மட்டக்களப்பில் வீதியோர வியாபார நிலையங்கள் திடீர் முற்றுகை!!

மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடி பகுதிகளில் வீதியோரமாக உள்ள வியாபார நிலையங்களை மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதன் போது 7 வியாபார நிலையங்களில் மனித பாவனைக்கு உதவாத கெரட், கருவா, வாழைப்பழம், தோடம்பழம், இனிப்புப் பண்டமான பூந்தி போன்ற பெருமளவிலான பொருட்களை கைப்பற்றியதாகவும், அவற்றை அழிக்கும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் த.மிதுன்ராஜ் தெரிவித்தார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட … Read more

வடமாகாண வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும்

தேசிய பொருளாதாரத்திற்கு வடமாகாணம் செயலூக்கத்துடன் பங்களிப்பதற்கு வர்த்தக அபிவிருத்தி இன்றியமையாததாகும் – ஜனாதிபதி வலியுறுத்தல். ஜனாதிபதி மற்றும் யாழ்.பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கு இடையில் சந்திப்பு. பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றத்திற்குத் திட்டம். வடமாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் எதிர்வரும் 02 வாரங்களில் வடக்கிற்கு விஜயம் செய்து இவ்விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும், வடமாகாண வர்த்தக சமூகத்தினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு … Read more

ஜனாதிபதி மற்றும் யாழ் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

வடமாகாணத்திற்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் யாழ். சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த்துக்கும் இடையிலான சந்திப்பொன்று (06) பிற்பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வடக்கின் சிவில் சமூகத்தில் நிலவும் சாதிப் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அந்தப் பிரச்சினைகளை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வடக்கிலுள்ள அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்பட்டாலும் சாதிப் பிரச்சினையால் மக்கள் அவதிப்படுவதாகவும், யாழ்ப்பாணத்தை தவிர்த்து கொழும்பில் … Read more

முன்னுரிமை அடிப்படையில் வடக்கில் சுகாதாரம் மற்றும் கல்வி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவாக நிதி ஒதுக்கப்படும் – ஜனாதிபதி

முன்னுரிமை அடிப்படையில் வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதன் கீழ் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு காணி ஒதுக்கீடு மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். (06) யாழ்.மாவட்டச் செயலகத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் தொடர்பில் இளைஞர் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். சுகாதாரத்துறை, … Read more

நாட்டைக் கட்டியெழுப்பும் அபிவிருத்தித் திட்டத்தில் இணையுங்கள் – பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

மனித வளமே ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு உந்து சக்தியாக அமைகின்றது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு திறைசேரி செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு வாய்ப்பு. ஆங்கில அறிவை மேம்படுத்த விசேட கவனம். குறிப்பிட்ட காலத்திற்குள் பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்யும் வகையில் எதிர்காலத்தில் புதிய சட்டம். பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்லும் வேலைத்திட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முக்கிய பங்கு வகிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். விவசாயம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் … Read more

பெப்ரவரி முதல் வாரத்தில் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மின்சாரக் கட்டணம் மீளாய்வு செய்யப்படும் எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். புதிய உற்பத்தித் திட்டத்தின்படி, 2024 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியிலிருந்து சுமார் 600 மெகாவாட் மின்சாரம் பெறப்படும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மின்சக்தி … Read more

மட்டக்களப்பிற்கு உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தின் உயர் அதிகாரிகள் விஜயம்!!

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தின் தேசிய ரீதியான பொது மக்கள் கருத்தறியும் உண்மையை கண்டறியும் குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவர்த்தன தலைமையிலான குழுவினர் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் உண்மையை கண்டறியும் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக இதன் போது விளக்கங்களை வழங்கியிருந்தனர். மேலும் பாமர மக்களின் … Read more

இலங்கையின் கொள்கை சீர்திருத்தங்கள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐக்கிய நாடுகளின் உதவிப் பொதுச் செயலாளரும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (UNDP) ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணிப்பாளருமான திருமதி கன்னி விக்னராஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று (2024.01.04) அலரி மாளிகையில் இடம்பெற்றது. திருமதி விக்னராஜா இலங்கையின் சமூக மற்றும் அரசியல் அபிவிருத்திக்காக எடுக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (UNDP) கீழ் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தார். இலங்கையின் பாதிக்கப்பட்ட மக்களை வலுவூட்டுவதில் பிரதமரின் பங்கை அவர் பாராட்டினார். … Read more

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும், உகண்டா நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகருக்கிடையில் சந்திப்பு

பொதுநலவாய அமைப்பின் சபாநாயகர்களின் (CSPOC) 27வது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உகண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன உகண்டாவின் ஜனாதிபதி கௌவர யோவேரி முசவேனி, கௌரவ பிரதமர் ரொபின் நபஞ்ஜ, உகண்டா சபாநாயகர் கௌரவ அனிடா அனெத் அமங் ஆகியோரைச் சந்தித்தார். அத்துடன், சபாநாயகருக்கும் உகண்டாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஓரியம் ஹென்றி ஒய்கெலோ ஆகியோருக்கும் இடையிலும் சந்திப்பொன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்புக்களில் இலங்கைக்கும் உகண்டாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து … Read more

அவுஸ்திரேலிய, விக்டோரியாப் பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழு பாராளுமன்றத்துக்கு விஜயம்

அவுஸ்திரேலிய, விக்டோரியாப் பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ லீ டார்லமிஸ் OAM (Lee Tarlamis OAM), கௌரவ (திருமதி) பவுலின் ரிச்சர்ட்ஸ் (Pauline Richards) மற்றும் கௌரவ காரி மாஸ் (Gary Mass) உள்ளிட்ட தூதுக்குழுவினர் (04) பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தனர். இதன்போது, இந்தத் தூதுக் குழுவினர் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவை சந்தித்ததுடன், இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம், இரண்டு பாராளுமன்றங்களிலும் காணப்படும் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள், தேர்தல் … Read more