இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை

நாட்டில் வழமையான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், எரிபொருள் விநியோக கடமைகளில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலும் செயற்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுமுறையில் சென்றவர்களாக கருதப்படுவர் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. மேலும், இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபன வளாகம், இலங்கை பெற்றோலிய சேமிப்பு … Read more

அடக்குமுறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது – கடற்றொழில் அமைச்சர்

தற்போதைய அரசாங்கம் அடக்குமுறைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்காது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். துஸ்டர்களினால் சின்னாபின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயத்தினை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக, நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையம் பொது மக்களின் பாவனைக்காக நேற்று (28) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமானும் இந்த விடயத்தினை தன்னோடு … Read more

பதில் ஊடகத்துறை அமைச்சராக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நியமனம்

இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார ஊடகத்துறை அமைச்சின், பதில் ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன வெளிநாட்டுப்பயணமொன்றை மேற்கொண்டுள்ள காரணத்தினால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று (28) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வலுசக்தி துறையில் பசுமை முதலீடுகளை அணிதிரட்ட இலங்கை தயார் – காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவிப்பு

பசுமை வாய்ப்புக்கள் ஊடாக தற்போதைய நிலையிலிருந்து இலங்கையை மீட்பதே ஜனாதிபதியின் நோக்கு- ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு வலுசக்தி துறைக்குள் பசுமைய முதலீடுகளை அணிதிரட்ட இலங்கை தயாராகவிருப்பதாகவும் அதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீ்ட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் (27) நடைபெற்ற இலங்கை பசுமை வலுசக்தி மாநாடு – 2023 இன் தலைவர் என்ற வகையில் … Read more

கைவிடப்பட்டது இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று (28) நடைபெறயிருந்த நிலையில், மழையினால் இப்போட்டி கைவிடப்பட்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையின் காரணமாக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது. எனினும் இத்தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையில் 31 ஆம் திகதி 6.30 மணிக்கு மூன்றாவது ஒருநாள் போட்டி … Read more

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் குறித்த தேசியக் கொள்கைக்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பிற்கு UNFPA பாராட்டு

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கையை அங்கீகரிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் அர்ப்பணிப்பை ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) பாராட்டியுள்ளது. ஜனாதிபதியின் இந்த அர்ப்பணிப்பு, இலங்கையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், உரிமைகள் ஆகியவற்றை உறுதி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக அந்த நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் மதிப்பீட்டு அலுவலகப் பணிப்பாளர் மார்கோ செகோன் உள்ளிட்ட பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை … Read more

22 இலட்சத்திற்கும் மேற்பட்ட நலன்புரி விண்ணப்பங்களின் தகவல்களைச் சரிபார்க்கும் செயல்முறை நிறைவு

மார்ச் 31 ஆம் திகதிக்கு முன் சரியான தகவல்களை வழங்கி பலன்களை இழப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு விண்ணப்பதாரிகளிடம் கோரிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தில், தற்போது நடைபெற்று வரும் தகவல் கணக்கெடுப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கை மூலம் பெறப்பட்ட 22 இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. நாடளாவிய ரீதியில் 340 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து பெறப்பட்ட 37 … Read more

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஜெர்மனியின் ப்ரெமன் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியின் ப்ரெமன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது ஏற்கனவே 2017 இல் கைச்சாத்திடப்பட்துள்ளதுடன் அது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் மற்றும் ப்ரெமன் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியரும் விஞ்ஞானியுமான டாக்டர் இங் அன்றியஸ் கொன்ச்கென் ஆகியோரால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

கச்சதீவில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை – இலங்கை கடற்படையினர்

கச்சதீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கச்சதீவு புத்தர் சிலை விவகாரம் குறித்து இலங்கை கடற்படையினர் நேற்றைய தினம் (27) விளக்கமளித்த போதே இதனை தெரிவித்துள்ளனர். கச்சதீவில் வேறு எந்த விஹாரை அல்லது மத நினைவுச்சின்னத்தை நிர்மாணிக்கும் எண்ணம் கடற்படைக்கு இல்லை என்றும் கடற்படையினர் வலியுறுத்தியுள்ளனர். கச்சதீவில் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களை நிர்மாணித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து கடற்படையினர் இந்த … Read more

பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கை மாற்றப்படும்

அடுத்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கான பசுமைப் பொருளாதாரக் கொள்கை. – பசுமை வலுசக்தி உச்சி மாநாட்டில் பங்குபற்ற வருகை தந்த முதலீட்டாளர்கள் முன்னிலையில் ஜனாதிபதி தெரிவிப்பு. பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடத்திற்கு வந்ததைப் போன்று, பசுமைப் பொருளாதாரக் கொள்கையிலும் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே தனது எதிர்பார்ப்பு எனவும் … Read more