உ.பி: ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்? – சர்ச்சையும், பின்னணியும்!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி என்ற மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அம்மனுக்குப் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிங்கார கவுரி அம்மனுக்கு, தினமும் பூஜை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். முன்னதாக ஞானவாபி மசூதியில் உள்ள கோயிலை மறுசீரமைக்க வேண்டும் என 1991-ம் வாரணாசி … Read more

திருவண்ணாமலை: நிலப் பிரச்னை… முற்றிய வாக்குவாதம் – தம்பியைத் சுட்டுக்கொன்ற அண்ணன்!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே உள்ள கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தேசிங்கு – தேவகி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில், மூத்த மகன் ஜெகதீஷன் என்பவர் இராணுவ வீரராக பணியாற்றி வந்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு இராணுவத்திலிருந்து வெளியேறியவர், தனது கிராமத்திலேயே வசித்து வந்திருக்கிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். தேசிங்கு – தேவகி தம்பதியினரின் இரண்டாவது மகன், கோதண்டராமன். இவருக்கு திருமணம் ஆகவில்லை. திருவண்ணாமலை தொடர் கேலி, கிண்டல்… … Read more

"நான், சிவா, கனி சார்… மூணு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு!" – `டான்' பட அனுபவம் பகிரும் ஆதிரா

`டான்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக யதார்த்தமாக நடித்திருந்தார், ஆதிரா பாண்டிலட்சுமி. `நவீன கூத்துப்பட்டறை’ என்கிற பெயரில் பல நடிகர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆதிராவை ஒரு மாலைப் பொழுதில் சந்தித்து பேசினோம். “நேற்றிலிருந்து பாரமாக இருக்கு. பலர் அழுதுட்டே போன் பண்றாங்க. பசங்க பலர் மேம் அம்மாகிட்ட பேசி ரொம்ப நாளாச்சு. உங்ககிட்ட பேசிட்டு அவங்ககிட்ட பேசணும்னு இருக்கேன்னு சொன்னாங்க. உறவுங்கிறது மிகப்பெரிய கட்டமைப்பு. உறவுகளை நிச்சயம் மிஸ் பண்ணக் கூடாது. ஆதிரா சிவகார்த்திகேயனுடன் ஏற்கனவே ஒர்க் பண்ணியிருக்கேன். … Read more

லைகா, தனுஷ் – தயாரிப்பு நிறுவனங்களின் யூடியூப் சேனல்கள் முடக்கமா? – பின்னணி என்ன?

தனுஷின் ‘வொண்டர்பார்’ மற்றும் லைகாவின் யூடியூப் சேனல்கள் இன்று அதிகாலை மர்மநபர்களால் முடக்கம் செய்யப்பட்டது. ஹேக் செய்யப்பட்ட சேனல்களை மீட்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தனுஷின் தயாரிப்பு நிறுவனமான ‘வொண்டர்பார்’ இப்போது படத் தயாரிப்பில் இருந்து ஒதுங்கிவிட்டாலும், அதன் யூடியூப் சேனல் தொடர்ந்து இயங்கி வந்தது. இந்த சேனல் மற்றும் தனுஷின் சமூக வலைதளங்களை பிரபலமான டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகிறது. இன்று காலை முதல் இந்த சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தனுஷின் … Read more

விக்ரம்: 80களில் கமல் – சுஜாதாவின் ஒரு பேன் இந்தியா முயற்சி; ஒருவேளை மணிரத்னம் இயக்கியிருந்தால்?!

ஹாய்… ஹலோ நண்பர்களே… ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன். ஆம். எண்பது மற்றும் தொன்னூறுகளில் வெளியான திரைப்படங்களைப் பற்றிய `நாஸ்டால்ஜியா கொண்டாட்டத் தொடர்’ மீண்டும் ஆரம்பிக்கிறது. இது சீசன் 2. வழக்கம் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம். டென்ட் கொட்டாய் டைரீஸ் – 80s, 90s Cinemas For 2K Kids ஒட்டுமொத்த தமிழ்நாடே அடுத்த மாதம் வெளியாகவிருக்கிற விக்ரம் (2022)–க்காக விழிவைத்து காத்துக்ழ் … Read more

திருச்சி: `லஞ்சப் பணத்தில் பிளாட்டுகள், தங்க நகைகள்?' – தொழில் மைய மேலாளர்மீது வழக்கு பதிவு!

திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் மாவட்ட தொழில் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சிகள் கொடுப்பதோடு, தொழில் தொடங்குவதற்கு வங்கிகள் மூலம் கடன் உதவியும் பெற்றுத் தருகின்றனர். இந்நிலையில், ‘மாவட்ட தொழில் மையத்துக்குச் செல்லும் தொழில் முனைவோர்களிடம், தொழிற் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆயிரத்தில் தொடங்கி லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குகிறார்கள்!’ என திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதையடுத்து நேற்று மதியம் சுமார் 4 மணியளவில் திருச்சி லஞ்ச … Read more

`பிரார்த்தனை, உணவை மருந்தாக்கிடும்!' – 7 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு உணவுசேவை செய்யும் டீ கடை ராஜீவ்

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை எதிரில், தென்னக ரயில்வே தலைமையகத்தை ஒட்டி டீக்கடை நடத்திவருபவர் ராஜீவ். நோயின் வலியால் வாடும் மக்களுக்குப் பசியின் வலியில் இருந்தாவது விடுப்பு அளிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த 7 ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குக் கஞ்சியும், அவர்களைப் பார்த்துக் கொள்ளும் நபர்களுக்கு உணவும் இலவசமாக வழங்கிவருகிறார். அன்னதானம் சிறிய அளவில் தொடங்கிய இந்தப் பணியின் உன்னதத்தை அறிந்து, நண்பர்களைத் தாண்டி பலரும் ராஜீவுக்குப் பணமாகவும், பொருளாகவும் உதவிவருகின்றனர். தங்கள் … Read more

`அன்னையர் தினம் போல மனைவியர் தினம் கொண்டாட வேண்டும்!' – மத்திய இணை அமைச்சர் கோரிக்கை

மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ‘அன்னையர் தினம் கொண்டாடப்படுவதை போல, மனைவிகளுக்கு என்று ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளார். Ramdas Athawale கடந்த ஞாற்றுக்கிழமை மகாராஷ்டிராவில் உள்ள சாங்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், அன்னையர் தினம் குறித்துப் பேசினார். அதனை தொடர்ந்து பேசியவர், ‘அன்னையர் … Read more

இவர் ஆளுமை அல்ல நம்மில் ஒருவர்! – கதை சொல்லியின் ரசிகன்

ஒவ்வொரு நாளும் உலகம் நவீன மயமாகிக் கொண்டிருக்கிறது . நொடிக்கு நொடி விஞ்ஞானம் வளர்கிறது. மனிதர்கள் மெட்ரோ ரயிலை விட வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நிமிடத்துக்கு ஒருமுறையேனும் செல்போனை எடுத்துப் பார்த்துக் கொள்கிறார்கள். எல்லாவற்றிக்கும் கருவிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுவிட்டது. சில நேரங்களில் மனிதர்கள் சக மனிதர்களிடம் பேசுவதையே மறந்து விடுகின்றனர். ஒரு காலத்தில் கிராமத்தில் நாள் முழுக்க வேலை செய்துவிட்டு மாலையில் ஓரிடத்தில் கூடி அன்று நடந்ததையெல்லாம் ஆசை தீரப் பேசிக் கொள்வார்கள். நல்லதோ, கெட்டதோ அன்று அனைவரும் … Read more

கமல் – ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

★ சுமார் இருபது வருடங்களுக்கு முன் ஏவி.எம். ஸ்டூடியோவில் செட்டுக்கு வெளியே ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. அங்கு துருதுருப்பான சிறுவன் ஒருவன் பிரபல நடிகர்களைப் போல நடித்துக் காட்டிக் கொண்டிருந்தான். ★ சுற்றியிருந்தவர்கள் அவனது நடிப்பைப் பார்த்து வியந்து கொண்டிருந்தனர். அவர்களில் நானும் ஒருவன். அந்தச் சிறுவன் வேறு யாரும் அல்ல; அப்போது களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க வந்திருந்த கமலஹாசன்தான். ★ அந்த நாளிலிருந்து இன்றுவரை கமலின் வளர்ச்சியை நான் கவனித்து வருகிறேன். அது குருட்டாம்போக்கு அதிர்ஷ்ட ஜாக்பாட் அல்ல. … Read more