Gold Rate: ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை; பவுனுக்கு ரூ.77,700-ஐ தாண்டியது; இன்றைய விலை என்ன?

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.85-ம், பவுனுக்கு ரூ.680-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.9,705-க்கு விற்பனை ஆகி வருகிறது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.77,640-க்கு விற்பனை ஆகி வருகிறது. தங்கம் விலையில் இது புதிய உச்சம் ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.136-க்கு விற்பனை ஆகி … Read more

Ajith Kumar: "என்னை பிரபலப்படுத்தாதீங்க; அதற்குப் பதில்" – ரசிகர்களுக்கு அஜித்தின் அறிவுரை என்ன?

நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார். நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். சமீப காலமாக அவர் பல்வேறு சர்வதேச கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் துபாய் நடைபெற்ற கார் ரேஸில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தி இருந்தார். Ajith Kumar அதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கலில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்துகொண்டிருந்தார். தற்போது ஜெர்மனியில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கலந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் … Read more

Afghanistan Earthquake: 9 பேர் பலி; 25 பேர் படுகாயம்; ஆப்கானிஸ்தானை நள்ளிரவு உலுக்கிய நிலநடுக்கம்

நேற்று ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானிற்கு அருகே இருக்கும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஜலாலாபாத்திற்கு வடகிழக்கே 27 கிமீ தொலைவில், 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 11.47 மணிக்கு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் | ஆப்கானிஸ்தான் இந்த நிலநடுக்கத்தை லட்சக்கணக்கான மக்கள் உணர்ந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டிருக்கிற நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் … Read more

ரமோன் மக்சேசே விருது: சமூக சேவைக்கான விருதைப் பெறும் NGO; Educate Girls அமைப்பின் சாதனைகள் என்னென்ன?

ஆசியாவின் மிக உயரிய குடிமைப்பணி மற்றும் சமூக சேவைக்கான விருதாகக் கருதப்படும் ரமோன் மக்சேசே விருதைப் பெறும் முதல் இந்திய NGO என்ற பெருமையைப் பெற்றுள்ளது ‘Educate Girls’ என்ற அமைப்பு. இது தொலைதூர கிராமங்களில் பள்ளி செல்லாத சிறுமிகளுக்காக சஃபீனா ஹுசைன் என்பவரால் நிறுவப்பட்டது. தற்போது 52 வயதாகும் இவர், 2007ம் ஆண்டு ராஜஸ்தானில் இந்த அமைப்பைத் தோற்றுவித்தார். Safina Husain ஹுசைன் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ … Read more

Health: பெண்கள் ஏன் கட்டாயம் எள் துவையல் சாப்பிட வேண்டும்?

’’‘இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்பது பழமொழி. எலும்பு வலிமை தேவைப்படும் அனைவருக்குமே எள்ளைப் பரிந்துரைக்கலாம். மூட்டுத் தேய்மானத்தைத் தடுப்பதற்கும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் இருப்பதற்கும், நரம்புகளின் செயல்பாடுகளைச் சீராக்குவதற்கும் உடலில் எண்ணெய்ச்சத்து அவசியம். எண்ணெய் வித்தின் தாவர வகையைச் சேர்ந்த எள், இதற்கு உதவிபுரியும். இன்று வழக்கத்திலிருக்கும் நல்லெண்ணெய்யின் அடிப்படையே எள்தான். sesame seeds இது, ஒருகாலத்தில் அஞ்சறைப் பெட்டியில் தவறாமல் இடம்பிடித்திருந்தது. இன்றோ, பலரும் உடல் உஷ்ணத்தைக் காரணம் காட்டி, அன்றாட உணவில் அதைத் … Read more

சசிகாந்த் செந்தில்: "மருத்துவமனையில் உண்ணாவிரதம் தொடர்கிறது" – காங்கிரஸ் எம்.பி வெளியிட்ட வீடியோ!

தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய எஸ்.எஸ்.ஏ கல்வி நிதியைக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் உடல்நிலை மோசமாகியிருக்கிறது. இரண்டாவது நாள் உண்ணாவிரதப் போராட்டத்தின் இடையில் இரத்த அழுத்தம் அதிகரிப்பால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் இருந்தும் போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளார். ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவு தெரிவித்த வியாசைத் தோழர் அமைப்பினர். மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 31) உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலிருந்து சென்னை … Read more

ஆனந்த விகடன் & கிங் மேக்கர் அகாடமி இணைந்து நடத்திய UPSC / TNPSC தேர்வுகளுக்கான பயிற்சி முகாம்!

IAS, IPS போன்ற அரசு வேலைகள் இங்கே பலரின் கனவு வேலையாக இருக்கிறது. ஆனால் சிலருக்கு அது வெறும் கனவாகவே இருக்கிறது. அந்தக் கனவை நினைவாக்குவதற்கு ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர் அகாடமி இணைந்து 31/08/2025 இன்று சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் அரசு குடிமையியல் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக “யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி-யில் வெல்வது எப்படி?” எனும் தலைப்பில் இலவச பயிற்சி முகாம் நடத்தியது. இந்த பயிற்சி தொடங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு ஒரு … Read more

ஜெர்மனியில் வெற்றி; அடுத்தது FIM MiniGP World Finals-தான்! அஜித் வாழ்த்திய இந்த இளம் ஹீரோ யார்?

சென்னையைச் சேர்ந்த ஜேடன் இம்மானுவேல் என்ற 13 வயது சிறுவன் FIM மினி ஜிபி மோட்டார் பைக் பந்தயத்தில் மூன்றாவது இடம் வென்றதைத் தொடர்ந்து, நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், உலக அளவிலான பந்தயத்தில் கலந்துகொள்ளப்போகும் அவரை வாழ்த்தியிருக்கிறார். சென்னையில் பிறந்த ஜேடன் பெற்றோருடன் ஜெர்மனியில் வசித்து வருகிறார். சிறு வயதிலேயே சைக்கிள் ஓட்டுவது, சைக்கிள் ரேஸில் ஈடுபாட்டுடன் இருந்த இவருக்கு மோட்டார் பைக் ரேஸிங்கை அறிமுகப்படுத்தியுள்ளார் அவரது தந்தை. Jaden Immanuel Jaden … Read more

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்; தேர்வு பின்னணி என்ன?

தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவு சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியாகும். இந்தப் பதவியின் நாற்காலியில் அமருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. 30 ஆண்டுகள் சர்வீஸ், சீனியர் டி.ஜி.பி, பணியில் எந்தவித சார்ஜிம் இருக்கக் கூடாது போன்ற அடிப்படை தகுதிகள் உள்ளன. அதோடு ஆளுங்கட்சியின் ஆசியும் பெற்றவராக இருக்க வேண்டும். தற்போது தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக சங்கர் ஜிவால் இருந்து வருகிறார். இவர் ஆகஸ்ட் 31-ம் தேதியோடு ஓய்வு பெறுவதையடுத்து அடுத்த … Read more

தேனி : கல் குவாரியில் கொலை செய்யப்பட்ட நகரச் செயலாளர்… அதிர்ச்சிகர பின்னணி

தமிழகத்தின் இயற்கை வளமான ஆறுகள் ஒருபுறம் கொள்ளை போகிறதென்றால் மறுபுறம் மலைகளைக் குடைந்து கற்களை வெட்டிக் கடத்தும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனியில் மலைகளை வெட்டும் சம்பவம் ஜரூராக நடந்து வருகிறது. தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அருகே உள்ள சங்கிலி கரடு பகுதியில், மகளிர் சுயஉதவிக் குழுவின் பெயரில் கல்குவாரி அரசின் அனுமதியுடன் செயல்பட்டு வந்தது. பெயர்தான் மகளிர் சுயஉதவிக் குழு. ஆனால் வெட்டி எடுத்ததோ ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சமின்றி அனைத்து அரசியல் … Read more