"அவன் அடிப்பான்; அவன் அடிப்பான்; அவன் அவன் கதையை முடிப்பான்" – ரெக்கார்ட் சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ்!

“எங்க ஊர்… எங்க கிரவுண்டு… நாங்கதான் முதல்ல பேட்டிங் ஆடுவோம்!” என டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்சர் பட்டேல் தைரியமாகப் பேட்டிங்கைத் தேர்வு செய்தபோதே தெரிந்தது, இன்று அருண் ஜேட்லி மைதானத்தில் ஏதோ ஒன்று பெரிய சம்பவம் நடக்கப்போகிறது என்று. ஆனால், பதிலுக்கும் பஞ்சாப்பும் பறந்து பறந்து அடித்து அது பஞ்சாப் கிங்ஸின் வரலாற்றுச் சாதனை வெற்றியாக முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. KL Rahul ஆரம்பத்திலேயே பஞ்சாப் பந்துவீச்சைப் பதற வைத்தார் கே.எல்.ராகுல். ஆட்டத்தின் ஒரு … Read more

+2வுக்குப் பின் என்ன படிக்கலாம்? – மாணவர்களுக்கு வழிகாட்டிய விகடன்!

பிளஸ் 2 தேர்வுகள் ஒரு வழியாக முடிந்துவிட்ட நிலையில், “அடுத்து என்ன படிக்கலாம்?” என்ற மாணவர்களின் நீண்டநாள் குழப்பத்திற்கு விடை சொல்லும் பிரம்மாண்ட நிகழ்வு இன்று (25.04.2026) சென்னையில் இனிதே அரங்கேறியது. “Think – Innovate – Transform” என்ற தாரக மந்திரத்துடன், கல்வி விகடன் மற்றும் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து நடத்திய இந்த வழிகாட்டி முகாம், மாணவர்களின் உயர்கல்விப் பயணத்திற்கு ஒரு புதிய திசையைக் காட்டியுள்ளது. சென்னையிஸ் அமிர்தா … Read more

திருவள்ளூர்: ஏசி வாங்கிக் கொடுக்காததால் மனைவி எடுத்த விபரீத முடிவு? கணவரிடம் விசாரணை; என்ன நடந்தது?

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஜெயராம் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (26). திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோனிகா (25). இவர்கள் இருவரும் பூண்டியில் உள்ள ஒரு பள்ளியில் படித்தனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருவள்ளூரில் உள்ள துணிக்கடையில் ஆகாஷ் வேலை செய்து வருகிறார். மோனிகா வேலைக்கு எங்கும் செல்லவில்லை. பெண் காவலர் மர்ம மரணம் இந்த நிலையில் வெயில் காரணமாக ஆகாஷ் … Read more

"அந்தச் சிறுவனுக்கு எவ்ளோ அசை இருக்கோ அதே அளவு எனக்கும் இருக்கு" – சின்ன தமிழாவை பாராட்டிய மம்மூட்டி

இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் ‘பேட்ரியாட்’ திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அப்படத்திற்கான புரோமோஷன் நிகழ்வு ஒன்றில், கென் கருணாஸின் ‘யூத்’ படத்தில் நடித்த சின்னத் தமிழாவைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். Youth Movie இந்தக் காணொளி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘யூத்’ திரைப்படத்தின் சக்சஸ் மீட்டில் சின்னத் தமிழா, தனக்குத் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோது சந்தித்த அவமானங்கள் மற்றும் தனது தந்தை தன்னைப் பற்றித் … Read more

Hansika Motwani: "அவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை" – ஹன்சிகா ஓபன் டாக்

நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் தொழிலதிபர் சோஹைல் கதுரியா கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்துகொண்டனர். பிறகு, இந்தத் தம்பதி கடந்த மார்ச் மாதம் விவாகரத்து பெற்றனர். கருத்து வேறுபாடுகள் காரணமாக 2024-ம் ஆண்டு ஜூலை முதல் பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் விவாகரத்து பெற்றனர். Hanisika Motwani & Soheal Kathuria விவாகரத்தில் ஹன்சிகா எவ்வித ஜீவனாம்சமும் கோரவில்லை. சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், தனது விவாகரத்து மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை … Read more

Akshay Kumar: ஆன்லைன் கேமில் அக்‌ஷய் குமாரின் 13 வயது மகளிடம் நிர்வாணப் படம் கேட்ட நபர் கைது

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகள் ஆன்லைனில் துன்புறுத்தலைச் சந்தித்தாகத் தெரிவித்து இருந்தார். மும்பையில் நடந்த சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் பேசுகையில், ”எனது மகள் கண்ணுக்குத் தெரியாத நபருடன் ஆன்லைன் கேம் விளையாடியபோது எதிர்திசையில் இருந்த நபர் மெசேஜ் மூலம் உரையாடினார். அப்படி உரையாடிக்கொண்டிருக்கும் போது எங்கிருக்கிறாய், ஆணா, பெண்ணா என்று கேட்டுள்ளார். பெண் என்று எனது மகள் சொன்னவுடன் நிர்வாண புகைப்படம் … Read more

'KD: The Devil' படத்தின் டிரெயிலர் நீக்கப்பட்டது ஏன்? – KVN தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

பிரேம் இயக்கத்தில் துருவ் சார்ஜா நடித்துள்ள கன்னட படம் ‘KD: The Devil’. ‘ஜன நாயகன்’ படத்தைத் தயாரித்த KVN தயாரிப்பு நிறுவனம்தான் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. KVN தயாரிப்பு நிறுவனம் படத்தின் டிரெய்லர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியானது. ஆனால் நேற்று அப்படத்தின் டிரெய்லரை யூடியூப்பிலிருந்து நீக்கியிருந்தது KVN நிறுவனம். இந்நிலையில் யூடியூப்பிலிருந்து டிரெய்லரை நீக்கியது குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. “கவனக் குறைவே காரணம்!” – ‘ஜனநாயகன்’ பட எடிட்டரை இடைநீக்கம் செய்த படத்தொகுப்பாளர்கள் சங்கம்! … Read more

600 ஊழியர்கள், தினமும் 4000 சப்பாத்தி: சமையல்காரருக்கு ரூ.24 லட்சம் சம்பளம் கொடுக்கும் அம்பானி

தொழிலதிபர் முகேஷ் அம்பானி இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்காரராக திகழ்கிறார். அவரது வீடு மும்பையின் தென்பகுதியில் இருக்கிறது. அண்டிலியா என்ற அந்த வீடு மும்பையில் அனைவராலும் பார்க்க விரும்பும் ஒரு இடமாக இருக்கிறது. 27 மாடிகள் கொண்ட இந்த அண்டிலியா கட்டிடம் ரூ.15,000 கோடி மதிப்புடையது. இந்த கட்டிடத்தை பராமரிக்கவும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் முகேஷ் அம்பானி ஒவ்வொரு ஆண்டும் பல கோடி செலவு செய்து வருகிறார் . அதோடு ஒவ்வொரு மாதமும் 70 … Read more

''அஜித், ஷாலினிக்கு தெரியாமல் எடுத்த ஒரு காட்சியை படத்தில் வைத்திருக்கிறேன்; கண்டுபிடிங்க" – சரண்

சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அமர்க்களம்’. நேற்று (ஏப்ரல் 24) அஜித்குமார், ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4K தொழில்நுட்பத்தில் அமர்க்களம் திரைப்படம் வெளியானது. அமர்க்களம் இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் சரண் அஜித், ஷாலினியின் காதல் குறித்து பகிர்ந்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், ” அஜித், ஷாலினி லவ் பண்ண விஷயம் எனக்குத் தான் முதலில் தெரியும். என்னிடம் தான் … Read more

இந்திய ரயில்வேயில் அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கை; பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்படுமா?

இந்திய ரயில்வே நிர்வாகம் தனது ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையில் 2 சதவீதத்தைக் குறைக்க அதிரடி உத்தரவிட்டிருக்கிறது. இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள 14,80,455 பணியாளர்களில், சுமார் 29,608 பணியாளர்களைக் குறைக்க இந்திய நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. குறிப்பாக, தெற்கு ரயில்வேயில் மட்டும் வரும் 2026 ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி, 1,906 பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளன. இந்திய ரயில்வே ஒருபுறம் அதிவேக ரயில்கள், புதிய வழித்தடங்கள் மற்றும் வந்தே பாரத் போன்ற நவீன ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் பணியாளர்களின் … Read more