Gangers Review: `புதுசு இல்ல, ஆனா பழசும் ஆகலை!' – சுந்தர்.சி – வடிவேலு ரீ-யூனியன் எப்படியிருக்கிறது?

அரசன் கோட்டையிலுள்ள ஒரு பள்ளி மாணவி காணாமல் போகிறார். அவரைத் தேடித் தரச் சொல்லி, முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு, அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் சுஜிதா (கேத்ரின் தெரசா) புகாரளிக்கிறார். அதோடு, அவ்வூரில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களைச் செய்யும் மலையரசன் (மைம் கோபி) மற்றும் அவரது தம்பி கோட்டையரசன் (அருள்தாஸ்) குறித்தும் புகாரளிக்கிறார். அதனால், அப்புகார்களை விசாரிக்க அந்த பள்ளியில் ஆசிரியராக ஒரு அண்டர்கவர் போலீஸை நியமிக்கிறது காவல்துறை. கேங்கர்ஸ் விமர்சனம் மலையரசன் சகோதரர்களின் அட்டூழியமும் அராஜகமும் பள்ளிக்குள்ளும் அதிகரிக்க, அதே பள்ளியின் பி.இ.டி மாஸ்டர் சரவணன் (சுந்தர்.சி), இவற்றுக்கு எதிராகக் … Read more

Ishan Kishan : 'இஷன் கிஷன் செய்தது மடத்தனம்..!' – ஏன் தெரியுமா?

‘ஹைதராபாத் vs மும்பை!’ சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்திருந்தது. இந்தப் போட்டியில் இஷன் கிஷன் அவுட் ஆன விதம்தான் சமூகவலைதளங்களில் இன்னமும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. Ishan Kishan ‘இஷன் கிஷன் சர்ச்சை!’ அம்பயர் அவுட்டே கொடுக்காமல் இஷன் கிஷன் தாமாகவே வெளியேறியிருந்தார். இதை ‘Spirit of the Game’ என மும்பை வீரர்களே பாராட்டியிருந்தனர். ஆனால், உண்மையில் இஷன் கிஷன் செய்தது மடத்தனமே. ஏன் தெரியுமா? தீபக் சஹார் … Read more

jyotika: “எடை குறைப்புதான் எதிர்காலத்துக்கான சாவி" – Weight Loss பயணம் குறித்து மனம் திறந்த ஜோதிகா

வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. ரஜினி, கமல், விஜய், அஜித் எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார். இடையில் நடிப்புக்கு நீண்ட இடைவெளி விட்டிருந்தவர், தற்போது தொடர்ந்து நடித்து வருகிறார். இதற்கிடையில், நடிகை ஜோதிகா உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகியது. அதற்குப் பிறகு உடல் எடைக் குறைந்து காணப்பட்டார். jyotika அது தொடர்பாகப் பேசிய அவர், “3 மாதங்களில் 9 கிலோ எடையைக் குறைத்ததற்கும், … Read more

Mayonnaise: `மையோனைஸை விற்க, வாங்க, சேமித்து வைக்க தடை…' – தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் வெளிநாட்டு உணவுகள் மிகவும் விரும்பப்படுகிறது. குறிப்பாக தந்தூரி, பார்பிகியூ, சவர்மா எனப் பல்வேறு அரேபிய உணவுகளுக்கான கடைகள் வீதிகள்தோறும் இருக்கிறது. இந்த உணவு வகைகளுக்கு முக்கியமான ஸைடிஸ்களில் ஒன்று மையோனைஸ். சமைக்கப்படாத முட்டை, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் சில மசாலா பொருட்கள் கலந்து செய்யப்படும் உணவு மையோனைஸ். அதில் பச்சை முட்டை பயன்படுத்துவதால், கிருமி தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. Mayonnaise இந்த நிலையில், முறையற்ற வகையில் … Read more

உங்கள் வீட்டின் முன்பக்க லுக் சூப்பராக இருக்க வேண்டுமா?! – இதைச் செய்யுங்கள்!

வீட்டிற்குள் இவ்வளவு அறைகள், இன்டீரியர் டெக்கரேஷன், அழகழகான மின்விளக்குகள் என எவ்வளவு பார்த்து பார்த்து செய்தாலும், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நமது வீட்டின் அழகை பறைசாற்றுவது எலிவேஷன் தான். அதை பற்றிய டிரிக்ஸ் அன்ட் டிப்ஸ்களை பகிர்ந்துகொள்கிறார் ரியல் எஸ்டேட் ஆலோசகர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி. சென்னையைச் சேர்ந்த பில்டர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி கட்டடத்தின் முன்பக்கம் கட்டடத்தின் வெளித்தோற்றம் என்பது முழுக்க முழுக்க அழகுப்படுத்துதலுக்கானது ஆகும். உங்களுக்கு பிடித்த மாதிரி மற்றும் உங்களது ரசனைக்கேற்ப இந்த … Read more

Significance of Sivapuranam | சிவபுராணம் எப்போதெல்லாம் வீட்டில் பாட வேண்டும்?| Mylai Karpaga Lakshmi

சிவபுராணத்துக்கு முழுமையாக விளக்கம் சொன்னவர் இன்றுவரை பிறக்கவே இல்லை என்பது ஆன்றோர் கருத்து. சிவனடியார்களுக்கு அடிப்படை வேதங்களாகத் திகழ்வன பன்னிரு திருமுறைகள். அவற்றில் 8-ம் திருமுறையான திருவாசகம், மாணிக்கவாசகப் பெருமானால் சொல்லப்பட்டு, ஈசனால் எழுதப்பட்ட பெருமை உடையது. 51 பதிகங்களையும் 658 வரிகளையும் கொண்டது திருவாசகம். சகலமும் ஈசனுள் ஒடுங்கும் ஊழிக்காலத்தில் ஈசன் மகிழ, கேட்டு ரசிக்க உருவானதே திருவாசகம். ஈசனை வேண்டுவது, அருளைப் பெறுவது, அவரோடு கலப்பது என்ற முழுமையான நிலைகளைக் கொண்ட துதிப் பாடல்களின் … Read more

SRH vs MI : 'ரோஹித்தின் கம்பேக்கும் மும்பையின் எழுச்சியும்!' – ஓர் அலசல்

‘மும்பையின் கம்பேக்!’ சன்ரைசர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. தொடர்ச்சியாக அந்த அணி பெறும் நான்காவது வெற்றி இது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி முன்னேறியிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணி சீசனின் தொடக்கத்தில் கடுமையாகத் தடுமாறிக் கொண்டிருந்தது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலெல்லாம் இருந்தது. அப்படியிருந்த அணி இப்போது மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருப்பதற்கு ரோஹித் சர்மாவின் பார்மும் முக்கிய காரணம். Rohit Sharma … Read more

Pahalgam Attack: தீவிரவாத தாக்குதலின் எதிரொலி; பாகிஸ்தான்மீது மத்திய அரசு எடுத்த 5 அதிரடி முடிவுகள்

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று (ஏப்ரல் 22) கொடூரமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், இந்திய கடற்படை அதிகாரி என 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவோடு இரவாக ஸ்ரீநகருக்கு விரைந்த முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் மூத்த அதிகாரிகளுடன் தீவிரவாதத் தாக்குதல் பற்றி ஆலோசனை நடத்தினார். Pahalgam Attack மறுபக்கம், பிரதமர் மோடியும் … Read more