பொலன்னறுவை கல்லேல்ல மற்றும் கொடலிய பாலம் அருகில் நீர் மட்டம் அதிகரிப்பு

தற்போதைய பருவ மழையினால் பொலன்னறுவை மற்றும் கொடலிய பாலம் அருகில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதனால் பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கல்லேல்ல மற்றும் கொடலிய பாலத்தின் ஊடாக வாகனங்கள் செல்வதை இடைநிறுத்தியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழகக்கோன் தெரிவித்தார். அதேவேளை பொலன்னறுவை மின்னேரியக் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் அதன் வான்கதவினூடாக 1000 கன அடி வேகத்தில் செல்வதாக … Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் நெற்பயிர்கள் பாதிப்பு

அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டம் பாண்டியன்குளம், மற்றும் துணுக்காய் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் விவசாயிகளின் நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வவுனிக்குள நீர்ப்பாசன திட்டத்தின் கீழான பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட பகுதிகளில் விவசாயிகள் வெள்ளத்திற்கு முதல் மடிச்சு கட்டி மற்றும் கபிலநிற தத்தி போன்ற நோய்களின் தாக்கங்கள் அதிகரித்து காணப்பட்டாலும் , அவற்றிலிருந்து காப்பாற்றி வயல்நிலங்களை பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தினால் தற்போது அவை அழிவடைந்திருப்பதாகவும், இந்த அரசாங்கம் … Read more

வலுவான நாட்டை கட்டியெழுப்ப, அனைவரும் இலங்கையர்களாக முன்வர வேண்டும்

முஸ்லிம் மார்க்கக் கல்வி தொடர்பான பிரச்சினைக்கு விரைவான தீர்வு. மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட கவனம். பயங்கரவாதத்துடன் எந்த தொடர்புமற்ற, புரட்சியை ஏற்படுத்தாத கருத்து வெளிப்பாடுகள் அனுமதிக்கப்பட வேண்டும். வளமான ஐக்கிய இலங்கைக்காக ஒன்றிணைந்து செயற்படுவோம் – அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு. வளமான மற்றும் ஐக்கிய இலங்கையை உருவாக்குவதற்கு புத்தாண்டில் ஒன்றுபட்டு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.! நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும், இன்று நாடு நிறைவேற்ற … Read more

ஏறாவூர் நகரசபையின் கணக்காய்வு முகாமைத்துவக் குழுவின் கலந்துரையாடல்

ஏறாவூர் நகரசபையின் 2023 இந்த வருடத்திற்கான இறுதி கணக்காய்வு முகாமைத்துவக் குழுவின் கலந்துரையாடல் சபையின் செயலாளர் எம்.எச்.எம் ஹமீம் தலைமையில் (22) நடைபெற்றது. மட்டக்களப்பு கணக்காய்வுத் திணைக்கள அத்தியட்சகர் என். நிசாந்தன், மாகாண கணக்காய்வு உத்தியோகத்தர், ஏறாவூர் நகரசபை நிதி உதவியாளர் நிஸா லாபிர், உட்பட அலுவலக கிளைத்தலைவர்கள், உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டனர். கணக்கீட்டு அறிக்கையிடல் தொடர்பாக இந்த ஆண்டு ஏறாவூர் நகரசபை இரண்டு விசேட விருதுகளைப் பெற்றதற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டதுடன் ஏறாவூர் நகரசபையில் … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்புத் தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புப் பரவலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (27) இடம்பெற்றது. மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆ. நவேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மாவட்ட பிராந்திய பிரதி சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ஆர். நவலோஜிதன் டெங்குப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கினார். இதன்போது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊழலுக்கு எதிரான புதிய சட்டம் தொடர்பாகத் தெளிவுபடுத்தும் செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊழலுக்கு எதிரான புதிய சட்டம் தொடர்பாக மாவட்ட செயலக அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று (28) செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. ஜே. முரளீதரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இச்செயலமர்வில் உதவி மாவட்டச் செயலாளர் ஆ. நவேஸ்வரன் மற்றும் சமுர்த்திப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் ஆகியோர் வளவாளர்களாக செயற்பட்டனர். இச்செயலமர்வில் பொதுச் சேவையில் ஈடுபடும் கனிஷ்ட, சிரேஷ்ட மற்றும் பதவிநிலை வரை சகல மட்டங்களிலுமான … Read more

பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சந்திப்பு

பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பிள்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் (27) சந்தித்தார். இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அரசியல் முன்னேற்றங்கள் உட்பட பல விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது, கலந்துரையாடப்பட்டதாக உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பிள்டன் தமது எக்ஸ் கணக்கில் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், சமூக ஒற்றுமை, அரசியலமைப்பு ஏற்பாடுகள் தொடர்பாக நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் கடைப்பிடித்த … Read more

கையடக்க தொலைபேசிகளைக் கொள்வனவு செய்வதற்கு தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வின் அனுமதி அவசியம்

கையடக்கத் தொலைபேசியொன்றைக் கொள்வனவு செய்யும் போது தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் ஊடாக அனுமதிக்கப்பட்ட தொலைபேசியையே கொள்வனவு செய்ய வேண்டும் என ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் மேனகா பதிரண தெரிவித்தார். அதற்கிணங்க கொள்வனவு செய்யும் போது எதிர்பார்க்கப்படும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்காக குறுஞ்செய்தியொன்றை அனுப்புவதன் ஊடாக மேற்கொள்ளலாம் என்றும் ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் குறிப்பிட்டார். எந்தவொரு தொலைபேசி வலையமைப்பிற்காக ஊடாக IMEI என்று டைப் செய்து … Read more

பிரதமர் தினேஷ் குணவர்தன கிரீஸ் பிரதமருக்கு வாழ்த்து..

பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தற்போதைய அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும், மீண்டும் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக நேற்று (2023.12.27) வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஆழமான, நீண்டகால நாகரீக உறவுகளையும் வலுவான நட்புறவினையும் மேலும் மேம்படுத்துவதற்கு கிரீஸ் … Read more

தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் (26) உணர்வுபூர்வமாக தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளீதரனின் ஆலோசனைக்கு அமைவாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது. இதன் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதனை தொடர்ந்து அனர்த்தங்களால் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தேசிய … Read more