“திமுக-வுக்கு ED போல, முஸ்லிம் அமைப்புகளுக்கு NIA!" – ரெய்டு குறித்து நெல்லை முபாரக்

தஞ்சாவூரில் கடந்த 2019-ம் ஆண்டு பா.ம.க முன்னாள் நகரச் செயலாளர் திருப்புவனம் ராமலிங்கம் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு பின்னணியில் மதமாற்றம்ரீதியான பல்வேறு சர்ச்சைகள் இருப்பதாகவும், இந்தக் கொலையில் எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதாகவும் என்.ஐ.ஏ சந்தேகிக்கிறது. அதனால், இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. இந்த நிலையில், திருச்சி, தஞ்சாவூர், நெல்லை உட்பட 9 மாவட்டங்களில், சுமார் 24 இடங்களில் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். என்.ஐ.ஏ இந்த வழக்கு … Read more

Sai Sudharshan: "கோலி என் இன்ஸ்பிரேஷன்; தோனி என்னிடம் அடிக்கடி சொல்லும் ஒன்று…"- சாய் சுதர்ஷன்

இந்திய கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் வீரர்களில் ஒருவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்ஷன். சமீபமாக அத்தனை ஃபார்மேட்டிலுமே சிறப்பாக ஆடி வருகிறார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக்கோப்பைத் தொடரில் இந்தியா ஏ அணிக்காக விளையாடி வருகிறார். இதில் நேபாள அணிக்கு எதிராக அரை சதமும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதமும் விளாசி அசத்தியிருக்கிறார். இந்நிலையில் சாய் சுதர்ஷன் பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக மகேந்திர சிங் தோனி குறித்தும் மற்றும் விராட் கோலி … Read more

2.5 டன் தக்காளி; சினிமா பாணியில் டெம்போவுடன் ஹை-ஜாக் செய்த `வேலூர்' தம்பதி! – பெங்களூரு `பகீர்'

இந்தியா முழுவதும் காய்கறிகளின் விலை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹரியூரைச் சேர்ந்த விவசாயி மல்லேஷ், தனது நிலத்தில் விளைந்த 2 டன் தக்காளியை ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, கோலார் தக்காளி மார்க்கெட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சரக்கு வாகனத்தை திடீரென வழிமறித்து கார் ஒன்று நின்றது. தக்காளி அதிலிருந்து மூன்று பேர் இறங்கி, சரக்கு வாகனம் தங்களின் காரை … Read more

"இந்தியாவுக்காக வெல்ல விரும்பினால் இது போன்ற சம்பவங்கள்…"- ஹர்மன்ப்ரீத் சர்ச்சை குறித்து மந்தனா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து ICC Women’s Championship தொடர் சார்பாக மூன்று ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்டன. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்திருந்தன. இதனால் 3வது ஒருநாள் போட்டி முக்கியமான இறுதிப் … Read more

ஆடிபூரம்: 2,51,001 வளையல்கள்; பிரமாண்ட சிறப்பு அலங்காரத்தில் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன்!

விழுப்பரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்று மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில். இங்கு, ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக 2,51,001 வளையல்களைக் கொண்டு பிரமாண்டமாக அலங்காரம் செய்யப்பட்ட அங்காளம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.  ஆடி அம்மன் தரிசனம் – மேல்மலையனூர்: அந்தரியே சுந்தரியே ஆபத்தில் காத்தருளும் அங்காள ஈஸ்வரியே! சிறப்பு அலங்காரத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன். மேலும், ஐந்து … Read more

இலவசக் கல்வி மற்றும் ஹாஸ்டல், உதவித்தொகை, வேலைவாய்ப்பு; அரசு ஐடிஐ-க்களில் இத்தனை சலுகைகளா?!

பள்ளிப் படிப்பை முடித்ததும் குடும்பச் சூழல், வறுமை போன்ற காரணங்களால் பலரால், குறிப்பாக பெண்களால் கல்வியைத் தொடர முடியாத நிலை இன்றளவும் உள்ளது. அத்தகைய சூழலில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பில் தொழிற்பயிற்சி நிலையங்கள் (Government ITI) மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் இயங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக பெண்கள்‌ மட்டுமே பயிலும் அரசு தொழில்துறை நிலையங்களும் உள்ளன. இவற்றில் தொழில் முறையிலான கல்வி கற்பிக்கப்பட்டு பெண்களுக்கு வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமும் உருவாக்கித் … Read more

சூப், கறி, ரசம், தட்டை… முருங்கையில் வீக் எண்டு விருந்து!

ஆடிமாதம் பிறந்துவிட்டது. கூடவே முருங்கைக்காய் சீசனும் ஆரம்பித்திருக்கிறது. முருங்கைக்கீரை, பூ, காய் என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை என்பது நாம் அறிந்ததே. சீசனில் நிறைய கிடைக்கும் முருங்கைக்காய், கீரை, பூக்களை வாங்கி, உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வார வீக் எண்டை முருங்கை ஸ்பெஷலாக்குங்கள். முருங்கைக்காய் சூப் தேவையானவை: முருங்கைக்காய் – ஒரு கப் (2 இன்ச் துண்டுகளாக நறுக்கியது) வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்) உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் சீவி நறுக்கவும்) … Read more

Doctor Vikatan: அறிகுறியே தெரியாமல் மாரடைப்பு வந்து போயிருக்க வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan: என் வயது 59. சமீபத்தில் முழு உடல் ஹெல்த் செக்கப்புக்காக போயிருந்தபோது மருத்துவர் சொன்ன தகவல் அதிர்ச்சியளித்தது. உங்களுக்கு ஏற்கெனவே மைல்டு அட்டாக் வந்திருக்கிறது என்று சொன்னார். ஹார்ட் அட்டாக் என்பது இப்படி அறிகுறியே இல்லாமல் வந்து போயிருக்க முடியுமா? இனி நான் கவனமாக இருக்க வேண்டுமா? இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் உங்களுக்கு மாரடைப்பு வந்ததாக மருத்துவர் சொன்னது … Read more

செறிவூட்டப்பட்ட அரிசிக்கு தடை கோரிய வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்களுக்கு வழங்கி சோதனை செய்யும் விரைவு திட்டத்துக்கு மத்திய அரசு 174 கோடியே 64 லட்ச ரூபாயை ஒதுக்கியுள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் திருச்சி உட்பட இந்தியா முழுவதும் 13 மாவட்டங்களைத் தேர்வு செய்து கடந்த  2018-ம் ஆண்டு மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை மத்திய அரசு வழங்கியது. இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் அரிசி வழங்கும் விதமாக, ரேஷன் கடைகளில் உள்ள பொது விநியோகத் திட்டம் வாயிலாகவும், பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டம் வாயிலாகவும் … Read more