"அமைச்சர் உதயநிதியின் அரசியல் செயல்பாடுகள் காமெடியாக உள்ளது" – டிடிவி தினகரன்

“திமுகவுக்கு 60 மாதங்களில் வரவேண்டிய கெட்ட பெயர் 20 மாதங்களில் வந்துள்ளது. அமைச்சர் உதயநிதியின் அரசியல் செயல்பாடுகள் காமெடியாக உள்ளது” என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படத்துக்கு இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்கள் … Read more

ஆஸ்கர் மேடையில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரண் நடனம் ஆடாதது ஏன்? – வெளியான தகவல்!

ஆஸ்கர் விருது விழா மேடையில் நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஏன் நடனமாடவில்லை என்று ஆஸ்கர் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ராஜ்கபூர் விளக்கம் அளித்துள்ளார்.  95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த 13-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள டால்பி தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, இந்திய தயாரிப்பில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த ஒரிஜினல் பாடல் … Read more

”6 நாள பாதியா பிரிச்சுக்கலாம்; சண்டே மட்டும்..” – 2 மனைவிகளின் Code Word ஒப்பந்தம்..!

முதல் மனைவிக்கு தெரியாமல் உடன் பணிபுரிந்த பெண்ணையே திருமணம் செய்து வாழ்ந்து வந்த கணவனின் லீலையை அறிந்த பெண் ஜீவனாம்சம் கேட்ட நிலையில், புதுவிதமான ஒப்பந்தம் ஒன்றை போட்டிருக்கும் நிகழ்வு மத்திய பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது. அப்படி என்ன புதுமையான ஒப்பந்தம் போடப்பட்டது? அதன் விவரம் என்ன? என்பதை காணலாம். கணவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக சொல்லி, மத்திய பிரதேசத்தின் குவாலியல் குடும்பநல நீதிமன்றத்தில் முறையிட்ட பெண்ணுக்கு ஆதரவாக ஹரிஷ் தீவான் என்ற வழக்கறிஞரை இந்த விவகாரத்தில் ஆலோசகராக கடந்த … Read more

பிரசாந்த் கிஷோர வெச்சி கேஸ் போட்ருக்காங்க; தமிழர்கள பத்தி அவருக்கு என்ன தெரியும்? – சீமான்

வடமாநில மக்கள் குறித்து பேசிய வீடியோவை திட்டமிட்டு பிரஷாந்த் கிஷோர் மூலம் பரப்பி வழக்குப்பதிவு செய்திருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறார். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ”வடமாநில தொழிலாளர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் ராமேஸ்வரம் மற்றும் கரூரில் இதுபோன்று … Read more

இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பரவல் எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுவை அரசு அதிரடி!

புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆரம்பப்பள்ளி முதல் 8 ஆம் வகுப்பு வரை நாளை முதல் வரும் 26ந் தேதி விடுமுறையை அறிவித்தார் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 15 தினங்களுக்கு மேலாக வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் அனைத்து அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். இதனிடையே இன்று சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று … Read more

சேலம்: கடத்திச் செல்லப்பட்ட கணவரை மீட்டுத் தாங்க… தோழி மீது மனைவி புகார்

ஓமலூர் அருகே கணவரை கடத்திச் சென்று விட்டதாக இளம்பெண் ஒருவர் தனது தோழி மீது ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பாகல்பட்டி கிராமம் செங்கானூர் பகுதியில் மோகன்குமார் – முனியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், மோகன்குமார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், முனியம்மாளுடன், சேலம் பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்த கலையரசி என்பவர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இதையடுத்து கலையரிசிக்கு திருமணமாகி அய்யனார் என்ற … Read more

தேர்வெழுத வந்த மாற்றத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை – உதவிக்கு வந்த ஆசிரியர் கைது

காஞ்சிபுரத்தில் +1 தேர்வெழுத வந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவிக்கு நியமிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யபட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13,917 பேர் பிளஸ் டூ தேர்வையும் 13,114 பேர் 101 தேர்வு எழுது வருகின்றனர், இந்த தேர்வுக்காக 53 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பறக்கும் படை, தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து நபர்களும் நியமிக்கப்பட்டு நேற்று தமிழ் மொழி தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் தேர்வு … Read more

திமுகவில் உட்கட்சி பூசலா? திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல்!

நகராட்சி நிர்வாக துறை அமைச்சருக்கும், மாநிலங்களவை குழு தலைவருக்குமான அதிகார போட்டியில், அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. திருச்சி சிவாவின் இல்லத்திற்கு அருகே பூங்காவிற்காக ஒடுக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தினை திறந்து வைப்பதற்காக அமைச்சர் … Read more

மதுரை: சொகுசு காரில் கஞ்சா கடத்திய நபர் கைது – 5 கார்கள் 72 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரையில் 72 கிலோ கஞ்சா பறிமுதல் டீஆறு உள்ளிட்ட 5 சொகுசு கார் 4.30 லட்சம் ரொக்கம் பறிமுதல் கணவரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவான மனைவியை தேடிவருகின்றனர். மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் சந்திப்பு வழியாக கஞ்சா கடத்த இருப்பதாக மாநகர் காவல் ஆணையரின் தனிப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் அந்த பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், 72 … Read more

கம்பம் அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்ட தொழிலதிபர் பெரியகுளம் அருகே பத்திரமாக மீட்பு

கம்பம் அருகே மர்ம நபர்களால் தொழிலதிபர் கடத்தப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ராயப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அதிசயம். இவர் கோழி பண்ணை மற்றும் திராட்சை தோட்டங்கள் வைத்துள்ளார். இவரது பண்ணை மற்றும் தோட்டங்களில் இருந்து கோழிகள் மற்றும் திராட்சை பழங்களை தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிற்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவர், தனது தோட்டத்திற்குச் செல்லும் சண்முகநாதன் கோவில் சாலையில் நேற்று அதிகாலை … Read more