மூடப்பட்டுள்ள அனைத்து உள்நாட்டுத் தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

மூடப்பட்டுள்ள அனைத்து உள்நாட்டுத் தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். எம்பிலிப்பிட்டிய கடதாசித் தொழிற்சாலை 9 வருடங்களின் பின்னர் மீண்டும் திறப்பு. மூடப்பட்டிருந்த எம்பிலிப்பிட்டிய கடதாசி தொழிற்சாலை ஒன்பது வருடங்களின் பின்னர் இன்று (14) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார். இதன் மூலம் வருடத்திற்கு 75 ஆயிரம் மெட்ரிக் தொன் கடதாசியை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. உள்நாட்டு முதலீட்டாளர் ஒருவருடன் உடன்படிக்கை செய்து இந்தத் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்கக் … Read more

மலையகத்தின் சில பகுதிகளில் மகளிர் தின நிகழ்வுகள்

சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பித்து கொண்டாடும் முகமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் மலையகத்தில் மகளிர் தின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.  தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் மலையாக பிரதேசங்களான நோர்வூட், கொட்டக்கலை, தலவாக்கலை, நுவரெலியா மற்றும் புசல்லாவை ஆகிய பகுதிகளில் இம் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

பல்வேறு துறைகளில் நேரடி முதலீட்டிற்காக சவுதி அரசுக்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு…

பல்வேறு துறைகளில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சவுதி அரசுக்கு அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள், அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் ஸஊத் (Faisal bin Farhan Al Saud) அவர்களிடம் தெரிவித்தார். சவுதி அரேபியாவின் வெளிநாட்டு அமைச்சருடன்  இன்று, (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். விவசாயம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி, தொழிநுட்ப மேம்பாடு மற்றும் துறைமுக நகர் சார்ந்த … Read more

யாழ் மாவட்டத்தில் ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாம்

இந்திய அரசின் நிதியுதவியுடன், யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ‘ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாம்’ யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம் தொடக்கம் (13 ஆம் திகதி) எதிர்வரும் 30 ஆம் திகதி வரை, யாழ் மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. வலுவிழந்தோருக்கு சேவை செய்யும் பகவான் மகா வீரர் சஹயட சமித்தி ( Bhagwan Mahaveer Viklang Sahayata Samiti ) தொண்டு நிறுவனமும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு … Read more

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொது பட்டமளிப்பு விழாவின் 2 ஆம் நாள் நிகழ்வு நேற்றைய தினம் (13) நடைபெற்றது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா கேட்போர் கூடத்தில் நேற்றைய (14) தினம்  காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி மூன்று அமர்வுகளாக இடம்பெற்றன. கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம்  அவர்களது ஒருங்கிணைப்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தின்  வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றின் பட்டமளிப்பின் போது இம்முறையே ஒரேதடவையில் … Read more

சவூதி அரேபியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா அல் சௌத் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்ததுடன், அதனைத் தொடர்ந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மார்ச் 14ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். சவூதி அரேபிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரை வரவேற்ற அமைச்சர் பீரிஸ், இலங்கை – சவூதி அரேபிய … Read more

கடலுக்குப் பொறுப்பான பிரதான நிறுவனமென்ற வகையில் சட்டத்தை விரைவாகத் திருத்தி சட்டரீதியான  பலத்தை அதிகரிக்கவும்

நாட்டின் கடல்சார் சூழலை பாதுகாக்கும் பிரதான பொறுப்பை கொண்டுள்ள கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டரீதியான அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் 2008 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் மறுசீரமைப்பை விரைவு படுத்துமாறு அண்மையில் இடம்பெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுக் கூட்டத்தின் போது அதன் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் குறிப்பிட்டார். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிகார சபையின் அலுவலர்கள் தெரிவித்ததுடன் இந்த சட்டத் திருத்தம் … Read more

இலங்கையில் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 78.83 வீதமாக அதிகரிப்பு

கடந்த சனிக்கிழமை வரையில் இலங்கையின் சனத்தொகையில் 78.7 வீதமானவர்களுக்கு முதலாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 4 ஆம் திகதி தரவுகளின்படி மொத்த சனத்தொகையில் 64.04 வீதமானவர்களுக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஒரு கோடியே 69 இலட்சத்து 21 ஆயிரத்து 171 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது . இரண்டாவது டோஸ் ஒரு கோடியே 42 இலச்சத்து 5 … Read more