விகடன்
“ஒரு தவறும் செய்யவில்லை; அடி மேல் அடி, நொறுங்கிப் போனேன்" – மத தாக்குதல் பற்றி ஜெமிமா ஓபன்!
ஜெமிமா ரோட்ரிக்ஸ்… இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இனி மறக்க முடியாத பெயர். நடந்து முடிந்த மகளிர் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி முதல்முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்று அரைநூற்றாண்டுக் கனவை நனவாக்கியிருக்கிறதென்றால் அதில் தவிர்க்கமுடியாத பங்களிப்பைக் கொடுத்தவர் ஜெமிமா. இந்த லீக் போட்டியில் வென்றால்தான் அரையிறுதிக்குச் செல்ல முடியும் என்ற நெருக்கடியான போட்டியில் நாட் அவுட் வீராங்கனையாக 76 ரன்கள் அடித்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் – Ind vs Aus world cup semi … Read more
ரூ.2.6 கோடிக்கு குஜராத் அதிரடி வீரரை ட்ரேட் செய்த மும்பை; கூடுதலாக LSG-யிலிருந்து ஒரு ஆல்ரவுண்டர்!
அடுத்தாண்டு ஐ.பி.எல் சீசனுக்கான மினி ஏலம் டிசம்பரில் நடக்கவிருக்கிறது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் ஏலத்தில் விடும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ம் தேதிக்குள் சமர்ப்பித்தாக வேண்டும். இவ்வாறான சூழலில்தான், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ட்ரேடிங் முறையில் ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் கொடுத்து சஞ்சு சாம்சனை வாங்கப்போவதாகத் தீவிரமாகப் பேச்சு அடிபடுகிறது. IPL (ஐ.பி.எல்) இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ அணியிலிருந்து ஒரு ஆல்ரவுண்டரையும், குஜராத் … Read more
நீதிபதி கவாய்க்கு எதிராக அமெரிக்கா வாழ் இந்துக்கள் போராட்டம் – காரணம் என்ன?
அமெரிக்காவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். கவாய் சமீபத்தில் கூறிய கருத்துக்களுக்கு எதிராக நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனை Stop Hindu Genocide என்ற அமைப்பு ஒருங்கிணைத்திருக்கிறது. நீதிபதி கவாய்க்கு எதிராக அமெரிக்கா வாழ் இந்துக்கள் போராட்டம் – காரணம் என்ன? இந்த அமைப்பு கடந்த நவம்பர் 8ம் தேதி இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு நேரடியாக ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறது. அதில், இந்திய … Read more
Ajith: ''அவரைப் பார்த்த நொடியிலேயே அது புரிந்தது!" – அஜித்தை சந்தித்த சூரி
நடிகர் சூரி தற்போது ‘மண்டாடி’ படத்தின் படப்பிடிப்பில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். கடைசியாக அவர் நடித்திருந்த ‘மாமன்’ திரைப்படமும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது சூரி, அஜித்தை நேரில் சந்தித்திருக்கிறார். நடிகர் சூரி சூரியும் அஜித்தும் இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘வேதாளம்’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படத்துக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. அஜித்தைச் சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சூரி, அவருடைய சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் … Read more
'பிச்சையா எடுக்க முடியும்.. இன்னும் பல தொழில் தொடங்குவேன்' – அண்ணாமலை பரபரப்பு விளக்கம்
கோவையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ம் தேதி கோவை வருகிறார். அப்போது 50க்கும் மேற்பட்ட விவசாய விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார். நாட்டுக்குள் தீவிரவாதம் உற்பத்தியாகக் கூடாது. அண்ணாமலை இதில் தமிழக முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும். ஒன்றிணைந்து சமூக ஒற்றுமையை பேண வேண்டும். சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து, குற்றங்கள் பெருகி … Read more
Parasakthi: ''வாழ்க்கை ஒரு வட்டம்" – யுவன் – பவதாரிணியுடனான நினைவுகளைப் பகிரும் சுதா கொங்கரா
‘பராசக்தி’ திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் ரிலீஸாக திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா ஆகியோர் படத்தில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இத்திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘அடி அலையே’ பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல கவனம் பெற்றிருந்தது. SK Parasakthi இத்திரைப்படம் ஜி.வி-யின் 100-வது ஆல்பம் என்பதால் அவருக்கும் இந்தத் திரைப்படம் கூடுதல் ஸ்பெஷல். இப்படத்தில் மற்றொரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடியிருக்கிறார். யுவனின் … Read more
“41 பேர் உயிரிழந்தாலும், அன்பு குறையவே இல்லை; மக்கள் விஜய் பக்கம்தான்'' – தவெக அருண்ராஜ் பேட்டி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், நிர்வாக நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் இருந்த த.வெ.க, இப்போது மெல்ல மெல்ல மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறது. தவெக வை அதிமுக கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி சில தந்திரங்களைச் செய்து பார்த்தார். ஆனால், நவ.5ஆம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற த.வெ.க சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்ததில் கூட்டணி பேச்சுவார்த்தை முயற்சிகள் அடிப்பட்டு போய்விட்டன. அருண்ராஜ் “கே.என்.நேரு கிட்ட, ரூல்ஸ பாலோ … Read more