கிரிக்கெட் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு
பரிந்துரைகளை செயற்படுத்தத் தயாராகும் ஜனாதிபதி. குறுகிய காலத்தில் அறிக்கையை தயாரித்தமைக்காக ஜனாதிபதி பாராட்டு இலங்கை கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி, மேற்படி குழுவின் அறிக்கையை நேற்று (01) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தார். அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டதிலிருந்து ஒன்றரை மாதம் என்ற குறுகிய காலத்திற்குள் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். கடந்த நவம்பர் 06 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானத்துக்கமைய … Read more