Travel contest : இயற்கையை விரும்புபவர்களுக்கு செம ட்ரீட்… பொள்ளாச்சி ‘டாப்சிலிப்’ போலாமா?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் பொள்ளாச்சிக்கு அருகே உள்ள மிக அருமையான இடம் டாப்சிலிப். வேட்டைக்காரன் புதூரை தாண்டி சென்றால், வனத்துறையின் சோதனை சாவடி உண்டு. அங்கு நமது வாகனத்தை முழுமையாக சோதனை செய்த பிறகே, மேலே செல்ல அனுமதிப்பார்கள். மதுபானம், பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் போன்ற … Read more

Dhanush: பாங்காக்கில் ஆக்‌ஷன்; அசத்தலான டூயட் ஷூட், 'இட்லி கடை'க்கு அடுத்து தனுஷை இயக்கும் இயக்குநர்

வியக்க வைக்கிறது தனுஷின் உழைப்பும், லைன் அப்களும். ஹீரோ, பாடலாசிரியர், இயக்குநர் என பல தளங்களில் இயக்கி வரும் அவர், நடிப்பு ஒரு பக்கம், இயக்கம் ஒரு பக்கம் என ஓடி ஓடி உழைத்து வருகிறார். இந்தியில் ‘தேரே இஷ்க் மெய்க்’, தமிழில் ‘இட்லி கடை’, பான் இண்டியா படமாக ‘குபேரா’ என கைவசம் வைத்துள்ளார். ‘தேரே இஷ்க் மெய்ன்’ ‘இட்லி கடை’யின் படப்பிடிப்புக்கு இடையே சின்னதொரு பிரேக் கிடைக்கவே இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே … Read more

LSG vs DC: "அதிரடி வேண்டும் என்பதால் மில்லரை இறக்கினோம்; ஆனால்…" – தோல்வி குறித்து ரிஷப் பண்ட்

ஐ.பி.எல் தொடரின் நேற்றை (ஏப்ரல் 23) போட்டியில் லக்னோ – டெல்லி அணிகள் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி லக்னோ அணியை வீழ்த்தியது. DC vs LSG – அக்சர் படேல், ரிஷப் பண்ட் இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.   “யார் இந்த (லக்னோவில் உள்ள ஏக்னா மைதானம்) ஆடுகளத்தில் முதலில் பந்து வீசுகிறார்களோ அவர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கின்றன. எங்களால் போதிய அளவு ரன்கள் … Read more

Doctor Vikatan: கரும்பு ஜூஸ் குடித்தால் ஜலதோஷம் பிடிக்குமா.. நீரிழிவு உள்ளோர் குடிக்கலாமா?

Doctor Vikatan:  கரும்பு ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சியைத் தருமா, எல்லோரும் குடிக்கலாமா, இதைக் குடித்தால் சளி பிடித்துக்கொள்ளுமா?, நீரிழிவு உள்ளவர்களும், சைனஸ் பிரச்னை உள்ளவர்களும் எடுத்துக்கொள்ளலாமா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் கரும்புச்சாற்றுக்கு ஏராளமான மருத்துவப் பலன்கள் உள்ளன. ‘செங்கரும்பதனச் சாறு தீர்த்திடும் பித்தமெல்லாம்…’ என்ற பாடல் வரியே கரும்புச்சாற்றின் மகிமைக்குச் சான்று.  கரும்புச்சாறு உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். பித்தத்தையும் குறைக்கக்கூடியது. செரிமானத்தைச் சீராக்குவதிலும் கரும்புச்சாறு பெரிய அளவில் உதவும். செரிமானத்துக்குத் தேவையான … Read more

Sachein: “சச்சின் படத்தோட வாய்ப்பு எனக்கு லக்ல கிடைச்சது!'' – வைரல் ராஷ்மி பேட்டி

‘சச்சின்’ ரீ ரிலீஸிலும் ரசிகர்களின் ஹார்டின்ஸை அள்ளியிருக்கிறது. கூடவே நாஸ்டால்ஜியா நினைவுகளையும் மீண்டும் நம் கண் முன் நிறுத்தியிருக்கிறது. இந்த ரீ ரிலீஸில் மூலம் தற்போது ஒருவர் வைரலாகிக் கொண்டிருக்கிறார். ஆம், ஷாலினி கதாபாத்திரத்தின் தோழியாக வருவாரே ஸ்மிருதி, அவருடைய கேரக்டரின் காட்சிகளைதான் இப்போது கட் செய்து வைரலாக்கிக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். Sachein Re – Release படத்தில் ஷாலினியின் துனையாக ஸ்மிருதி, அவருடைய முடிவுகளுக்கு வழிகாட்டுவார். ஸ்மிருதியின் உண்மையான பெயர் ராஷ்மி. தற்போது அவர் வியாட்நாமில் … Read more

LSG vs DC: லக்னோவிடம் பழைய கணக்கைத் தீர்த்த KL ராகுல்! பண்ட் எந்த இடத்தில் மேட்சை விட்டார்?

நடப்பு ஐ.பி.எல் சீசனில் தனது முதல் ஆட்டத்திலேயே டெல்லியிடம் நூலிழையில் தவறவிட்ட வெற்றியை, தனது சொந்த மைதானத்தில் மீட்டெடுக்க வேண்டும் என்ற முனைப்பில் நேற்று (ஏப்ரல் 22) அக்சர் அண்ட் கோ-வை எதிர்கொண்டது பண்ட் அண்ட் கோ. டாஸ் வென்ற அக்சர் பெரிதாக எதையும் யோசிக்காமல் சிம்பிளாக பவுலிங்கைத் தேர்வு செய்தார். ரிஷப் – பண்ட் அக்சரின் அசத்தல் பிளான்… சுதாரித்துக் கொண்ட மார்க்ரம் – மார்ஷ்! லக்னோ பேட்டிங் என்றாலே நிக்கோலஸ் பூரான், மிட்செல் மார்ஷ் … Read more

Pahalgam Attack: J&K-ல் சுற்றுலாவாசிகள்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; வலுக்கும் கண்டனங்கள்!

ஜம்மு காஷ்மீரின், பஹல்காமிலுள்ள (Pahalgam) சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 20-க்கும் மேற்பட்டோர் இந்த துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகளின் இத்தகைய கொடூர சம்பவத்தையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியிலிருந்து உடனடியாக ஸ்ரீநகருக்கு விமானத்தில் சென்று முதல்வர் உமர் அப்துல்லா உட்பட உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மறுபக்கம், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர், … Read more

Yuvraj Singh: "என் தந்தையைப் போல பயிற்சியாளராக அல்லாமல் என் மகனுக்கு தந்தையாக இருப்பேன்" – யுவராஜ்

இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங், தனது தந்தையின் வளர்ப்பு, அவருடனான தனது உறவுமுறை, அவரின் கண்காணிப்பில் தான் மேற்கொண்ட தீவிர கிரிக்கெட் பயிற்சிகள், அந்த அனுபவங்களால் தன் மகன் ஓரியனை (Orion) வளர்ப்பதில் தனது அணுகுமுறையை வடிவமைத்தது குறித்து, சமீபத்திய ஊடக நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அந்த நேர்காணலில், “என் தந்தை யோகராஜ், சில சமயங்களில் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டதுண்டு. ஆனால், என் தந்தை எனக்கென அவர் கற்பனை … Read more

Pahalgam Attack: "தீவிரவாதி சொன்ன அந்த வார்த்தை" – கண்முன் கணவரை இழந்த மனைவி கண்ணீர்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் குதிரை சவாரி செய்து பைசரன் மலை உச்சி வரை சென்று அங்கிருக்கும் ரிசார்ட்டில் தங்கி வருவது பிரபலமான சுற்றுலா பயணமாக இருந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் அங்கு இருக்கும் இந்தக் குதிரை சவாரிப் பயணத்தை மேற்கொள்வது நாள்தோறும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான். ஆனால், இன்று அந்த பைசரன் மலை உச்சியில் அமைந்துள்ள ரிசார்ட் அருகே திடீரென தீவரவாதிகள் துப்பாக்குச் சூடு நடத்தியிருக்கின்றனர். தீவிரவாதிகளின் இந்தத் தீடீர் துப்பாக்கிச் சூட்டில் 27 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், … Read more