எங்களை சீண்ட வேண்டாம்: கூலாக ஏவுகணை சோதனை நடத்திய ரஷ்யா!

உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனது படைகளை ரஷ்யா குவித்து வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டனர். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், அதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த படைகள் குவிக்கப்பட்டன. அதன் தொடர்சியாக, நேட்டோ படைகள் கிழக்கு உக்ரைனில் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் அதிகரித்தது. மேலும் ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ … Read more

ராம் பொத்தினேனியின் அடுத்தப் பட அறிவிப்பு வெளியானது.. அசத்தலான மாஸ் கூட்டணி!

தெலுங்கு திரை உலகில் சமீபத்தில் வெளி வந்து வெற்றி பெற்ற “அகாண்டா” உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி உள்ள இயக்குனர் போயபதி ஸ்ரீனு , லிங்குசாமி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகும் தி வாரியர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்க, வெற்றி பட தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் ஒரு பிரமாண்டமான பன்மொழி இந்திய படம் உருவாகிறது. பாய் ஃபிரண்டுடன் படுநெருக்கமாக இருக்கும் பிரபல நடிகை… திகைக்க வைக்கும் போட்டோஸ்! … Read more

சியோமி Pad 5 டேப்லெட்டுடன் மல்லுக்கட்ட வரும் Oppo பேட்!

ஸ்மார்ட்போன், கேட்ஜெட்ஸ் தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஒப்போ நிறுவனம், புதிதாக டேப்லெட் தயாரிப்பில் இறங்கியுள்ளது. டேப்லெட் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் சாம்சங், மோட்டோ, ஆப்பிள், நிறுவனங்களுக்கும், தற்போது கால்பதித்திருக்கும் ரியல்மி நிறுவனத்திற்கும் ஒப்போ கடும் நெருக்கடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனத்திற்கு போட்டியாக மடிக்கக்கூடிய ‘ஒப்போ ஃபைண்ட் என்’ (Oppo Find N) ஸ்மார்ட்போனை சமீபத்தில் வெளியிட்ட ஒப்போ நிறுவனம், புதிய டேப் தயாரிப்பு வேலைகளை சைலண்டாக செய்து வருகிறது ஒப்போ. சைலண்டாக வேலையை செய்தாலும், … Read more

'அகமதாபாத் குண்டுவெடிப்பு: சமாஜ்வாடி தலைவர்களுக்கு தொடர்பு!' – மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு!

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர்களுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக மத்திய அமைச்சர் அனுதாக் தாக்குர் குற்றம் சாட்டி உள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில், நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. … Read more

யூனிஸ் புயல்: சூறாவளிக் காற்றுக்கு மத்தியில் தரையிறங்கிய விமானங்கள்!

பிரிட்டனை யூனிஸ் புயல் தாக்கியதையடுத்து, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், பயண திட்டங்களை ரத்து செய்யுமாறும் அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. பிரிட்டனில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யூனிஸ் புயல் வீசி வருவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிரிட்டனின் வைட் தீவை மணிக்கு 122 மைல் வேகத்தில் யூனிஸ் புயல் தாக்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மிகவும் மோசமாக உள்ள நிலையில் … Read more

ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி.. என்ன தலைவரே கடைசில இப்படி பண்ணிட்டீங்க..!

தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து இன்று மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 22 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்தார் நடிகர் விஜய் . அதனை தொடர்ந்து கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோரும் வாக்களித்தனர். இவர்களை போல் நடிகர் ரஜினியும் … Read more

மதுபானி ரயில்நிலைய தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்படும்!

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மதுபானி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்வதந்தரதா சேனானி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ரயிலின் 5 பெட்டிகளில் தீ கொளுந்துவிட்டு எரியும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் ஆட்கள் யாரும் இல்லாததால் பெருமளவிலான உயிர் … Read more

'அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் பிஏ 2 வைரஸ்' – ஆய்வில் ஷாக் நியூஸ்!

ஒமைக்ரான் வைரசின் பிஏ 2 உருமாற்றம் வேகமாக பரவும் தன்மையுடையது என்றும், தீவிர நோய் தாக்கத்தை ஏற்படுத்த கூடியது என்றும் ஜப்பான் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகளவில் மிகப் பெரிய நோய் தாக்கத்தை ஏற்டுத்திய கொரோனா, டெல்டா வகை வைரசின் தொடர்ச்சியாக, ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த ஒமைக்ரான் வைரசின் உருமாற்றமான பிஏ 2, கடந்த பிப்ரவரியில் டென்மார்க், இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒமைக்ரானில் இதுவரை 53 உருமாற்ற வைரஸ்கள் கண்டறியப்பட்டு … Read more

ஷங்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட நடிகை அஞ்சலி …! படகுழுவினருக்குள் ஏற்பட்ட தகராறு…!

ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பான் – இந்தியா திரைப்படமாக இது தயாராகி வருகிறது. இந்தப் படம் குறித்த புதிய அப்டேட்டை அஞ்சலி வெளியிட்டுள்ளார் . ஷங்கர் நேரடியாக இயக்கும் முதல் தெலுங்கு படமான இதில்ராம் சரண் நாயகனாக நடிக்கிறார். கியாரா அத்வானி நாயகி. ஜெயராம், ரகுமான் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். படத்தின் தொடக்க விழாவை முன்னிட்டு வெளியிட்ட போஸ்டரில் ஷங்கர், … Read more

அரசு ஊழியர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு – அரசு இப்படியொரு வார்னிங்!

ரகசியமான மற்றும் முக்கிய ஆவணங்களை வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் பகிர வேண்டாம் என அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில், தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. மத்திய அரசும் டிஜிட்டல் இந்தியா போன்ற முன்னெடுப்பை எடுத்துள்ளது. தற்போது எங்கு பார்த்தும் டிஜிட்டல் அம்சம் உள்ளது. இன்றைய நவீன காலக் கட்டத்தில் ஸ்மார்ட் போன் இன்றியமையாததாக உள்ளது. ஸ்மார்ட் போனுக்குள்ளே உலகமே அடங்கி போய் விட்டது என்று சொல்லும் … Read more