மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான காஸ் சிலிண்டர்கள்

ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் மறைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான காஸ் சிலிண்டர்களை பொலிசார் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட காஸ் சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதே இடத்தில் வைத்து மக்களுக்கு அவை விற்பனை செய்யப்பட்டமை சிறப்பம்சமாகும். இதேவேளை சில எரிபொருள் நிரப்பகங்களில் எரிபொருள் இல்லை என்று கூறி ஒரு சில தரப்புகளுக்கு மாத்திரம் இரகசியமான முறையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளார்கள். … Read more

2021 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை: மட்டக்களப்பு மாவட்டத்தில் 1271 மாணவர்கள் சித்தி!!

20 21 ஆம் ஆண்டிற்க்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1271 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களில் இருந்து கடந்த ஆண்டு 9726 மாணவர்கள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் அதில் இம்முறை சுமார் 1271 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். இதனடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலையத்தில் இருந்து 2051 மாணவர்கள் பரீட்சைக்கு தகுதிபெற்றிருந்த நிலையில் 449 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் … Read more

கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம்

நேற்று (14) இலங்கையில் கொவிட் – 19 க்கு எதிராக மேலும் 25 ஆயிரத்து 14 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 302 பேருக்கும், இரண்டாவது டோஸ் 903 பேருக்கும் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோapay; பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (14) பைசர் தடுப்பூசியின் முதல் டோஸை 2 ஆயிரத்து 503 பேர் பெற்றுக்கொண்டனர், அதே நேரத்தில் இரண்டாவது டோஸினை 7 ஆயிரத்து 831 பேர் பெற்றுக்கொண்டனர். மேலும், 13 ஆயிரத்து … Read more

முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாத்துறைக்கு 583 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாத்துறை 583 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 117.5 பில்லியன்) வருமானமாக பெற்றுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி, சுற்றுலாத்துறை ஜனவரியில் 268 மில்லியன் அமெரிக்க  டொலர்களையும். பெப்ரவரியில் 314.5 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வருமானமாக பெற்றது. இருப்பினும் இதற்கு மாறாக 2021 ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களிலும் 16.4 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமே பெறப்பட்டது. இந்த ஆண்டு பெப்ரவரியில் 1 இலட்சத்து 78 ஆயிரத்து 834 சுற்றுலாப் … Read more

ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கிடையே  சந்திப்பு…

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் இன்று, (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சாங்யோங் ரீ (Changyong Rhee),  பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஏன்-மெரீ கல்டே-வூல்ஃப் (Anne-Marie Gulde-Wolf) மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி டுபாகஸ் பெரிடானுஸெட்யாவான் (Tubagus Feridhanusetyawan) ஆகியோர் இதில் அடங்குவர். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், … Read more

புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் எந்தத் தடையும் கிடையாது

புலம்பெயர் அமைப்புக்கள்  இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு எந்தத் தடையும் கிடையாது. முதலிடுவதற்கான வாய்ப்புக்களைப் வழங்க சமகால அரசாங்கம் தயாராகவுள்ளது என்று வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு உரிமைகள் இல்லை என்று கூறுபவர்கள் அதற்கான விடயங்கள் தெளிவாக முன்வைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் ,புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்தால் அதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படும் என்று ‘சவால்கள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புடன் வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்தல்’ … Read more

வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இன்று தொடக்கம் பைசர் டோஸ் தடுப்பூசி

இதுவரையில் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாமல் வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ள நபர்களுக்கு இன்று தொடக்கம் பைசர் டோஸ் 3 பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பைசர் 3 ஆவது டோஸாக பெற்றுக்கொள்ள முடிகின்றமை பூஸ்டர் மருந்தே ஆகும். இதற்கமைவாக தொழில் காப்புறுதியுடன் அல்லது கல்வி நடவடிக்கைகளுக்காக வெளியேறும் எந்தவொரு நபரும் இந்த தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதேவேளை அவுஸ்ரேலியா செல்லும் நபர்களுக்காக 4 … Read more

ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் இலங்கைப் பிரதிநிதிகள் பங்கேற்பு

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில், நீதி அமைச்சர் அலி சப்ரி, உற்பத்தி வழங்கல் மற்றும் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திரு. நெரின் புள்ளே ஆகியோரை உள்ளடக்கிய தூதுக்குழுவொன்று கொழும்பிலிருந்து கலந்துகொண்டது. மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரானது, 2021 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தின்படி, … Read more

கொக்குவில் மாணவனுக்கு வெகுஜன ஊடக அமைச்சர் நல் வாழ்த்து

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மற்றும் சித்தி எய்தாத மாணவர்கள் என்ற ரீதியில் ஊடகத்தின் மூலம் விரிவை ஏற்படுத்த வேண்டாம் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கேட்டுக்கொண்டார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்ததுடன் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள்  … Read more