தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்! மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை.!

மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்ட பிறகும், நான்காவது முறையும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனம் அல்லது அங்காடியின் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 25 ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை,2, 496  கிலோ கிராம் தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.3,78,600/- அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் … Read more

அதிமுகவுக்கு சசிகலா தலைமை தேவை.. ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா பேட்டி.!!

அதிமுகவிற்கு சசிகலாவின் தலைமை தேவை என ஓ ராஜா பேட்டி அளித்துள்ளார். சசிகலா தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதிமுக தொண்டர்களை சந்தித்து வருகிறார். திருச்செந்தூர் வந்த சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ ராஜா நேரில் சந்தித்தார். அப்போது அவருடன் தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சசிகலாவை சந்தித்து பேசினர். இதனால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து, அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான … Read more

ஓபிஎஸ் மற்றும் சசிகலாவிற்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி.. வெளியாகப்போகும் அறிவிப்பு.!!

சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில், சசிகலாவையும் டிடிவி தினகரனையும் மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என தேனி மாவட்ட கட்சி நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் அளித்துள்ளனர். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, நேற்று முன் தினம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆகியோர் பெரியகுளத்தில் உள்ள ஓ பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் அவரை … Read more

மோட்டார் வாகன சட்ட விதிகளை கடுமையாக பின்பற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சிறுவர்கள் வாகனம் ஓட்டாமல் இருப்பதையும், மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை தி. நகர் நடேசன் சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டிச்  சென்ற இளைஞருக்கு ஏற்பட்ட விபத்தில் கை, கால், முகம் என உடல் முழுதும் காயங்கள் ஏற்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்கள் சிகிச்சை பெற்றார்.  விபத்தால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவனுக்கு இழப்பீடு … Read more

நாளையுடன் நிறைவு பெறுகிறது சென்னை புத்தக காட்சி.!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வரும் சென்னை புத்தகக்காட்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது. 45 ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த மாதம் 16-ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 800 அரங்குகளில் ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 19 நாட்கள் இந்த புத்தக காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் இந்த புத்தகக்காட்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது. இது குறித்து பபாசி எனப்படும் … Read more

திடீர் திருப்பம்.. திமுக நகராட்சி துணைத் தலைவர் ராஜினாமா.!!

நேற்று தமிழகம் முழுவதும் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர், நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதனால் கூட்டணி கட்சியினர் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர். வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அங்கு … Read more

பால் விலை குறைப்பை ஈடுசெய்ய பால் உபயோக பொருட்களின் விலையை கூட்டுவதா?..ஓபிஎஸ் கண்டனம்.!

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். தயிர், நெய், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை உயர்கிறது என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.  அதன்படி, அரை லிட்டர் தயிர் ரூ.27ல் இருந்து ரூ.30ஆகவும், 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515ல் இருந்து ரூ.535ஆகவும், 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.80ல் இருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த … Read more

கூட்டணி கோட்பாடுகளை பாதுகாக்க வேண்டும், திமுக தலைமைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்.!

கூட்டணி கோட்பாட்டை பாதுகாக்க வேண்டிய கடமையினை திமுக தலைமை நிறைவேற்றும் என நம்புவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. இருப்பினும் கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட ஒரு சில இடங்களில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டி வேட்பாளர்கள் களம் கண்டதையும், அதன் காரணமாக … Read more

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மக்கள் நீதி மய்யம் கோரிக்கை.!

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்று சொல்லி அவர்களின் வாக்குகளைப் பெற்ற திமுக அரசு தொடர்ச்சியாக ஆசிரியர்களை கைவிட்டுவருவது கண்டனத்திற்குரியது. 10 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் தங்களை நிரந்தர ஆசிரியர்களாக ஆக்க வேண்டும் என்ற … Read more

காவல் சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு, வரும் 8-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.!

காவல் உதவி ஆய்வாளர் பணி எழுத்துத் தேர்வுக்கு வரும் 8-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. தமிழக காலவல்துறையில் காலியாக உள்ள காவலர், உதவி ஆய்வாளர் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன. சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகளை நடத்தும். தற்பொழுது தமிழகத்தில் காலியாக உள்ள 444 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு வரும் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் … Read more