பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

– இரண்டு மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களை நியமித்தார். இந்த நியமனங்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும். கல்வி அமைச்சின் செயலாளராக திருமதி வசந்தா பெரேரா, நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக என். எம். ரணசிங்க, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக குணதாச சமரசிங்க … Read more

சர்வதேச மீனவர்கள் தினத்தை முன்னிட்டு மீனவர் தின ஓவியங்கள் 2023

சர்வதேச மீனவர்கள் தினத்தை முன்னிட்டு, கடற்றொழில் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் 09 மாகாணங்களையும் உள்ளடக்கிய மீனவர் தின ஓவியங்கள் 2023 என்ற பெயரில் நாடளாவிய ரீதியில் சித்திரப் போட்டி நடாத்தப்பட்டதுடன், நேற்று (22) கடற்றொழில் அமைச்சில், சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த தலைமையில் இடம்பெற்றது. இப்போட்டிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட சித்திரங்கள்; சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், நுண்கலை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் கொண்ட குழு வெற்றியாளர்களை தெரிவு … Read more

எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் போதைப்பொருள் வர்த்தகமும் பாதாள உலக செயற்பாடுகளும் ஒடுக்கப்படும்!

எதிர்கால சந்ததியினர் அச்சமோ சந்தேகமோ இல்லாமல் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாதாள உலக செயற்பாடுகளையும் ஒடுக்கும் நடவடிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூரண ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அதனால் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் போதைப் பொருள் வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். நாட்டிற்கு பெரும் கேடாக விளங்கும் போதைப்பொருள் பாவனையையும் பாதாள உலக செயற்பாடுகளையும் ஒடுக்க அனைவரும் ஒத்துழைக்க … Read more

சுற்றாடலுக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் தீர்மானமிக்க பொறுப்புக்கள் இளம் சமூகத்தினரை சார்ந்துள்ளது.

– தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சுற்றாடல் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் தீர்மானமிக்க பொறுப்புக்கள் இளம் சமூகத்தினரை சார்ந்துள்ளதென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். உலகளாவிய காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்காக இலங்கை முன்நின்று செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், சுற்றாடலுக்காக இளம் சமூகத்தினரின் அர்பணிப்புக்களையும் பாராட்டினார். இளம் தலைவர்களைப் பாராட்டுவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் (20) … Read more

ஜனாதிபதியின் வழிகாட்டலில் 38 வது தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் கடெற் வோக்!!

தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் 142 வருட நிறைவினை முன்னிட்டு இன்று (22) மட்டக்களப்பில் தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் கடெற் வோக் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் பாதுகாப்பு அமைச்சின் நிகழ்சி நிரலுக்கு அமைவாக  தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் சிறப்பம்சங்களை வெறியுலகிற்கு வெளிப்படுத்தும் வண்ணம் தேசிய ரீதியில் இன்றைய தினம் கடெற் வோக் இடம்பெற்று வரும் நிலையில் மட்டக்களப்பில் 38 வது தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் கடெற் வோக் மிகச்சிறப்பாக … Read more

பிரதேச மட்ட அரச அபிவிருத்தி செயற்பாடுகளை ஊடக மயப்படுத்த மட்டக்களப்பு மாவட்ட செயலகம் நடவடிக்கை!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச மட்டங்களில் இடம்பெறும் அரச அபிவிருத்தி செயற்பாடுகளை ஊடக மயப்படுத்த மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைவாக பிரதேச செயலக பிரிவுகளில் இடம்பெறுகின்ற அரச நிகழ்வுகள், அபிவிருத்தி செயற்பாடுகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை மாவட்ட ஊடகப் பிரிவிற்கு வழங்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தனின் தலைமையில் (21) வியாழக்கிழமை மாவட்ட செயலக … Read more

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய செயலாளராக பிரதீப் யசரத்ன நியமனம்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் இரண்டு பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நியமனங்கள் 2024 ஜனவரி 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய செயலாளராக திரு. பிரதீப் யசரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். மேல் மாகாண பிரதம செயலாளராக கடமையாற்றிய அவர் இலங்கை நிர்வாக சேவையின் (SLAS) விசேட தர அதிகாரியும் ஆவார்.அவர் பல முக்கிய அரச நிறுவனங்களில் நிறைவேற்று நிலை … Read more

விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டத்தை செயல்படுத்தி, வெற்றிகரமான பிரதிபலன்களைப் பெற வேண்டும்! ஜனாதிபதியின் செயலாளர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

இதுவரை இருந்த விவசாய வேலைத்திட்டங்களைப் போன்று இடைநடுவில் நிறுத்தாது, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, பிரதிபலன்களைக் காண்பிக்கத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் பிரச்சினைகளை துறைசார் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்ற, விவசாயத்தை நவீனமாக்கல் தொடர்பாக அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்த … Read more

மூன்று வருடங்களின் பின்னர் மாகாணங்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட வரவு செலவிற்காக 11,250 மில்லியன்

– அந்த நிதி எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் மாவட்டச் செயலாளர்களுக்கு – நாட்டின் பொருளாதாரத்திற்கு நிகராக கிராமிய பொருளாதாரத்தையும் மீள உயிர்பிக்க வேண்டும். – மத்திய அரசாங்கம், மாகாண சபைகள் என்ற பிரிவை விடுத்து அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான வேலைத்திட்டம் அவசியம் – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்களின் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு மூன்று வருடங்களுக்கு பின்னர் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 11,250 மில்லியன்கள், மாவட்டங்களுக்காக விரிவுபடுத்தப்பட்ட வரவு செலவாக ஒதுக்கப்பட்டிருப்பதால், எதிர்வரும் ஜனவரி … Read more

ஜனாதிபதிக்கும், வடக்கு கிழக்கு தமிழ் எம்.பிக்களுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்றது. இதன்போது நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது. காணி, மீள் குடியமர்த்தல், நல்லிணக்கத்திற்கு அமைவாக சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழக அகதி முகாம்களில் இருக்கும் இலங்கையரின் பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் சாத்தியமான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ, உயர்கல்வி … Read more