முதலீட்டாளர்களே இப்போது பங்குச்சந்தையில் 'கவனம் ப்ளீஸ்' – 3 காரணங்கள் என்ன?

தற்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்யும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும் என்றும், அதற்கான மூன்று காரணங்களையும் விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். “1. நேற்று முன்தினம் (ஜனவரி 5), NSE 26,373 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. ஆனாலும், அன்று சரிவில் தான் சந்தை முடிந்தது. நேற்று (ஜனவரி 6) சந்தை சரிவில் தான் முடிந்தது. என்ன தான், புதிய உச்சத்தைத் தொட்டாலும், அதையொட்டி வர்த்தகம் நடக்க சந்தை தடுமாறி வருகிறது. இதை சந்தையின் கன்சாலிடேஷன் … Read more

ADMK – BJP: `தேர்தலுக்குப் பிறகு அதிமுக தலைமை மாற்றம்?' – அமித் ஷா விசிட்டும் அதிமுக ஆப்சென்ட்டும்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக ஜனவரி 4-ம் தேதி தமிழ்நாடு வந்தார். புதுக்கோட்டையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் ‘பிரசாரப் பயணத்தின் நிறைவு விழா’வில் பங்கேற்றுப் பேசியதும், அதையொட்டி நடந்த சம்பவங்களும் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி குறித்த விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் சுற்று பயணமாக திருச்சி விமான நிலையம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க, கூட்டணிக் கட்சித் தலைவரான அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி … Read more

தேனி: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 74 லட்சம் மோசடி; பிஆர்ஓ மீது 3 பிரிவுகளில் வழக்கு

தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 48). இவரது மகன் சூரியநாராயணன் பிஇ படித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சாந்திக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பி.ஆர்.ஒ-வாகப் பணியாற்றிய சண்முகசுந்தரம், அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். அப்போது சண்முகசுந்தரம், தனக்கு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளைத் தெரியும் என்றும், பணம் கொடுத்தால் உங்களுடைய மகனுக்கும் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்றும் … Read more

ஜனநாயகன் சென்சார் : `மறு தணிக்கை; நிர்பந்திக்க முடியாது' – நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன?

அ.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை எனவும், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி KVN புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக நீதிபதி பி.டீ.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, சில காட்சிகளை நீக்கினால் … Read more

ஊட்டி: காயத்துடன் உயிருக்குப் போராடிய இளம் ஆண் புலி; காப்பாற்றாதது ஏன்? – வனத்துறை விளக்கம்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள போர்த்தியாடா பகுதி தனியார் தேயிலைத் தோட்டத்தில் காயத்துடன் புலி ஒன்று நடமாடி வருவதை உள்ளூர் மக்கள் கடந்த வாரம் பார்த்துள்ளனர். செல்போன்களில் பதிவு செய்து வனத்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் டிரோன் கேமிராக்கள் உதவியுடன் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். தெர்மல் டிரோன் எனப்படும் இரவில் உயிரினங்களை அடையாளம் காணும் கேமிராக்கள் மூலம் புலியின் இருப்பிடத்தை கண்டறிந்து கண்காணிக்கத் தொடங்கினர்‌. உயிரிழந்த இளம் ஆண் … Read more

CBFC : ஒரு படத்துக்கு தணிக்கை சான்றிதழ் எப்படி வழங்கப்படும்? எப்போது தாமதமாகும்? – முழு விவரம்!

தற்போது, சென்சார் சான்றிதழ் பற்றிய பேச்சுதான் தீயாய் இருந்து வருகிறது. விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகை ரிலீஸாக திரைக்கு வரும் என அறிவித்திருந்தனர். ஆனால், இப்போது வரை படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி ‘ஜனநாயகன்’ படக்குழு நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. Jana Nayagan – Vijay தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், “படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய காட்சிகள் குறித்துப் புகார் வந்துள்ளதாகவும் … Read more

60 நாடுகள், 2,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள்; ஜன.,11-ல் சென்னையில் அயலகத் தமிழர் தினவிழா!

வேலையின் நிமித்தமாகவும், வணிகத்தின் நிமித்தமாகவும் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து பல நாடுகளில் வசித்து வருகிறார்கள், தமிழர்கள். ஒவ்வோர் ஆண்டும், அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர். அயலகத் தமிழர் மாநாடு இப்படி இடம் பெயர்ந்து செல்லும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் சென்னை, வர்த்தக மையத்தில் ‘அயலகத் தமிழர் தினம்’ நடைபெற உள்ளது. தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, … Read more

“ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு: சுயமரியாதைத் தலைவர்கள் உருவாகி விட்டார்கள்" – ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளின் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. ஒருபக்கம் கூட்டணி யாருடன் என்ற விவாதம் சூடுபறக்க… இன்னொருபக்கம் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்ற குரலும் வலுவாக எழுந்திருக்கிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலிருந்து திமுக-வுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பல்வேறு கருத்துகள் உலா வந்தன. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூரின் “அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வையும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்ற கருத்து பரபரப்பைக் கிளப்பியது. மாணிக்கம் … Read more