நாடு பூராகவும் பாண் எடை தொடர்பான விசேட சுற்றி வளைப்புக்கள்

பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையினால் 01.02.2024 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க விற்பனைக்காக தயாரிக்கப்படும் பாண்களின் நிறை குறித்து வர்த்தக நிலையங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்டத்தில் பாண் எடை தொடர்பான விசேட சுற்றி வளைப்புக்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன. மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, ஆரையம்பதி, ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி ஆகிய நகர்ப் பிரதேசங்களில் இயங்கும் ஹோட்டல்கள் மற்றும் வெதுப்பகங்களில் பாண்களின் எடை தொடர்பான சுற்றிவளைப்புக்கள் மாவட்ட பாவனையாளர் … Read more

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வழிகாட்டலுடன் தொழிற்சந்தை

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை நேற்று (07) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. “76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 76 இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குதல்” என்ற தொனிப்பொருளில் இவ்வேலைத்திட்டமானது நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் பி.ஆர்.சுமித்கொட்டின்கடுவ, தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரனி, இளைஞர் … Read more

நாடு முழுவதும் சீரான வானிலை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 பெப்ரவரி 08ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 பெப்ரவரி 07ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2024 இல் தேர்தல்களை நடாத்துவதற்காக பத்து பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

இவ்வாண்டில் தேர்தல்களை நடத்துவதற்காக பத்து பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது அமைச்சர் இது தொடர்பாக தொடர்ந்தும் குறிப்பிடுகையில்; 2024ஆம் ஆண்டில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களுக்காக மாத்திரம் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அவ்வாறே அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விசாரணை … Read more

புனரமைக்கப்பட்ட ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது

இயல்பான திறமைகளைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சம வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட “தேசிய கிரிக்கெட் அபிவிருத்திப் பாதை ” எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக தம்புள்ள மைதானத்தில் நிறுவப்பட்ட ‘தனித்துவ மையம்’ (05) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து, தனித்துவ மையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார். இதன் கீழ் நீர் சிகிச்சைப் பிரிவு மற்றும் விளையாட்டு காயங்களை … Read more

ஏனைய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, மீண்டும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படாத நிலையை உருவாக்குவோம்

இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திடவும் திட்டம் – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி. நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் வலுப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்த வருட இறுதிக்குள் இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம் மற்றும் சீனா ஆகிய … Read more

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்த பிராந்தியத்தின் ஒத்துழைப்பு அவசியம் – ஜனாதிபதி தெரிவிப்பு

காலநிலை அனர்த்தங்களுக்கு தீர்வுகளை தேடுவதற்கு பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான முயற்சிகளுக்கு இலங்கை முழுமையான ஆதரவை வழங்குமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்காக இலங்கையில் சர்வதேச காலநிலைப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க தீர்மானித்திருப்பதாகவும், ஆசிய மற்றும் ஆபிரிக்க வலயங்களின் காலநிலை சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கான முக்கியமான பணியை அதனால் ஆற்ற முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேலும், அண்மையில் டுபாயில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாடான COP 28 … Read more

குறைந்த வருமானம் பெறும் 50,000குடும்பங்களுக்கு அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கான பூரண உரிமை வழங்கப்படும்

குறைந்த வருமானம் பெரும் 50,000குடும்பங்களுக்கு அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு பூரண உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி, பொருளாதார ஸ்தீரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைவாக நகர வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தொடர்மாடி வீடுகளின் உரிமையை உடனடியாக அச்சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கே வழங்குவதற்காக … Read more

கல்வி நிருவாக சேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவில் நடவடிக்கை

கல்வித் துறையில் பல பதவிகளில் காணப்படும் பெரும்பாலான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். அதற்கிணங்க கல்வி நிருவாகம், அதிபர், ஆசிரிய பயிற்றுனர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், போன்ற சேவைகளில் மற்றும் ஆசிரியர் சேவையில் புதிய நியமனங்கள் பல மிக விரைவில் வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட அமைச்சர் இது தவிர பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் காணப்படும் சேவை நிலையங்களில் இடமாற்றங்களை வழங்குவதன் ஊடாக உத்தியோகர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி … Read more

நாட்டு நலனுக்காக பொதுவான ஒருமித்த கருத்துடன் இணையுங்கள்!

தத்தமது தனிப்பட்ட கனவுகளுக்காக அல்ல, நாட்டின் பொதுவான கனவை நனவாக்க புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம். அரசியல் ஆதாயத்துக்காக நான் முடிவுகளை எடுக்கவில்லை. நாட்டின் நலனுக்காகவே எப்போதும் முடிவுகள் எடுத்தேன். விண்கல் வேகத்தில் சரிந்த நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்த்தப்பட்டது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் மற்றும் கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கான பாதையில் ஒரு மைல் கல்லாக இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மறுசீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் – ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து … Read more