வேலூர் கோட்டையில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொமை… இருவருக்கு ஆயுள் தண்டனை!

வேலூர் அடுக்கம்பாறையை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண், 2020-ம் ஆண்டு வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்தார். அதே கடையில் பணிபுரிந்துவந்த தன்னைவிட 4 வயது குறைவான காட்பாடியைச் சேர்ந்த இளைஞருடன் அந்தப் பெண்ணுக்குப் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்துவந்தனர். 18.01.2020 அன்று இரவு 9.30 மணியளவில், பணியை முடித்துவிட்டு இரண்டு பேரும் வேலூர் கோட்டை பூங்காவுக்குச் சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான பகுதியில் தனிமையில் இருந்தபோது, … Read more

"ஹிந்தி எப்போதும் தேசிய மொழிதான்"- சர்ச்சை ஏற்படுத்திய அஜய் தேவ்கன் vs கிச்சா சுதீப் ட்விட்டர் மோதல்

‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்திருந்த கிச்சா சுதீப் சமீபத்தில் அவருடைய புதிய படத்திற்கான ப்ரோமோஷன் ஒன்றில் பேசிய போது “ஹிந்தி இனி ஒருபோதும் தேசிய மொழி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது பாலிவுட் வட்டாரங்களில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிர்வினையாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ட்விட் ஒன்றை பதிவு செய்திருந்தார், அதுவும் ஹிந்தியில். “எனது சகோதரரே… ஹிந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து … Read more

இன்டர்வியூவுக்குச் சென்ற இடத்தில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் – எம்.டி கைது!

சென்னை கொளத்தூர் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு (48). இவர் சென்னை மாதவரம் 200 அடி சாலையில் பெயின்ட் விநியோகம் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு தனிப்பட்ட செயலாளர் வேலைக்கு ஆள் தேவை என கணேஷ்பாபு விளம்பரம் செய்திருந்தார். அதைப் பார்த்த கலா (பெயர் மாற்றம்) என்ற பெண், 22.4.2022-ம் தேதி காலை 11.30 மணியளவில் இன்டர்வியூவுக்குச் சென்றார். அவரிடம் கணேஷ்பாபு, இன்டர்வியூ நடத்தினார். அப்போது ஆபாசமாக பேசியதாகவும், ஆபாச செயலுக்கு கட்டாயப்படுத்தி ஆயிரம் … Read more

"ஹாலிவுட் படங்களைத் தமிழ்ல பார்க்கிறோம். கன்னடப் படத்தைத் தமிழ்ல பார்த்தா என்ன தப்பு?" – மணிரத்னம்

`பாகுபலி’, `கே.ஜி.எஃப்’, `புஷ்பா’, `ஆர்.ஆர்.ஆர்.’ என மாற்று மொழிப்படங்களுக்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பு கிடைப்பது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. புன்முறுவல் பூத்த முகமாக அவர் பேசியதிலிருந்து… ”மாற்று மொழிப் படங்களுக்கான வரவேற்பு என்பது புதுசா ஆரம்பிச்ச விஷயம் கிடையாது. முன்னாடி இருந்தே வந்ததுதான். இப்ப வரிசையா படங்கள் வர்றது மட்டுமில்லாமல், வட இந்தியாவிலும் வெளியாகி கவனம் பெற்றதால இப்போ இன்னும் அதிகமா பேசப்படுது. இதுக்கு முன்னாடி இங்கிருந்து ‘சந்திரலேகா’ என்று ஒரு படம் … Read more

LIC IPO: முதலீடு செய்யப் போறிங்களா? இதையெல்லாம் கண்டிப்பா கவனிங்க!

இந்தியப் பங்குச் சந்தையில் சமீப காலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொதுப் பங்கு வெளியீடு எல்.ஐ.சியின் பங்கு வெளியீடு. 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தது. நடப்பு நிதி ஆண்டு தொடக்கத்தில் எல்.ஐ.சி பங்கு விற்பனை இருக்கும் என அறிவிப்பு வெளியானது. எல்.ஐ.சி பங்கு வெளியீட்டுக்கு செபி ஒப்புதல் கிடைத்த நிலையில் மார்ச் மாதமே வெளியீடு வரும் எனக் கூறப்பட்ட நிலையில் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாகத் தாமதமானது. இது ஐபிஓ வெளியீட்டுக்கு சரியான தருணம் இல்லையென … Read more

"கவர்ச்சியான பாடல்களில் நடிப்பது ஒரு பெண்ணியவாதியாக என்னைப் பாதிப்பதில்லை!"- ரெஜினா கெஸாண்ட்ரா

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து வருபவர் ரெஜினா கெஸாண்ட்ரா. சமீபத்தில், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து இவர் நடனமாடியப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இது குறித்து பேசிய ரெஜினா, “தொடர்ந்து நிறையப் படங்களில் நடனம் ஆட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது அல்லது பாடல்களில் நடமாடுவது ஒருவகையான பிம்பத்தை உருவாக்கும் என்பதால் தற்போது அவற்றைத் தேர்வு செய்வதில்லை. கவர்ச்சியான பாடலாக இருந்தாலும் கொண்டாட்டமான பாடலாக இருந்தாலும், … Read more

மத்திய அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; இனி எம்.பி-க்கள் பரிந்துரை இல்லை; புதிய அறிவிப்பு என்ன?

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடுகளை நீக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆண்டுதோறும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை சுமார் 10 மாணவர்கள் வரை இட ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி இருந்தது. மத்திய அரசுப் பள்ளிகளில் சேர ஏராளமான கோரிக்கைகள் வருவதால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்ற பிரச்னை எழுந்தது. இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவர்களின் எண்ணிக்கையை … Read more

பூரண மதுவிலக்கு… கனிமொழி, செந்தில் பாலாஜி பேச்சும், திமுக நிலைப்பாடும்!

மாணவ, மாணவிகளுடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில், எம்.பி கனிமொழி கலந்துகொண்டார். அதில் மாணவிகளின் கேள்விகளுக்கு கனிமொழி பதிலளித்தார். அப்போது ஒரு மாணவி, “ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று சொன்னீர்கள், எப்போது மதுவிலக்கு அமலுக்கு வரும்? தந்தை, அண்ணன், தம்பியின் மதுப்பழக்கத்தினால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது” என்று கேள்வி கேட்டார். கனிமொழி எம்.பி அதற்குப் பதிலளித்த கனிமொழி, “இந்தத் தேர்தல் வாக்குறுதியில் மதுக்கடைகளை முழுவதுமாக மூடுவோம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஒரு … Read more

`வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை வேறு வழியில் மாற்றுங்கள்!' – மனு கொடுத்த புதுக்கோட்டை மக்கள்

புதுக்கோட்டை செம்பாட்டூர் ஊராட்சி நரங்கியன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அவர்கள் அளித்த மனுவில், “செம்பாட்டூர் ஊராட்சியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் குடிநீர் ஊரணி ஒன்று உள்ளது. இந்த ஊரணி எங்கள் பகுதி சுற்றுவட்டார பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு ஆதரமாக விளங்கி வருகிறது. 5-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ஊரணியைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை இந்த ஊரணி வழியாக செயல்படுத்த நிலம் … Read more

காத்துவாக்குல ரெண்டு காதல்: "கல்யாணத்துக்கு முன்னாடி செமயா ஒரு படம்"- விக்னேஷ் சிவன் பகிரும் ரகசியம்

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூவரையும் வைத்து முக்கோணக் காதல் கதை ஒன்றை வித்தியாசமான ட்ரீட்மென்ட்டில் இயக்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன். `காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற அந்தப் படம் நாளை ரிலீஸாகவுள்ள நிலையில், விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி இருவரையுமே ஒரு பேட்டியில் பிடித்தோம். இருவரும் சொன்ன ரகளையான பதில்கள் இங்கே… “காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தோட ஸ்டார்ட்டிங் ரெண்டு சீன் சொன்னார். அப்புறம் இன்டர்வெல் ப்ளாக் சொன்னாரு. விக்கியோட ரைட்டிங் மேல எனக்கு எப்போதும் … Read more