தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக பறிமுதல்! 45 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல்.!

இரண்டு நாட்களில் 431 கிலோ தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு 45,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருட்களான உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பைகள்/பொட்டலங்கள், பிளாஸ்டிக் தூக்கு பைகள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், … Read more

ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்த  கர்நாடக மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பாவுக்கு மருத்துவர் இராமதாஸ் இரங்கல்.!

உக்ரைன் போரில் கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உயிரிழப்புக்கு, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர். மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,  “உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார் என்பதை அறிந்து வேதனையடைந்தேன்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 1.உக்ரைன் கார்கிவ் … Read more

குடும்பத்தினர் கண் முன்னே தந்தை மகனுக்கு நிகழ்ந்த கொடூரம்.. சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்..!

குடும்பத்தினர் கண்முன்னே  தந்தை மகன் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் ஷமீர் அகமது. இவர் தனது குடும்பத்தினருடன் நாகூருக்கு சுற்றுலா வந்துள்ளார்.  அப்போது நாகூர் தர்காவில் வழிபாடு முடித்து விட்டு அங்கு உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு  அவரும் அவரது மகன் முகம்மது எனும் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரும் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனை கண்டு அதிர்ச்சி … Read more

தொடர் மோசடி.. வாடகை கொடுக்காததால் சிக்கிய போலி காவல் உதவி ஆய்வாளர்..!

வாடகை கொடுக்காமல ஏமாற்றி வந்த போலி உதவி ஆய்வாளரை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூரில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில்  உதவி ஆய்வாளர் என கூறி பெண் ஒருவர் நீண்ட நாட்களாக தங்கியுள்ளார். அவரிடம் வாடகை கேட்டதற்கு தரமறுக்கவே விடுதி நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் சென்னையைச் சேர்ந்த ரோகிணி  என்பது தெரியவந்தது. அவரிடன் தொடர்ந்து நடத்திய விசாரணையில் காவல் … Read more

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மேலாளர், ஆய்வக உதவியாளர், வணிக தொடர்பு அலுவலர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பி.இ, பி.டெக்,பி.எஸ்சி, எம்பிஏ, எம்.காம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக விருதுநகர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகம் … Read more

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுப்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுப்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் சாலைகள் அமைப்பதற்கான  மண் பற்றாக்குறையால் 1572 கி.மீ நீளத்திற்கான 45 தேசிய நெடுஞ்சாலைத்  திட்டங்கள்  முடங்கிக் கிடப்பதாகவும், அவற்றை விரைவுபடுத்த ஒத்துழைக்கும்படியும்  தலைமைச் செயலருக்கு, மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். நெடுஞ்சாலைப் பணிகள் முடங்குவது வளர்ச்சிக்கு நல்லதல்ல. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு … Read more

தேர்தல் தோல்வியால் மாற்று கட்சிக்கு தாவும் ஈனப்பிறவி நான் அல்ல – மநீம சு.ஆ.பொன்னுசாமி பரபரப்பு அறிக்கை.!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை தலைவரான சு.ஆ.பொன்னுசாமி இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், “என் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட நட்புகளுக்கும், மய்ய உறவுகளுக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் வணக்கம். நேற்று (27.02.2022) ஞாயிற்றுக்கிழமை காலை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து நான் விடுவிக்கப்பட்ட செய்தியை அனைவரும் நன்கறிவீர்கள். இந்நிலையில் கட்சியின் உள்சுற்றறிக்கையாக அனுப்பப்பட்ட அந்த தகவல் ஊடகங்களில் வெளியாகி பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்ததால் இந்த விளக்கத்தை … Read more

மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை .. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று  உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்து நாட்காட்டிபடி பால்குண மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி அன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும். இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று  உள்ளூர் … Read more

திடீரென மத்திய அமைச்சருக்கு போன் போட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின்.!!

முதலமைச்சர் முக ஸ்டாலின் உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை விரைவில் மீட்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைனில் உள்ள மாணவர்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இது தொடர்பாக இன்று (28-2-2022 ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொலைபேசியில் உரையாடினார்.                     … Read more

#வேலூர் || மிஸ்டுகாலில் சிக்கிய பள்ளி மாணவி., காதல்வலைவீசி கடத்திச்சென்று பலாத்காரம்.!

மிஸ்டுகால் மூலம் பள்ளி மாணவிக்கு காதல் வலை வீசி பலாத்காரம் செய்த 19 வயது வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு இவருடைய செல்போனுக்கு தவறுதலாக வந்து உள்ளது. யார் மிஸ்டு கால் கொடுத்தது என்று விவரம் கேட்க மனைவி மறுபடியும் அழைக்கவே, மறு முனையில் … Read more