நாலு வயசு குழந்தைகளுக்கும் இனிமே இது கட்டாயம்… மத்திய அரசு அதிரடி உத்தரவு!

இருசக்கர வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலானவை தலைகவசம் ( ஹெல்மெட் ) அணியாததால் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைகவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மேட் அணியாமல் வாகன ஓட்டுவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை நாடு முழுவதும் அமலில் உள்ளது. இதில் தற்போது மேலும் ஒரு புதிய கட்டுப்பாட்டையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் ஹெல்மெட் … Read more

5000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்பு கண்டெடுப்பு!

லண்டன் தேம்ஸ் நதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கிராபிக் டிசைனரான சைமன் ஹண்ட் என்பவர் தனது படகில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, நதியின் கரையில் ஆழம் குறைந்த, பாறைகள் நிறைந்த பகுதியில் கருப்பு நிறத்தில் வித்தியாசமான கட்டை வடிவிலான பொருள் கிடந்ததை கண்ட அவர் அதனை தனது வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார். வீட்டிற்கு வந்ததும் தனது மனைவியிடம் அதனை காட்டிய அவருக்கு அது ஒரு எலும்பு என தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசாருக்கு அவர் தகவல் அளித்துள்ளார். … Read more

தனுஷ் பண்றதெல்லாம் பார்த்த ஒரு முடிவோடுதான் இருக்காரு போலயே..!

நடிகர் தனுஷ் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். என்னதான் சொந்த வாழ்க்கையில் பல கஷ்டங்களை தற்சமயம் அவர் அனுபவித்து வந்தாலும், தன் திரைவாழ்க்கையில் கவனம் செலுத்த அவர் தவறவில்லை. வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரைப்படம் விரைவில் OTT யில் வெளியாகவுள்ளது. தொடர்ந்து தனுஷின் படங்கள் OTT யில் வெளியாவது அவரது ரசிகர்களை சற்று சலிப்படைய செய்துள்ளது என்றுதான் … Read more

110 நாள்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் புதிய ரீசார்ஜ் திட்டம்!

அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL பயனர்களைக் கவரும் வகையில் பல திட்டங்களைத் தொடர்ந்து அறிவித்து வருகிறது. பிஎஸ்என்எல் அறிவித்துள்ள புதிய ரூ.666 திட்டம், செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து 110 நாட்கள் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் நன்மைகள் பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வரம்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் ஒரு நாளைக்கு 100 SMS வீதம் பயனர்களுக்கு கொடுக்கப்படும். இந்த திட்டத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஹலோ டியூன்கள் PRBT வழங்கப்படுகிறது. இலவச … Read more

கடத்தப்பட்ட கணவருக்கு என்னாச்சோ?.. கைக்குழந்தையுடன் காட்டுக்குள் போன மனைவி!

சட்டிஸ்கரில் மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட கணவனைத் தேடி அவரது மனைவியும், மகளும் காட்டுக்குள் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டிஸ்கர் மாநிலத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருபவர் அசோக் பவார். இவரையும், இவரது உதவியாளர் ஆனந்த்யாதவ் என்பவரையும் மாவோயிஸ்டுகள் , சமீபத்தில் கடத்திச் சென்று விட்டனர். இதனால் இருவரின் குடும்பங்களும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். தனது கணவரை மாவோயிஸ்டுகள் கருணையுடன் விடுவிக்க வேண்டும் என்று அசோக் பவாரின் மனைவி சோனாலி பவார் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அசோக் பவார் … Read more

நேருக்கு நேர் மோதிய ரயில்கள்… கோர விபத்தில் பயணிகள் நிலை என்ன?

ஜெர்மனியின் பிரபல நகரமான முனிச்சில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று இன்று காலை வழக்கம்போல் புறப்பட்டது. அதில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்து கொண்டிருந்தனர். எபென்ஹவுசென்-ஷ்லோபட்லார்ன் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது, அதே தண்டவாளத்தில் எதிர்பாராதவிதமாக, எதிர்திசையில் மற்றொரு பயணிகள் ரயில் வந்தது. இதனையறிந்து பயணிகள் அதிர்ச்சியடைந்து கூக்குரலிட்டனர். உடனே இரண்டு ரயில்களும் மோதி கொள்ளாதவண்ணம் நிறுத்த ஓட்டுநர்கள் முயற்சித்தனர். ஆனால், ரயில்கள் பயணித்த வேகத்தில் அவற்றை உடனடியாக நிறுத்த முடியவில்லை. இதனால் இரண்டு ரயில்களும் நேருக்கு … Read more

சிம்புவின் பலநாள் பிரச்சனை முடிவிற்கு வந்தது..!இனிமே சிலம்பாட்டம் தான் போலயே..!

நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியினால் புது உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார். பல ஆண்டுகளாக ஒரு மெகாஹிட் வெற்றிக்காக ஏங்கிக்கொண்டிருந்த சிம்புவிற்கு மாநாடு படம் சரியான நேரத்தில் கைகொடுத்துள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது பல படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மிகப்பெரிய பிரச்சனை ஒன்றில் சிக்கியிருந்தார். 2015 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு பெண்களைப்பற்றி ஆபாசமாக பாடியதாக கூறி இணையத்தில் பீப் சாங் ஒன்று வெளியானது. அப்பாடல் பெண்களை … Read more

50MP சோனி OIS கேமரா… வெளியானது Realme 9 Pro Plus 5G சூப்பர் கேமரா மொபைல்!

ரியல்மி நிறுவனத்தின் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் வெளியாகியுள்ளது. இன்று ரியல்மி தரப்பில் இருந்து ரியல்மி 9 ப்ரோ, ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ( Realme 9 Pro Plus 5G ) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன், மீடியாடெக் டைமென்சிட்டி 920 5ஜி சிப்செட், 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் சோனி கேமரா, … Read more

பட்டு சேலையில் ரோபோ – உணவு பரிமாறும் அதிசயம்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள உணவகம் ஒன்றில், பாரம்பரிய பட்டுச் சேலை அணிந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு ரோபோக்கள் உணவு பரிமாறி வருவது, வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய நவீன காலக் கட்டத்தில், எங்குப் பார்த்தாலும் இன்டர்நெட் வசதி, அனைவரிடமும் ஸ்மார்ட் போன் என தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே தான் செல்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு 2ஜி தொழில்நுட்பம் இருந்த நிலையில், தற்போது 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி உலகமே பயணித்துக் கொண்டு இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி அடைய அடைய, பல்வேறு … Read more

விடாமல் கொட்டி தீர்க்கும் கனமழை – 18 பேர் உயிரிழப்பு!

பிரேசில் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின், ரியோடி ஜெரினோ மாகாணத்தில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அம்மாகாணத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரொபொலிஸ் உள்ளிட்ட நகரங்களில் ஒரே நாளில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், பொது மக்கள் … Read more