போட்டோ ஸ்டுடியோவுக்குள் புகுந்து பெண் ஊழியரின் தங்கச்செயின் பறித்த திருடன்.. மடக்கி பிடித்து பாடம் புகட்டிய பெண் தலைமைக் காவலர்..

மயிலாடுதுறையில், போட்டோ ஸ்டியோவுக்குள் புகுந்து அங்கு பணியாற்றிய பெண் ஊழியரின் தாலிச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்ற நபரை பெண் போலீஸ் ஒருவர் மடக்கிப் பிடித்து கைது செய்தார். பட்டமங்கல தெருவில் உள்ள அந்த ஸ்டியோவிற்கு வந்த திருடன், குடிக்க தண்ணீர் கேட்பது போன்று பெண் ஊழியரின் கவனத்தைத் திசை திருப்பி, கையில் தயாராக கொண்டு வந்திருந்த மண்ணை முகத்தில் தூவினான். பின்னர் பெண் ஊழியர் அணிந்திருந்த துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை இறுக்கி தாலி செயினை … Read more

300 அடி மலை உச்சியிலிருந்து பாறைகள் மீது தவறி விழுந்த நாய்..

அமெரிக்காவின் ஆரிகான் மாநிலத்தில் மலை உச்சியிலிருந்து தவறி பாறைகள் மீது விழுந்த நாயை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். சுற்றுலா பயணி ஒருவர் மலை உச்சியில் தனது ஜெர்மன் ஷெப்பர்டு நாயுடன் விளையாடியபோது அது கால் இடறி, 300 அடி ஆழத்தில் கடலை ஒட்டியுள்ள பாறைகள் மீது விழுந்தது. காயமடைந்த நாய், கால்நடையாக சென்றடைய முடியாத பாறைகள் நிறைந்த பகுதியில் பரிதவித்தபடி நின்றது. தகவலறிந்து வந்த கடலோர காவல்படையினர், ஹெலிகாப்டரிலிருந்து  ஸ்டிரெட்சருடன் இறங்கி நாயை மீட்டனர். … Read more

சிறுமி அளித்த பொய்யான புகார்… பெற்றோர் மற்றும் குடியிருப்புவாசிகள் டெலிவரி பாய் மீது சரமாரித் தாக்குதல்

பெங்களூரில் 8 வயது சிறுமியின் பொய்யான புகார் காரணமாக உணவு டெலிவரி செய்ய வந்த நபர் குடியிருப்பு வாசிகளால் அடித்து உதைத்து தாக்கப்பட்டார். தன்னை வலுக்கட்டாயமாக மாடிக்குக் கொண்டுசென்றதாகவும் தான் அவர்கையைக் கடித்து தப்பி வந்ததாகவும் சிறுமி கூறியதால் ஆத்திரம்அடைந்த பெற்றோர் மற்றும் குடியிருப்பு வாசிகள் உணவு டெலிவரி ஏஜன்ட்டை சரமாரியாகத் தாக்கினர். ஆனால் விசாரணையில் கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்த போது சிறுமி தானாகவே மாடிக்கு சென்று விளையாடியதும் பெற்றோர் கண்டிப்புக்கு பயந்து டெலிவரி ஏஜன்ட் மீது … Read more

கரையைக் கடந்தபின் வலுவிழந்தது பிபர்ஜோய் புயல்… ராஜஸ்தானை நோக்கி நகர்ந்த புயலால் இருமாநிலங்களிலும் பலத்த மழை

பிபர்ஜோய் புயல் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் கரையைக் கடந்து அதிதீவிர புயலில் இருந்து தீவிரப் புயலாக வலுவிழந்து ராஜஸ்தானை நோக்கி நகர்ந்தது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை மீட்டு வர நிவாரணக் குழுவினர் 24 மணி நேரமும் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சாய்ந்த மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டு கிராமங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்திருப்பதால், அவர்கள் வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று கட்ச் … Read more

பள்ளி வளாகத்திற்குள் புகுந்து போராளி குழு கொடூரத் தாக்குதல்.. 38 மாணவர்கள் உயிரிழப்பு

உகாண்டாவில் பள்ளி ஒன்றின் வளாகத்திற்குள் புகுந்து போராளி குழுவினர் நடத்திய தாக்குதலில் 38 மாணவர்கள் உயிரிழந்தனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ள ஏ.டி.எஃப். அமைப்பினர் அண்டை நாடான காங்கோவில் பதுங்கியபடி உகாண்டாவில் அவ்வப்போது தாக்குதல் நிடத்திவருகின்றனர். இந்நிலையில் காங்கோ எல்லையை ஒட்டி அமைந்துள்ள கஸஸே மாவட்டத்திலுள்ள உயர்நிலை பள்ளிக்குள் புகுந்த ஏ.டி.எஃப். போராளிகள் துப்பாக்கியால் சுட்டும், பட்டா கத்தியால் வெட்டியும் கண்மூடித்தனமாகத் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் மாணவர்கள் 38 பேரும், பொதுமக்கள் 3 பேரும் உயிரிழந்தனர். … Read more

எஸ்.ஜி.சூர்யா அவதூறாக பதிவிடவில்லை.. அவர் கைது செய்யப்பட்டது அவருக்கு கௌரவம் தான் – அண்ணாமலை

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா ஒரே ஒரு வார்த்தை கூட அவதூறாக எதுவும் பதிவிடாத போதிலும் கைது செய்யப்பட்டு இருப்பதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மனித கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் பலி எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளதாக கூறிய அவர், இது பற்றி முதலமைச்சருக்கோ, தமிழக காவல்துறையினருக்கோ எந்த புரிதலும் இல்லை என குற்றம்சாட்டினார். எஸ்.ஜி.சூர்யா, இதேபோல் சரியான பாதையில் தொடர்ந்து பயணிப்பார் என்றும், அவர் கைது செய்யப்பட்டது அவருக்கு கௌரவம் … Read more

அரசு நிலத்தில் கட்டப்பட்ட தர்காவை அகற்றும் நடவடிக்கையால் வன்முறை… ஒருவர் உயிரிழப்பு – 174 பேர் கைது

குஜராத் மாநிலத்தில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட தர்காவை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஜூனாகத் பகுதியில் அமைந்துள்ள தர்கா அரசு நிலத்தில் கட்டப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் தர்காவில் நோட்டீஸ் ஒட்ட போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சென்றனர். அவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. கலவரக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மாவட்ட துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறையினர் 4 பேர் காயமடைந்தனர். இந்த மோதல் … Read more

பிரிஜ் பூஷணுக்கு எதிரான புகார்களுக்கு ஆதாரம் சிக்கியது: போலீஸ்

பிரிஜ் பூஷணுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்களுக்கு வலுசேர்க்கும் வகையில் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிஜ் பூஷண் மீது ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே, பிரிஜ் பூஷண் மீதான 6 புகார்களில் 4 புகார்களுக்கு போதிய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தொலைபேசி உரையாடல் ஆதாரங்கள் சேகரிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பல்வேறு போட்டி தொடர்கள், … Read more

போர்களை எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயார்: குடியரசுத் தலைவர்

உயர்தொழில்நுட்ப போர்களை எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயார் நிலையில் உள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார். ஐதராபாத் அருகே இந்திய விமானப்படை அகாடமியின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மனிதாபிமான உதவிகளையும் பேரிடர் நிவாரணப் பணிகளையும் விமானப்படை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது என்றார். சாதகமற்ற சூழலில் பறப்பது, தரையிறங்குவது ஆகியவை விமானப்படையின் உயர்திறன்களுக்கு சான்றாக விளங்குவதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். Source … Read more

30 சதவீதப் பணியுடன் நிறுத்தப்பட்ட மேம்பால பணி.. 45 ஆண்டுகளாக பரிசல் மூலமாக ஆற்றைக் கடந்து வரும் கிராம மக்கள்..

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள போகிபுரம் கிராம மக்கள் சுமார் 45 ஆண்டுகளாக பரிசல் மூலமாக அன்றாட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சூளகிரி – சின்னாறு அணையின் மையப்பகுதியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊரில் அடிப்படை வசதி இல்லாததால் பள்ளி செல்வதற்காகவும், அத்யாவசிய பொருட்கள், ரேஷன் பொருட்களை வாங்குவதற்காகவும் ஆற்றை கடந்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆற்றின் இருபுறமும் கயிறு கட்டி அதில் படகு ஒன்றை கட்டி வைத்து அதன் மூலமாக … Read more