'டிரில்குட்றி அக்ராஸ்' வீதி பொது மக்களிடம் கையளிப்பு

அக்கரபத்தனை பசுமலை நாகசேன வீதியினை இணைக்கும் ‘டிரில்குட்றி அக்ராஸ்’ வீதியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் நேற்று (27) இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் தொலைநோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வீதி சுமார் 295 இலட்சம் ரூபா செலவில் காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.

“தேயிலை சாயம்” புகைப்பட கண்காட்சி

மலையக மண்வாசனை சொல்லும் மலையக இளைஞர், யுவதிகளின் புகைப்பட கண்காட்சி இன்று 28 ஆம் திகதி கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் நடைபெறுகின்றது. தேயிலை சாயம் எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இக்கண்காட்சியை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை பார்வையிடமுடியும் என நிகழ்வு ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. மலையகத் தமிழர்களின் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு விழுமியங்களையும், வாழ்வியலையும் பிரதிபலிக்கும் வகையிலான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் வலி சுமந்த வாழ்க்கையை எடுத்துக்காட்டும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இலங்கை கடற்படைக்கான சுழியோடல் பயிற்சிகளுக்குக்காக ஐ.என்.எஸ் நிரீக்‌ஷாக் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை

சுழியோடலுக்கான அதிநவீன வசதிகளைக்கொண்ட இந்திய கடற்படை  கப்பலான ஐ.என்.எஸ் நிரீக்‌ஷாக், இலங்கை கடற்படையினருக்கான சுழியோடல் பயிற்சிகளுக்காக (கலப்பு வாயு முறைமை) 2022 பெப்ரவரி 28 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.  2.    கடற்படைப் பாரம்பரியத்திற்கு அமைவாக இலங்கை கடற்படையினரால் இக்கப்பலுக்கு சிறந்த வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் அக்கப்பலின் தளபதி மொகமட் இக்ரம் அவர்கள் கிழக்கு கடற்படை பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் பி.டி.எஸ்.டயஸ் அவர்களை சந்தித்திருந்தார். இச்சந்திப்பின்போது, எதிர்வரும் 10 நாட்கள் இக்கப்பல் தரித்து நிற்கும் காலப்பகுதியில் … Read more

ரஷ்யாவின் ரூபள் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி

ரஷ்யா – உக்ரேன் நெருக்கடிக்கு மத்தியில் இந்த நாடுகள் இரண்டிலும் நிதி செலவினம் அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் ரூபிள் நாணயமொன்று டொலருக்கு அமைவாக 30 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. இதேபோன்று பங்கு சந்தையும் வீழ்ச்சி கண்டுள்ளது. ரஷ்ய உக்ரேன் யுத்தத்தின் ஆரம்பத்தில் எரிபொருள் விலை அதிகரித்தது. இருப்பினும் தற்பொழுது ஓரளவு குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதற்கமைவாக அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 97.22 அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது. லண்டன் ப்ரண்டி சந்தையில் இது … Read more

ரயில் சேவை ரத்து செய்யப்படவில்லை

ரயில் சேவைக்கு தேவையான டீசல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் எந்தவொரு ரயில் சேவையும் ரத்து செய்யப்படவில்லை என்று ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக விஜேசுந்தர குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிக்கக்கூடிய மாற்று முறை தொடர்பில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.   

உலகளவில் கொரோனா தொற்றினால் 43.59 கோடி பேர் பாதிப்பு

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 43.59 கோடியை கடந்துள்ளது.  சீனாவில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 கோடியே 59 இலட்சத்து 93 ஆயிரத்து 305 … Read more

உக்ரேனில் உள்ள 20 இலங்கையர்கள்

உக்ரேனில் உள்ள 20 இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக உக்ரேன் – போலந்து எல்லைக்கு அருகாமையில் வந்துள்ளனர். இவர்களை போலந்துக்கு அழைத்து வந்து இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைமேற்கொண்டுள்ளதாக துருக்கியில் உள்ள இலங்கைத் தூதுவர் எம்.ஆர்.ஹசன் தெரிவித்துள்ளார்.இலங்கையர்கள் தொடர்பில் போலந்தில் உள்ள அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இலங்கையர்கள் அனைவரையும் போலந்து ஊடாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைமுன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தூதுவர் எம்.ஆர். ஹசன் கூறினார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் மகாவலி ரண்பிம காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு…

நாட்டை ஆட்சி செய்யும் போது, பொதுமக்களின் சுதந்திரம் மற்றும் எதிர்பார்ப்புகளை உறுதி செய்யும் ஜனநாயக முறைமையிலிருந்து விலகப்போவதில்லை என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். இருப்பினும், அதனால் கிடைக்கும் சுதந்திரத்தைத் தவாறாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமென்று, அனைத்துத் தரப்பினரிடமும் ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.  “நாட்டை ஆளும் ஜனநாயக முறைமையிலிருந்து நாங்கள் விலகவில்லை…” “அதனால் கிடைத்துள்ள சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள்…”                                                                                       ஜனாதிபதி தெரிவிப்பு. “புரட்சிகர கட்சிகளெனச் சொல்லிக்கொள்வோர், மக்களை வீதிக்கு இறக்கி அரசியல் இலாபம் பெறுவதையே எந்நாளும் … Read more

உக்ரேன் – ரஷ்யா நெருக்கடி:இலங்கையின் நிலைப்பாடு

உக்ரேன் – ரஷ்யா நெருக்கடி தொடர்பில் இலங்கை நடுநிலையுடன் செயற்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ,அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை போன்ற நாட்டுக்கு ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார அல்லது வேறு தடைகளை விதிக்கும் ஆற்றல் இல்லை என்று குறிப்பிட்டார். உக்ரேனில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதலான அவதானத்துடன் அரசாங்கம் செயல்பட்டு வருதாக அவர் … Read more

இந்தோனேசியாவில் நில நடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பு இல்லை

இந்தோனேசியாவின் கரையோர வலையத்துக்கு அருகாமையில் இன்று (25) காலை நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இது 6.2 ரிக்டர் அளவை கொண்டதாக பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தின் அதிர்வு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உணரப்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.