த்ரில்லர் கதையில் சாதித்தாரா உதயநிதி ஸ்டாலின்? – ‘கண்ணை நம்பாதே’ எப்படி இருக்கு?

ஓர் இரவில் நடக்கும் இரண்டு மரணங்கள், அதற்கு காரணம் யார் என்பதே ‘கண்ணை நம்பாதே’ படத்தின் ஒன்லைன். அருண் (உதயநிதி), சோமு (பிரசன்னா) இருவரும் அறைத்தோழர்கள். எதிர்பாராத ஓர் இரவில் சவிதா (பூமிகா) கார் ஓட்ட முடியாமல் சிரமப்பட அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று இறக்கிவிடுகிறார் அருண். மழை இரவு என்பதால் அருணையே காரை எடுத்துச் சென்று காலையில் திருப்பித் தருமாறு சவிதா கூற, மறுநாள் அதே காரில் ஒரு பிணம் இருக்கிறது. இதைத் தொடர்ந்து நிகழும் … Read more

மார்ச் 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சென்னை மெட்ரோ ரயில் சேவை – ஏன் தெரியுமா?

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வரும் ஞாயிற்று கிழமை, நள்ளிரவு 12 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் மெட்ரோ முதல் நேரு உள் விளையாட்டு அரங்கம் வரை மெட்ரோ வாகன இணைப்பு சேவை வழங்கப்படுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் திரைத்துறையில் பணியாற்றும் லைட் மேன்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்காக நிதி திரட்டும் வகையிலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (அன்பின் சிறகுகள் – Wing of Love) என்ற பெயரில் சினிமா பாடல்கள் அல்லாது … Read more

நெருங்கும் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் – தீவிர ஆலோசனையில் காங்கிரஸ்

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி குழு ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூடியது. கர்நாடகா சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவிருக்கும் சூழ்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. வேட்பாளர் தேர்வு காங்கிரஸ் நட்சத்திர வேட்பாளர்கள் பிரசாரம், தேர்தல் வாக்குறுதிகள் என்று பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. கூட்டத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால், மோகன் பிரகாஷ், கர்நாடக காங்கிரஸ் … Read more

தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதுமா? -படத்திற்கு வரி விலக்கு குறித்து நீதிமன்றம் கருத்து

தமிழில் பெயர் வைத்ததால் மட்டுமே படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க உரிமை கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான ஐ திரைப்படத்தின் புதுச்சேரி விநியோக உரிமையை ஸ்ரீ விஜயலட்சுமி ஃப்லிம்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. இந்நிலையில், ஐ படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து ஸ்ரீ விஜயலட்சுமி ஃப்லிம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனு … Read more

விருந்துக்கு அழைத்து அக்கா கணவர் செய்த செயல்- வீடு திரும்பியதும் அதிர்ந்துபோன தங்கை கணவர்

மனைவியின் தங்கை மற்றும் அவரது கணவர் இருவரையும் விருந்துக்கு வரச் சொல்லிவிட்டு அவர்கள் வந்ததும், மனைவியின் தங்கை வீட்டுக்குச் சென்று திருடிய அக்காவின் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூர் அப்பாசாமி கோவில் தெருவில் வசித்து வரும் ஸ்ரீதர் மகன் நரேந்திரன் என்பவருக்கு கடந்த வருடம் திருமணம் நடந்துள்ளது. நரேந்திரன் தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கே.கே. நகரில் அமைந்துள்ள மனைவியின் அக்கா வீட்டிற்கு விருந்திற்காக நரேந்திரன் சென்றுள்ளார். மதியம் விருந்து சாப்பிட்டுவிட்டு தம்பதி இருவரும் … Read more

பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு ஒருசேர சீர்கொண்டுபோன இந்து – கிறிஸ்தவ – முஸ்லீம்கள்!

மதங்களைக் கடந்து மனித நேயத்தை உணர்த்தும் வகையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்து – கிறிஸ்தவம் – முஸ்லிம் என மும்மதத்தினரும் தங்களது மத குருமார்கள் தலைமையில் ஒரு சேர மத நல்லிணக்க சீர் கொண்டு வந்தது காண்போர்களை நெகிழ வைத்தது. எம்மதமும் சம்மதமே என்றிருந்தால்.. எம்மதமும் சம்மதம் என்பதை மறந்து தம்மதமே பெரிதென நினைக்கும் போது தான் சில விபரீதங்கள் ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் சில பகுதிகளில் மதம் சார்ந்த பிரச்சனைகள் … Read more

”சர்வாதிகார போக்குடன் எங்களை நீக்கினர்” – நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் வாதம்!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமித்தும், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் அணி … Read more

‘நான் பிரதமர் அலுவலக அதிகாரி’ – காஷ்மீரில் Z+ பாதுகாப்புடன் வலம் வந்த குஜராத் மோசடி நபர்!

பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி காஷ்மீரில் இசட் பிளஸ் (Z PLUS) பாதுகாப்புடன் வலம் வந்த குஜராத்தை சேர்ந்த நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கிரண் பாய் பட்டேல் என்பவர், பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் இயக்குநராக (Additional Director for strategy and campaigns) பணியாற்றுவதாகக் கூறி, ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் உள்பட பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கு சென்று வந்ததாகத் தெரிகிறது. அந்த வகையில், கடந்த மாதம் முதல் முறையாக காஷ்மீருக்கு சென்ற அவர், … Read more

”முதல்வரும் தூங்க மாட்டார்.. எங்களையும் தூங்க விட மாட்டார்!” – அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

”பொதுப்பணித்துறையை பொருத்தவரையில் முதல்வரும் தூங்குவது கிடையாது, எங்களையும் தூங்க விடுவதும் கிடையாது. முதல்வர் இதுவரை 23 முறை கலைஞர் நூலகத்தின் கட்டுமானத்தை பற்றி கேட்டுள்ளார்” அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார். பொதுப்பணி துறை பொறியாளர் மற்றும் கட்டட கலைஞர்களுக்கான நவீன கட்டுமான தொழில்நுட்பங்கள் மற்றும் செய்நுட்ப அறிவு பற்றிய ஒருநாள் பயிற்சியானது அடையாறில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அதில் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ வேலு மற்றும் பொதுப்பணித் துறையின் அரசு முதன்மை செயலர் … Read more

பெண் சக்தியின் நம்பிக்கை! வந்தே பாரத் ரயிலை இயக்கும் முதல் பெண்! யார் இந்த சுரேக்கா யாதவ்?

இந்தியாவின் முதல் ‘ரயில் ஓட்டுநர்’ என்ற பெருமைக்கு சொந்தக்காரரான சுரேக்கா யாதவ் என்ற மகாராஷ்ட்ராவை சேர்ந்த 57 வயது பெண்ணொருவர், ஆசியாவிலேயே முதல்முறையாக வந்தே பாரத் ரயிலை இயக்கும் (Loco Pilot) முதல் பெண் என்ற பெருமையையும் தற்போது பெற்றுள்ளார். Semi அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலை, சோலாபுர் நிலையம் முதல் மும்பையின் சத்ரபதி சிவாஜி மஹராஜ் டெர்மினஸ் வரை கடந்த திங்கட்கிழமை இயக்கியுள்ளார் சுரேக்கா. அவரது புதிய சாதனைக்கு, பிரதமர் – ரயில்வே அமைச்சகம் … Read more