"கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன்" – ஓ.பன்னீர்செல்வம் அதிரடி பேட்டி

வாய்ப்பு இருந்தால் உறுதியாக டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவேன் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: டிடிவி தினகரன், சசிகலாவை சந்திப்பது குறித்த கேள்விக்கு.. வாய்ப்பு இருந்தால் உறுதியாக டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவேன் உறுதியாக. கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன். இபிஎஸ் குறித்த கேள்விக்கு.. எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை சட்ட நியதிக்கு … Read more

சீனாவை போல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்படுமா? – மத்திய அரசு பதில்!

இணைய விளையாட்டுகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் ஏதுமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு குழந்தைகள், மாணவர்கள் இடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆன்லைன் வகுப்பிற்காக மாணவர்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு வந்து சேர்ந்தது. ஆனால், செல்போன் பயன்பாடு நன்மைகள் அதிகம் இருப்பது போல், ஆன்லைன் கேம் போன்ற தீமைகளும் அவர்கள் இடையே வந்து சேர்ந்தது. ஆன்லைன் கேம் மாணவர்களின் நேரங்களை அளவு கடந்து எடுத்துக் கொள்கிறது. பல மாணவர்களும் இதுபோன்ற … Read more

குமரி: குறைந்த வட்டியில் கடன் தருவதாக விளம்பரம்.. ஸ்கெட்ச் போட்டு மோசடி செய்த கும்பல்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்த வட்டியில் கடன் தருவதாக விளம்பரம் செய்து 1,500 பேரிடம் 3.5 கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனம் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், களியல், வேர்கிளம்பி, அழகிய மண்டபம் ஆகிய 4 இடங்களில் கடந்த 3 மாதங்களாக AA பைனான்சியல் சர்வீஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் பணிபுரிய படித்த இளைஞர்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 70 … Read more

விண்வெளிக்கு சுற்றுலா போகணுமா! ரூ.6 கோடி செலவில் பயணம் – இஸ்ரோவின் அசத்தல் திட்டம்

விண்வெளி சுற்றுலா செல்ல ஒரு நபருக்கு ரூ.6 கோடி கட்டணம் ஆகும். 2030-ம் ஆண்டுக்குள் இந்திய பயணிகளை விண்வெளிக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், ”இந்தியாவின் சொந்த விண்வெளி சுற்றுலா பயணத்துக்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த சுற்றுலா திட்டம் பாதுகாப்பானது. மீண்டும் பயன்படுத்தக்கூடியது. 2030-ம் ஆண்டுக்குள் இந்த திட்டம் தொடங்கி விடும். இதன் மூலம் இந்தியர்கள் விண்வெளி உடைகளை அணிந்து ராக்கெட்டில் விண்வெளிக்கு பயணம் செய்ய … Read more

”நிஜத்தை புதைச்சாலும் திமிறிக்கிட்டு வரும்”-மிரட்டும் வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’ பட டீசர்!

நாக சைதன்யா நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும், ‘கஸ்டடி’ படத்தின் டீசர் இன்று வெளியானது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்திருக்கும் படம், ‘கஸ்டடி’. இப்படத்தை வெங்கட் பிரபு நேரடியாக தெலுங்கில் இயக்கி உள்ளார். தமிழிலும் இப்படம் வெளியாகிறது. மே 12ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திக்கு … Read more

ரசிகையின் ஒரே ஒரு கடிதம் தான்! ’எஜமான்’ படத்தின் வசூலை புரட்டிப் போட்ட புரமோஷன் ஐடியா!

30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘எஜமான்’ படம் குறித்த நினைவுகளை, பெண் ரசிகை ஒருவர் எழுதிய கடிதத்துடன், ஏ.வி.எம். நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஏ.வி.எம். தயாரிப்பில் வெற்றிப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில், 1993ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’எஜமான்’. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏ.வி.எம். தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். மேலும் நெப்போலியன், நம்பியார், மனோரமா, ஐஸ்வர்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜா … Read more

”அந்த 3 மணி நேரம் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்” – அக்னிக்கு முன்பே வாட்டும் வெயில்!

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் மேற்கு உள் மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துவருகிறது. குறிப்பாக பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று வீச தொடங்கி உள்ளது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானாவில் வெப்பநிலை மிக அதிகமாக பதிவாகி இருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் மாணவர்களின் நலன் கருதி தெலுங்கானாவில் அனைத்துப் பள்ளிகளும் ஏப்ரல் 24 வரை அரைநாள் மட்டுமே செயல்படும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித் துறை … Read more

சந்திராயன் 3 திட்டத்தின் ஒலியியல், அதிர்வு சோதனை வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு

நிலவிற்கு விண்கலத்தை அனுப்பி சோதனை செய்யும் இந்தியாவின் கனவு திட்டமான சந்திராயன் 3 திட்டத்தின் முக்கியமான விண்கல ஒலியியல் மற்றும் அதிர்வு சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திராயன் 3 திட்டத்திற்கான தொழில்நுட்பப் பணிகள் கடந்த இரண்டு வருடமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் அமைப்பு ரீதியாக உள்ள பணிகள் ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சந்திராயன்-3 திட்டத்தில் பயன்படுத்தப்படும் கிரையோஜினிக் இன்ஜினின் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24 அன்று … Read more

”கடற்பகுதிகளில் அகழாய்வு என்பது சாத்தியமா?” – அமர்நாத் ராமகிருஷ்ணன் சொல்லும் அரிய தகவல்கள்

கீழடியில் நடைபெற்ற அகழாய்வு தொடர்பான அறிக்கையை மத்திய தொல்லியல்த்துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், இந்தியத் தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்திருக்கிறார். அவரிடம் புதிய தலைமுறை செய்தியாளர் பாலவெற்றிவேல் நடத்திய நேர்காணலைப் பார்க்கலாம்.. தொல்லியல் மீதான ஒரு விழிப்புணர்வு தமிழ்நாடு முழுவதுமே பெருகி இருக்கிறது. அதில் ஒரு பகுதியாக தான் தொல்லியல் துறை சார்பாக ஆய்வினை தமிழ்நாடு முழுதும் மயிலாடும் பாறையில் ஆரம்பித்து நிறைய இடங்களில் நடந்து வருகிறது. இந்திய தொல்லியல் துறையை பொருத்த வரையில் தமிழ்நாட்டின் கவனம் எப்படி … Read more

’நீங்க என்ன முடக்குறது நாங்களே செய்வோம்!’ பாஜகவின் மாஸ்டர் பிளானும் ராகுலின் ரியாக்‌ஷனும்!

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வுக்கு நேர்மாறாக இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. வழக்கமாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள்தான் பல்வேறு விவகாரங்களை எழுப்பி முடக்குவார்கள். ஆனால், இந்த முறை ஆளும் பாஜக எம்பிக்களே நாடாளுமன்றத்தை அமளியால் முடக்கி வருகின்றனர்.  முதல் அமர்வை முடக்கிய எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. பிப்ரவரி ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெற்ற முதல் பட்ஜெட் அமர்வு முழுவதும் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக அதானி விவகாரத்தை … Read more