இந்தியாவில்பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பிற்கான புலமைப் பரிசில்கள்

இந்தியாவில்பட்டப்படிப்புமற்றும்பட்டப்பின்படிப்பிற்கானபுலமைப்பரிசில்கள் கலாசார உறவுகளுக்கான இந்தியக் கவுன்சிலின் (ICCR) 2022-2023 கல்வி அமர்வுகளுக்கான பின்வரும் புலமைப்பரிசில்களுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் விண்ணப்பங்களை கோரியுள்ளது:  நேரு ஞாபகார்த்த புலமைப் பரிசில் திட்டம்: பொறியியல், விஞ்ஞானம், வியாபாரம், பொருளியல், வர்த்தகம், மானுடவியல் மற்றும் கலை உட்பட (மருத்துவம்/துணை மருத்துவம், ஆடை வடிவமைப்பு & சட்டத்துறை கற்கை நெறிகள் தவிர்ந்தவை) அனைத்து பட்டப்படிப்பு (Undergraduate) கற்கைநெறிகளை இந்தத் திட்டம் உள்ளடக்குகின்றது. மௌலானா ஆசாத் புலமைப் பரிசில் திட்டம்: பொறியியல், விஞ்ஞானம், பொருளியல், … Read more

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தொழில்துறை பங்காண்மைக்குள் நுழைவு

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆகியன இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பெப்ரவரி 23ம் திகதி ரத்மலானையில் உள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைமை அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டன. இரு தரப்பினருக்கும் இடையிலான எதிர்கால கட்டமைப்பு நடவடிக்கை குறித்த இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவர் நிஷாந்த ரணதுங்க … Read more

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் இரண்டு கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

ஜப்பானிய கடற் படைக்கு சொந்தமான இரண்டு போர் கப்பல்கள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. ஜப்பானிய கடற் படையின் ‘யுரகா’ மற்றும் ‘ஹிராடோ’ ஆகிய கப்பல்களே இவ்வாறு வருகை தந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்து ஜப்பானிய கடற்படை கப்பல்களுக்கு கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்பளிக்கப்பட்டதாக அது மேலும் தெரிவித்துள்ளது. கொமாண்டர் கோண்டோ கோஜியால் கட்டளையிடப்படும் 141 மீ நீளமுள்ள ‘யுரகா’ கப்பலில் 130 கடற்படை வீரர்கள் பணியாற்றுவதாகவும், … Read more

அமைச்சர் பதவிகளில் திருத்தம்…  

விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, பல அமைச்சுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. எரிசக்தி அமைச்சராக காமினி லொகுகே அவர்களும், மின்சக்தி அமைச்சராகப் பவித்ராதேவி வன்னியாரச்சி அவர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 03.03.2022  

கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க பதவிப்பிரமாணம்…

கைத்தொழில் அமைச்சராகப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில், இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும், இதன்போது இணைந்துகொண்டார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 03.03.2022  

ஈரான் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு திரு. ஹஷேம் அஷ்ஜசாதே, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (மார்ச் 03) இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் மேலும் இந்த நிகழ்வினை நினைவுகூரும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ஈரானிய தூதுவர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் … Read more

இலங்கை பத்திரிகை பேரவையின் ஊடக ஆய்வின் 4 ஆவது வெளியீடு

இலங்கை பத்திரிகை பேரவை வெளியிட்டுள்ள ஊடக ஆய்வின் 4 ஆவது வெளியீடு நேற்று இடம்பெற்றது. வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இது தொடர்பான நிகழ்வு நடைபெற்றது. “சமூக ஊடகங்களின் உயர்வு”என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. முன்னணி ஊடகவியலாளர் கலாநிதி எட்வின் ஆரியதாசவின் நினைவாக இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 71 இலட்சம் ஆகும். இதேபோன்று உலகில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4.8 பில்லியன் … Read more

மத்திய கலாசார நிதியத்தின் வரைவு விதிகள் கௌரவ பிரதமரிடம் கையளிப்பு

1980 ஆம் ஆண்டு 57 ஆம் இலக்க மத்திய கலாசார நிதியச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள வரைவு விதிகள் குழுவின் தலைவர் ஜி.எல்.டபிள்யூ.சமரசிங்க அவர்கள் உள்ளிட்ட குழு உறுப்பினர்களினால் நேற்று (02) அலரிமாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவினால் 2020 செப்டெம்பர் 16 ஆம் திகதி குறித்த … Read more

இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 26 சதவீதமாக அதிகரிப்பு

இலங்கையில் கடந்த வருடம் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி மூலம் 834 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் ஊடாக ஏற்றுமதி 26 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் தென்னையுடன் தொடர்புடைய உற்பத்திகளான தேங்காய் உள்ளீடுகள் , தென்னை நார் உற்றபத்திகள், தென்னை மட்டைகள் உற்பத்திகள் மூலம் 661 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்ததாக இலங்கை சுங்க திணைக்களத்தின் நேற்றைய தின (02) அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. உலக அளவில் உள்ளூர் … Read more

44 கோடி பேரை பாதித்த கொரோனா வைரஸ்

தற்போது உலகம் முழுவதும் 44 கோடி பேருக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது. சீனாவில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 கோடியே 6 … Read more