தற்போதைய பொருளாதார சவால்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசிக்குமாறு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் இலங்கையை ஊக்குவிப்பு

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிகுன், சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹோனவுடனான சந்திப்பின் போது, இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் ஆலோசிக்குமாறு இலங்கையை ஊக்குவித்தார். 2030ஆம் ஆண்டளவில் இலங்கை தனது ஆற்றல் தேவைகளில் 70% ஐப் பெறுவதற்கான இலக்கை அடைய உதவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் விளக்கினார். இலங்கைத் தூதரகம், பெய்ஜிங் 2022 … Read more

மின்துண்டிப்பு: பாடசாலைகளுக்கு ஏப்ரல் விடுமுறையை முன்கூட்டியே வழங்க ஆலோசனை

தற்போது நிலவும் நீண்ட நேர மின்துண்டிப்பு காரணமாக பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கவனத்திற்கொண்டு, ஏப்ரல் மாத விடுமுறையை சில தினங்களுக்கு முன்னதாக வழங்குமாறு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, கல்வி அமைச்சை கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கமைவாக 4 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க கல்வி அமைச்சை கோரியுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரங்களின் அனுமதி காலத்தை நீடிக்கப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் அனுமதி காலத்தை நீடித்து, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் (31) முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதற்கமைவாக, நேற்று தொடக்கம் எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நிறைவடையும் சாரதி அனுமதிப் பத்திரங்களின் அனுமதி காலம், ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜூலை மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகி, செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி நிறைவடையும் சாரதி … Read more

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அறிக்கை

  இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் அப்பட்டமான பொய்யானதும் முற்றிலும் ஆதாரமற்றதுமான செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் உறுதியாக நிராகரிக்கின்றது. 2.    இவ்வாறான பொறுப்புணர்வற்ற செய்தியிடலை உயர் ஸ்தானிகராலயம் கண்டிக்கும் அதேநேரம் சம்பந்தப்பட்டதரப்பினர் வதந்திகளை பரப்புவதை தவிர்க்கவேண்டுமெனவும் எதிர்பார்க்கின்றது.   இந்திய உயர் ஸ்தானிகராலயம் கொழும்பு 02 ஏப்ரல் 2022   2.    இவ்வாறான பொறுப்புணர்வற்ற செய்தியிடலை உயர் ஸ்தானிகராலயம் கண்டிக்கும் அதேநேரம் சம்பந்தப்பட்டதரப்பினர் வதந்திகளை பரப்புவதை தவிர்க்கவேண்டுமெனவும் எதிர்பார்க்கின்றது.   … Read more

இந்திய இராணுவத்தைச் சேர்ந்த எவரும் நாட்டுக்குள் நுழைய வில்லை – பாதுகாப்பு அமைச்சு

இந்திய இராணுவத்தைச் சேர்ந்த எவரும் நாட்டுக்குள் நுழைய வில்லை என்று பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சு இன்று (02) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

மாலை 6.00 மணியிலிருந்து திங்கட்கிழமை காலை 6.00 மணிவரை நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம்

இன்று மாலை 6.00 மணியிலிருந்து திங்கட்கிழமை காலை 6.00 மணிவரை நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் பொதுமக்களின் பாதுகாப்பு சட்டத்தினால் ஜனாதிபதியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு இன்று (ஏப்ரல் 02) மாலை 6.00 மணியிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 04) காலை 6.00 மணிவரை நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்படுகிறது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் – 2022 சனவரி

ஏற்றுமதிகளிலிருந்தான உயர்ந்தளவிலான வருவாய்கள் தொடர்ச்சியாக எட்டாவது தடவையாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனை விஞ்சிய பெறுமதிகளைக் கொண்டிருந்த போதிலும், இறக்குமதி செலவினம் விரிவடைந்தமையின் மூலம் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை 2021 சனவரியுடன் ஒப்பிடுகையில் 2022 சனவரியில் விரிவடைந்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியிலும் பார்க்க 2022 சனவரியில் குறிப்பிடத்தக்கதொரு மீட்சியினைக் காண்பித்திருந்த வேளையில், தொழிலாளர் பணவனுப்பல்களின் மிதமான தன்மையொன்று 2022 சனவரியில் பதிவுசெய்யப்பட்டது. அதேவேளை, ஐ.அ.டொலர் 500 மில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு … Read more

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் அரிசி விலை அதிகரிப்பதை தடுக்க நடவடிக்கை

நெல் சந்தைப்படுத்தம் சபை பெரும்போகத்தில் கொள்வனவு செய்த நெல்லை அரியாக்குவதற்கு கூட்டுறவு மற்றும் சதொச நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் அரிசி விலை அதிஇகரிப்பதை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் ஐயாயிரம் மெட்ரிக் தொன் நெல் தற்போது அரிசியாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொள்வனவு செய்யப்பட்ட நெல்லைக் கூட்டுறவு மற்றும் சதொச நிறுவனங்களுக்கும் ஏனைய தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கும் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நெல் கொள்வனவு சபையின் பொலன்னறுவை மாவட்ட முகாமையாளர் … Read more

திருகோணமலை,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களில் 100 மி.மீ மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.  2022 ஏப்ரல்02ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது   நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.   நாட்டின் மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ … Read more