எதிர்கால தலைமுறையை அழிக்கும் வகையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

எதிர்கால தலைமுறையை அழிக்கும் வகையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். நினைவு பலகையை திறந்து வைத்து நாரம்மல் பிரதேச சபையின் புதிய கட்டிடத்தை இன்று (05) முற்பகல் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். கௌரவ பிரதமர் இதன்போது நாரம்மல பிரதேச சபையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தையும்  narammalaps.dolgnwp.lk  வெளியிட்டு வைத்தார். நாரம்மல பிரதேச சபைக்குட்பட்ட மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கும் நோக்கில் 133 … Read more

மாத்தறை தங்கத் தீவுக்கு புதிய பாலம்…

மாத்தறை கடற்கரைப் பூங்காவை ஒட்டியுள்ள தங்கத் தீவுக்குச் செல்வதற்கு (புறாத் தீவு) புதிய பாலம் ஒன்றை நிர்மாணிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று முன்தினம் (04) பிற்பகல் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர். பேமசிறி அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தங்கத் தீவுக்குப் பிரவேசிப்பதற்கான பாலம் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் இருந்தது. நேற்று, காலை பாலம் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக அந்த தீவுக்குச் செல்ல முடியாதுள்ளதாக சங்கைக்குரிய ஓமாரே கஸ்ஸப தேரர் ஜனாதிபதி அவர்களுக்கு அறிவித்துள்ளார். சியம் … Read more

துறைமுக நகரத்தில் பணமோசடிகளுக்கு இடமில்லை : துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு.

கொழும்பு துறைமுக நகரத்தில் பணமோசடிக்கு எவ்வித இடமுமில்லை எனவும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை அமுல்படுத்த முடிமெனவும் துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகமும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளருமான கலாநிதி பிரியத் பந்து விக்கிரம அவர்கள் தெரிவித்தார். ‘துறைமுக நகரமும் எதிர்கால பொருளாதாரமும்’ என்ற தொனிப்பொருளில் நேற்று (04) ஜனாதிபதி ஊடக மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். கலாநிதி பிரியத் பந்து விக்கிரம மற்றும் … Read more

கடனை செலுத்துவதற்கான அனைத்து மாற்று வழிகளும் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன

இலங்கை பெற்றுள்ள கடனை செலுத்துவதற்கான அனைத்து மாற்று வழிகளும் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் ,இலங்கைக்கு இன்னமும் கடன் செலுத்துவதற்கான வல்லமை காணப்படுவதாகவும் கூறினார். தமது தீர்மானங்களையும் கொள்கையையும் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதிக்கும் நிதியமைச்சருக்கும் அவற்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய வங்கி என்ற அடிப்படையில் அதன் நிலைப்பாட்டையும் நாட்டிற்குச் செய்ய வேண்டிய விடயங்களையும் அரசியல் பேதம் இன்றி தெளிவுபடுத்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார். பணிப்புரை வழங்குவது மத்திய வங்கியின் பொறுப்பாகும். … Read more

கண்டி-தெமோதர சுற்றுலா ரெயில் சேவை இன்று ஆரம்பம்

கண்டி – தெமோதர சுற்றுலா ரெயில் சேவை இன்று (05) முதல் ஆரம்பமாகும். கண்டியில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்படும் இந்த ரெயில் பிற்பகல் 2.45ற்கு தெமோதரரையை சென்றடையும். பேராதனைச் சந்தி, கெலி-ஓயா, நாவலப்பிட்டி, ஹட்டன், கிரேப் வெஸ்டன், நானு-ஓயா, பட்டிபொல, ஒஹிய, இந்தல்கஸ்ஹின்ன, ஹப்புத்தளை, எல்ல மற்றும் தெமோதர ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நிறுத்தப்படும். அதேபோல் கொஸ்டல் நீர்வீழ்ச்சி, சிவனொளிபாதமலை, சென் கிளயார் நீர்விழ்ச்சி, எல்ஜின் நீர்வீழ்ச்சி, ஒன்பது வளைவுப்பாலம் ஆகிய சுற்றுலா … Read more

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் சாதனமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது – மனித உரிமைகள் ஆணையாளர்

மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதை இனங்கண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி மிச்சல் பச்லட் தெரிவித்துள்ளார். இவ்வாறான நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் கூடுதலாக ஈடுபடுவதை அண்மைக்காலத்தில் காணமுடிந்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான விவாதத்தின்போது அவர் நேற்று இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் உரிமைகளை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலமை தொடர்பில் விரைவில் தீர்மானிக்குமாறும் குற்றவாளிகளை … Read more

பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கான ஆலோசனை

உக்ரைனில் நிலவுகின்ற சமீபத்திய நிலைமையின் அபிவிருத்தியின் பின்னணியில், பெலாரஸுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் ஒருங்கிணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பெலாரஸின் நிலைமையை தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது. ஏறக்குறைய 1,561 இலங்கை மாணவர்கள் தமது உயர் கல்வியில் ஈடுபடுகின்ற பெலாரஸில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுடனும் தூதரகம் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகின்றது. சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தினர், மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோருடன் தூதரகத்தால் நடாத்தப்பட்ட சந்திப்புகளில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, இலங்கைக்கு தற்காலிகமாக … Read more

இலங்கையும் உலக வங்கியும் மீனவத் துறைக்கான நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பாதையை ஆராய்கின்றன

கொழும்பு, 2022 மார்ச் 3 ஆம் திகதி, – இலங்கையின் கடல்சார் மீனவத்துறை, கரையோர நீர்வாழ் உயிரின வளங்கள் மற்றும் அவற்றை ஆதரிக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளை நிலையான முறையில் நிர்வகிப்பதற்கான முன்னுரிமைகள் என்ற தலைப்பிலான அறிக்கையின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் உயர்மட்ட கொள்கைக் கலந்துரையாடலைக் கூட்டின. இலங்கையில் வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு மீன்வளம் கணிசமான பங்களிப்பை வழங்குகிறது. இலங்கையர்கள் மீன்களிலிருந்து 50 சதவீத விலங்குப் புரதத்தைப் பெறுகிறார்கள், … Read more

இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கை நிலையினை மேலும் இறுக்கமடையச் செய்கின்றது

வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைக்கான தொடர்ச்சியான இடையூறுகளையும் பரிசீலனையிற்கொண்டு, அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீது தாக்கத்தைக் கொண்டுள்ள ஏனைய முயற்சிகளுடன் இணைத்து மரபுசார்ந்த மற்றும் மரபுசாராத வழிமுறைகள் இரண்டையும் உள்ளடக்குகின்ற அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த திட்டமொன்று அத்தியாவசியமானது என நாணயச் சபை அபிப்பிராயப்பட்டது. அதற்கமைய, உலகளாவிய மற்றும் உள்நாட்டு ரீதியாகவும் தற்போதுள்ள மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டபொருளாதார அபிவிருத்திகளை கவனமாக பரிசீலனையிற்கொண்டதன் பின்னர், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 மாச்சு … Read more