2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முழுமையான பெறுபேறுகள்

2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களின் பெறுபேறுகள் உட்பட முழுமையான பெறுபேறுளும் வெளியிடப்பட்டுள்ளன. 2021 செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட பெறுபேறுகளுடன், அப்போது வெளியிடப்படாத செயன்முறைப் பரீட்சைகள் உட்பட அழகியல் பாடங்களின் பெறுபேறுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அல்லது http://www.results.exams.gov.lk/ என்ற இணையத்தளத்தினூடாகவோ பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். ஏம. டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் முதல் இரண்டு நாட்களில் 7,000 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை

ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என்ற அச்சம் இருந்த போதிலும் மாதத்தின் முதல் இரண்டு தினங்களில் சுமார் 7,000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சினால் நேற்று (03) வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நாட்டிற்கு மார்ச் மாதம் 1 ஆம் திகதி 2,902 சுற்றுலாப் பயணிகளும், 2 ஆம் திகதி 3,994 சுற்றுலாப் பயணிகளுமாக 6,896 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.இது தொற்று நோய்க்கு பின்னரான சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகின்றது. இவர்களில் … Read more

அமைச்சுகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்திற்கிணங்க சி.பி. ரத்நாயக்க வனவளப் பாதுகாப்பு அமைச்சராகவும் திலும் அமுனுகம போக்குவரத்து அமைச்சராகவும் பதவிப்பிரமாணம்

அமைச்சுகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்திற்கிணங்க, இரண்டு அமைச்சரவை அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில், இன்று (04) பகல்,  ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். தனது பதவியை இராஜினாமா செய்த அருந்திக பெர்னாண்டோ அவர்கள், மீண்டும் இராஜாங்க அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். திரு. சி.பி. ரத்நாயக்க                          – வனவிலங்கு மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் திரு. திலும் அமுனுகம                        – போக்குவரத்து அமைச்சர் திரு. விமலவீர திஸாநாயக்க              – … Read more

நெல் சந்தைப்படுத்தல் சபையை ஜனாதிபதி பார்வையிட்டார்…

நெல் கையிருப்பை பிணையாக வைத்து, நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார். போட்டித் தன்மையுடன் நெல்லைக் கொள்வனவு செய்து, அரசாங்கத்திடம் போதியளவு நெல் கையிருப்பைப் பேணுவதை இலக்காகக் கொண்டு, இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். கொழும்பு 02, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தையில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைமை … Read more

கொழும்பில் நாளை 14 மணித்தியாள நீர் விநியோக தடை

கொழும்பு 07, 08, 10, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை (05) காலை 08 மணி முதல் 14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொழும்பு 02, 03 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்திலேயே நீர் விநியோகம் இடம்பெறும் என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களில் மேலும் தளர்வு

தற்போது நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களில் மேலும் தளர்வு தொடர்பு குறித்து அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்றாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் முறை தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், வீடுகளில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 150இ000 பேர் தற்போது குணமடைந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மார்ச் 4ஆம் 5 ஆம் திகளில் Western Breeze களியாட்ட நிகழ்வு

மேல்மாகாண சுற்றுலா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Western Breeze களியாட்ட நிகழ்வு, மார்ச் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் கொழும்பு கடலோரப் பாதை (Marine Drive) கொள்ளுப்பிட்டி பகுதியில் நடைபெறவுள்ளது. மார்ச் 4, 5 ஆகிய திகதிகளில் மாலை 5.00 மணி முதல் நள்ளிரவு வரை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்கேற்புடன் மார்ச் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த களியாட்ட … Read more

இலங்கை – இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி

சுற்றுலா இலங்கை அணிக்கும், இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் தற்போது மொஹாலி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி சற்று முன்னர் வரை 2 விக்கட் இழப்பிற்கு விக்கட் இழப்பின்றி, 139 ஓட்டங்களை பெற்றிருந்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது.. இதனைத்தொடர்ந்து இரண்டு போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. … Read more

கடற்றொழிலாளர்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று (03ஆம் திகதி) பிற்பகல்11.30 மணிக்கு வட அகலாங்கு 7.80 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83.10 E இற்கும் அருகில் திருகோணமலை கரையிலிருந்து தென்கிழக்காக220 கிலோ … Read more