நாட்டின் முன்னேற்றத்திற்கு பொது உடன்பாடு அவசியம்!

ஒற்றுமை, பொது உடன்பாட்டுடன் முன்னோக்கிச் சென்றால், இலங்கையை உலகில் அபிவிருத்தியடைந்த நாடாக விரைவில் உயர்த்த முடியும். நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது. இன்று நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை வைத்தே எமது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டை விட்டு தனிப்பட்ட இலக்குகளைக் கருத்தில் கொண்டு செயல்படுவது மாபெரும் அழிவின் ஆரம்பமாகும் -பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை. ஒற்றுமை, பொது உடன்பாட்டுடன் முன்னோக்கிச் சென்றால், இலங்கையை உலகில் அபிவிருத்தியடைந்த நாடாக விரைவில் … Read more

வீழ்ந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தினால் நாடு பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளது – ஜனாதிபதி

வீழ்ச்சியடைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் காரணமாக 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் பொருளாதார வளர்ச்சிக்கான பயணம் ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (09) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.. அபாயத்தில் வீழ்ந்திருந்த நாட்டையே தான் பொருப்பேற்றேன். ஒரு கடினமான நேரத்தில் பொருளாதாரத்தையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்கான சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். எந்த நிபந்தனையுமின்றி நாட்டைக் கைப்பற்றினேன், … Read more

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்காக பொதுவான சட்டம் கொண்டு வரப்படும்

• போட்டிமிக்க ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் மட்டுமன்றி, நிகர பூஜ்ஜிய உமிழ்வை நெருங்கும் பசுமைப் பொருளாதாரமும் இலங்கையின் இலக்காகும் – இலங்கை காலநிலை மாற்ற மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு. சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத்திற்காக ஒரேயொரு பொதுச் சட்டம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் போது, ஏற்றுமதி சார்ந்த போட்டிப் பொருளாதாரம் மட்டுமன்றி, 2050 ஆம் ஆண்டளவில் பூஜ்ஜிய உமிழ்வை அடையும் பசுமைப் பொருளாதாரமாக மாற்றியமைப்பதிலும் அரசாங்கம் கவனம் … Read more

2100 புதிய கிராம சேவகர்கள் நியமனம்

விவசாயத்தை முன்னேற்றாமல் கிராமத்தை முன்னேற்ற முடியாது. • கிராமியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு தொடங்கியுள்ள திட்டங்களின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும் – ஜனாதிபதி. விவசாயத்துறையை அபிவிருத்தி செய்யாமல் கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் உட்பட கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் ஆரம்பிக்கும் அனைத்து வேலைத் திட்டங்களையும் வெற்றியடையச் செய்வதற்கு கிராமிய ரீதியாக செயற்படும் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியமானது என ஜனாதிபதி … Read more

பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுங்கள் -அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு

பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட ஏனைய கட்டுமானங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (08) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு பணிப்புரை விடுத்தார். மூன்று கட்டங்களில் கீழ் பிங்கிரிய தொழில் வலயத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், முதல்கட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் … Read more

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 மே 09ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 மே 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய , சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் … Read more

கிளிநொச்சி மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டம் 

கிளிநொச்சி  மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான முதலாவது காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன்  தலைமையில் நேற்று (07)  நடைபெற்றது.  இக் கலந்துரையாடலில் பிரதேச மட்ட காணி பயன்பாட்டு குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட சிபாரிசுகளின் அடிப்படையில், மாவட்ட பயன்பாட்டு குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு சிபாரிசு வழங்கப்பட்டன.  இதன்போது நீண்ட கால குத்தகையில் வழங்கப்பட வேண்டிய வியாபார நிலையங்கள், பிரதேச சபைக்கு பாரப்படுத்த … Read more

யாழ் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதை  அனுமதி 

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும்,  இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பாதுகாப்பு பிரிவினரிடம் நேற்று  (07/05/2024) தெரிவித்தார்.  ஒட்டகப்புலம் பகுதிக்கு  நேற்று விஜயம் செய்த ஆளுநர் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டதுடன், காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார். யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி ) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.    வசாவிளான் … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 மே 09ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 மே 07ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் (மே 08ஆம்திகதிக்குப் பின்னர்) மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. … Read more

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய ஜனாதிபதி நிதியத்தினால் மற்றுமொரு புலைமைப் பரிசில் அறிமுகம்

• பிரிவெனா மற்றும் பெண் பிக்குணி கற்றை நிறுவனங்களில் கற்கும் பிக்கு மற்றும் பிக்குணி மாணவர்களுக்கும் ஏனைய மாணவர்களுக்கும் புலைமை பரிசில். • க.பொ.த உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர்களுக்கும் புலைமை பரிசில் வேலைத்திட்டம் – 2024 மே 22ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு ஜனாதிபதி நிதியம் கோரிக்கை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய தற்போது வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு புலமைப்பரிசில் திட்டங்களை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, பிரிவெனா மற்றும் … Read more