தற்போதைய பொருளாதார சவால்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசிக்குமாறு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் இலங்கையை ஊக்குவிப்பு

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிகுன், சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹோனவுடனான சந்திப்பின் போது, இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் ஆலோசிக்குமாறு இலங்கையை ஊக்குவித்தார்.

2030ஆம் ஆண்டளவில் இலங்கை தனது ஆற்றல் தேவைகளில் 70% ஐப் பெறுவதற்கான இலக்கை அடைய உதவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் விளக்கினார்.

இலங்கைத் தூதரகம்,

பெய்ஜிங்

2022 ஏப்ரல் 01

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.