக் கொலை..!

ராமநாதபுரம் அருகே தந்தையை கொலை செய்த பெண் ஒரு வருடத்திற்கு பின்அடித்துக் கொலை செய்யப்பட்டார். காவனூர் ஆசாரிமடத்தைச் சேர்ந்த பவித்ரா என்பவர் திருமணம் மீறிய உறவில் இருப்பதை தந்தை கண்டித்ததால் தாயுடன் இணைந்து கடந்த ஆண்டு பெட்ரோல் ஊற்றி அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைதான தாயும், மகளும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ள நிலையில் பவித்ராவுக்கு கொத்தனார் ஒருவருடன்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த ரவியின் தம்பி மகன் டிரைவர் மணி … Read more

சீனாவிடமிருந்து இந்தியா மிகவும் சிக்கலான சவாலை சந்தித்து வருகிறது – அமைச்சர் ஜெய்சங்கர்!

சீனாவிடமிருந்து இந்தியா மிகவும் சிக்கலான சவாலை சந்தித்து வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இருநாட்டு நல்லுறவு என்பது சமநிலையில் ஏற்பட வேண்டும் என்றும் அடுத்த நாட்டின் விருப்பம் போல அமைய முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அனந்த் தேசிய பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய ஜெய்சங்கர், கடந்த மூன்று ஆண்டுகளாக சீனாவுடனான எல்லைப் பிரச்சினை வெளிப்படையாக உள்ளது என்றார்.எல்லையில் அமைதி குறைந்தால் இருநாடுகளின் நல்லுறவு நீடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். எல்லையில் முந்தைய … Read more

பல்கலை பட்டமளிப்பு விழாவில் 2,500 பட்டதாரி மாணவர்களுக்கு தலா 1,000 அமெரிக்க டாலர் பரிசு.. அசத்திய அமெரிக்க கோடீஸ்வரர்..!

அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அமெரிக்க கோடீஸ்வரர் ராபர்ட் ஹேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பட்டம் பெற்ற 2 ஆயிரத்து 500 பட்டதாரி மாணவர்களுக்கு தலா ஆயிரம் டாலர் பரிசாக வழங்கினார். மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், Granite Communications நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராபர்ட் ஹேல் பங்கேற்று, சிறப்புரையாற்றி பட்டம் பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தினார். தொடர்ந்து, பட்டதாரி மாணவர்களுக்கு தலா 500 டாலர் கொண்ட இரு கவர்களை பரிசாக வழங்கினார். அந்த … Read more

2 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.. 4 பேர் உயிரிழப்பு..!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஒட்டன்சத்திரம் சீத்தப்பட்டியை சேர்ந்த ரத்தினம் மற்றும் அவருடைய நண்பர் சேகர் ஆகிய இருவரும் ஒரு இரு சக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மீது ரெட்டியார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் மற்றும் துரைராஜ் ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் இரண்டு வாகனங்களிலும் சென்ற 4 பேரும் … Read more

குழந்தையின் சடலத்துடன் 10 கி.மீ தூரம் நடை பயணம்.. மலைக்கிராமங்களின் கண்ணீர் பக்கங்கள்..!

உரிய சாலை வசதி இல்லாததால் இறந்த ஒன்றரை வயது குழந்தையின் சடலத்தை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கைகளில் உறவினர்கள் தூக்கிச் சென்ற பரிதாப நிலை வேலூர் மாவட்டத்திலுள்ள மலைக்கிராமத்தில் ஏற்பட்டது. இறந்த குழந்தையின் சடலத்தை கையில் தூக்கி வைத்துக் கொண்டு நடந்துச் செல்லும் இந்த காட்சி அரங்கேறியிருப்பது வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை மலைக்கிராமத்தில் தான். விஜி – பிரியா தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை தனுஷ்கா வீட்டில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது நாகப்பாம்பு தீண்டியதாக … Read more

இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி- எஃப்-12 ராக்கெட்..!

தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிப்பதற்கான என்.வி.எஸ்-01 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை சுமந்தபடி இஸ்ரோவின் ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12’ ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. இதற்கான 27½ மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ஏவுதளத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு, ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக் கோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தினர் பங்கேற்பு..!

மக்களவை தலைவர் இருக்கை அருகே இன்று நிறுவப்பட்ட செங்கோலை 1947ம் ஆண்டு உருவாக்கி அளித்த தமிழகத்தை சேர்ந்த உம்மிடி பங்காரு செட்டி நிறுவன குடும்பத்தினர் 15 பேர், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். ஆங்கிலேயர்களிடம் இருந்து  இந்தியா சுதந்திரம் அடைந்ததை குறிக்கும் வகையில், அந்த செங்கோல் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டனால், முதல் பிரதமராக பதவியேற்ற நேருவிடம் 1947ம் ஆண்டு அளிக்கப்பட்டது. அந்த செங்கோலை உருவாக்கி அளித்த  உம்மிடி பங்காரு செட்டி நிறுவன … Read more

போதையால் பாதை மாறிப் போன பேதை… நடு ரோட்டில் நடந்த ரகளையால் பரபரப்பான ஈரோடு…!

ஈரோடு மாநகரின் பிரதான பகுதியில் நட்ட நடு சாலையில் போதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்ணை போலீஸார் படாதபாடுபட்டு மடக்கிப்பிடித்து மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஈரோடு மாநகரின் பிரதானப் பகுதியான பன்னீர்செல்வம் பூங்கா அருகே இரவு நேரத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டார் இந்த பெண். தன்னுடன் வந்திருந்த முதியவரை தாக்கியது பற்றி அங்கிருந்தவர்கள் விசாரித்த போது அப்பெண் மதுபோதையில் இருப்பது தெரிய வந்தது. அந்த வழியாகச் செல்லும் பேருந்தை வழிமறித்து, ஆபாச அர்ச்சனை நடத்தி ரகளையில் ஈடுபட்டவர், … Read more